Rajinikanth Interview by North India Media in 2010
எங்கே, எப்போது என்றாலும் சூப்பர் ஸ்டாரின் பேச்சு உண்மையின் உறைவிடமாகவே திகழ்கிறது. இந்த பேட்டி அதை மீண்டும் நிருபிக்கிறது. நன்றாக கவனியுங்கள், அவரின் ஒவ்வொரு வார்த்தைகளையும்!!! அவர் எப்போதும் தன்னை தானே உயர்திகொள்வதில்லை!!
பாரதி S பிரதனுடன் இந்த பேட்டி உலகின் எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டிய நம் தலைவருடன் இனிதே ஆரம்பம்.
போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு… “நீங்கள் மும்பையில் இருந்து வருகின்றீர்களா?” என்று என்னிடம் கேட்கப்பட்டது. “ஆம்” என்றேன்.
உடனே கேட் திறக்கப்பட்டு உள்ள அழைத்துச் செல்லப்பட்டேன். ரஜினியின் தலைமை உதவியாளர் நம்மை வரவேற்கிறார். உடனே ஜில்லென்ற மோரும். சூடான பில்டர் காபியும் வருகிறது.
லதா ரஜினி நமக்கு கம்பெனி கொடுத்து நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறார். மெல்லிய காய்ச்சலிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு அவர் திரும்பிக்கொண்டிருந்தது பார்த்தவுடன் புரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் படியேறி ரஜினி எளிமையான பிரத்யேக அறைக்கு செல்கிறோம். ரஜினி வளர்க்கும் செல்ல டால்மேஷன் நந்தா நம்மை பின்தொடர்கிறது. தலைவரின் அழகான குட்டி அறையில்…. சுவற்றில் பெரிய சாய்பாபா படம்.
எவ்ளோ பெரிய வித்தியாசம் நிழலிலும் நிஜத்திலும் (தெய்விக தோற்றத்துடன்!!!) ரஜினியிடம் -. இன்னும் சொல்ல போனால் – ரஜினி தன் கைகெடிகாரத்தில் தனது குருவான ராகவேந்த்ராவை வைத்து இருக்கிறார் – அது தான் ரஜினி!!! (அது ஆக்ச்சுவலாக சச்சிதானந்த சுவாமிகள்!)
ரஜினி ஹிந்தியில் இருந்து தமிழ் திரையுலகிற்கு திரும்பவும் சென்னைக்கு வந்து எட்ட முடியாத வானளவுக்கு வளர்ந்து 15 வருடங்கள் ஆகிறது.
ரஜினி தென்னாட்டு மக்களுக்கு கடவுளாகி பல வருடங்கள் ஆகிறது – அதை நிருபிக்கும் வகையில் எந்திரன் (ரோபோ – ஹிந்தி மொழி மாற்று) படம் வெளியாகும் போது கூட, ரசிகர்கள் மாதுங்காவில் (மும்பையில் ஒரு பகுதி) தலைவரின் கட் அவுட்க்கு பாலபிஷேகம் உள்ளிட்ட எல்லாம் செய்தனர்.
இனி அதிரடி பேட்டி ஆரம்பம் (இனிதான் ஆரம்பம்!!!) [பத்திரிகையாளரை – ‘ப’ என்றும், தலைவரை ‘தலைவர் ‘ என்றும் கூறுகிறேன்]
70 களில் தமிழில் அறிமுகமாகி வெற்றிக் கொடி நாட்டிய பிறகு, ஹிந்தி சினிமாவிலும் ரஜினி தலைகாட்ட ஆரம்பித்தார். வரிசையான சில ஹிட்டுகளுக்கு பிறகு, ஒரு மிகப் பெரிய பிரேக். 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ரஜினியை ஹிந்தியில் பார்த்து. இந்த இடைப்பட்ட களத்தில் அவர் இங்கு ஒரு ‘கடவுள்’ ரேஞ்சுக்கு போய்விட்டார். அண்மையில்அவரது ரோபோ பட ரிலீசின்போது மாதுங்காவில் ரசிகர்கள் அவரது கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்தனர். என்ன ஒரு வெறித்தனமான அன்பு அவர்களுக்கு தங்கள் தலைவன் மீது - கடவுள் மீது…..
பத்திரிக்கையாளர் : எப்படி எடுத்துகிறீங்க (ரசிகர்கள் செய்யறத பத்தி)?
தலைவர்: அட, அது அவர்களின் அன்பும் பாசமும் (ரஜினி டக்கென்று அலட்டி கொள்ளாமல்).
பத்திரிக்கையாளர் : ஏன் இப்படி ரஜினி திடீரென்று மாறிவிட்டார், யாருக்கும் பேட்டி தருவதில்லை?
தலைவர்: “இல்லை, அதே ரஜினி தான்” உறுதியுடன். உடனே அவரே அதை விவரிக்கிறார், “இப்போது யாருக்கும் பேட்டி தருவதில்லை. எல்லோரும் ஒரு சிறப்பு பேட்டிய கேக்குறாங்க. நான் யாருக்காவது ஒருத்தருக்கு பேட்டி கொடுத்தேன்னா, மத்தவர்கள் வருத்தபடுவார்கள். அதுமட்டுமல்ல, மீடியா ஒரு மிக பெரிய சக்தி வாய்ந்த ஒன்று”.
‘பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில் தனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை’ சொல்லும் ரஜினி இன்று மிக பெரும் செலவில் படம் எடுக்கவும், அதற்க்கு இடான லாபத்தை சம்பாதிக்கவும் இன்று யாரும் எட்ட முடியாத அளவிற்கு சினிமாவை கொண்டு சென்றுவிட்டார்.
தலைவர்: “நான் பாடல் மற்றும் trailer வெளியிட்டு விழாவிற்கும் சென்றிருந்தேன். ஆனால் எல்லோரும் ஒரு சிறப்பு பேட்டி கேட்கிறார்கள். யாருக்கு முதலில் பேட்டி வழங்குவது?”
உண்மை. இப்படி அவருக்கு இருந்த தன்னம்பிக்கையில் அமைதியாக இருந்து விட்டார். ஆனால், அவர் தன் மீது அதித அளவிற்கு நம்பிக்கையோ, ‘நான் கடவுள் அல்லவோ இங்கு’ என்று அகந்தையும் கொள்ளவில்லை. அவருக்குள் தன்னடக்கமும், எல்லோருக்குள்ளும் இருக்கும் படத்தை தன் தனி தோளில் சுமக்கும் பயமும் இருந்திருக்கின்றது.
பத்திரிக்கையாளர் : “130 கோடிக்குமேல் எடுத்த படத்தை, ஒரே மனிதனாக தன் தோளில் சுமந்து, படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எப்படி உணறீங்க?”
தலைவர்: “இப்பதான் நிம்மதியா இருக்கு. ரொம்ப டென்ஷன், முதல் தடவை, இவ்வளவு பெரிய முதலீடு. அதுவும் ஒரு மாநில மொழி படத்தில்! இது சாதாரண விஷயம் அல்ல. கலாநிதி மாறன் அவர்களின் தைரியத்தை உண்மையில் பாராட்ட வேண்டும். எங்கள் மீது அவர் முழுநம்பிக்கையுடன் இருந்தார், yes , இவர்கள் தவறு செய்யமாட்டார்கள், அது கடமை. கடவுள் கிருபையால எல்லாம் நடந்துது”.
பத்திரிக்கையாளர் : “படத்தில் நடிக்கும் போது ஒரு ருபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையா”?
தலைவர் : ஈர்ப்பு இல்லாமல்,”ஆமாம், அவர்களிடம் படம் முடிந்த பிறகு கொடுங்கள் என்றேன். அதன் படியே, அதற்க்கு அப்புறம் தான் வாங்கினேன். எனக்கு இப்போ பணம் தேவைபடாது என்று அவர்களிடம் கூறினேன். எனக்கு தேவைப்பட்டது என்றால், நான் கண்டிப்பாக கேட்பேன். தேவை இல்லை என்றால் எதற்கு இப்பவே ? ஏற்கனவே அவ்வளவு பணம் போட்டு படம் எடுக்கும்போது. எனக்கு கலாநிதி மாறனை நன்றாக தெரியும், என்னுடைய நல்ல நண்பர்”.
பத்திரிக்கையாளர் : “நீங்கள் ஒரு ருபாய் கூட படப்பிடிப்பின்போது பொது வாங்கவில்லை, ஆனால் படத்தின் லாபத்தின் ஒரு பகுதி நீங்கள் வாங்கினீர்களா?
தலைவர்: “ஆம்”
பத்திரிக்கையாளர் : “ரஜினிகாந்த், எது உங்களை இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக்கியது?” (அழகிய சிரிப்பை பதிலாக கொடுக்கிறார்) “இது உண்மையா?”
தலைவர்: “மற்றவர்கள் எவ்ளோ சம்பளம் வாங்குகிறார்கள் என்று எனக்கு தெரியாதே”.
ரஜினியின் கஜானா இப்போது நிரம்பியிருக்கிறது. அதில் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. செல்வத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தேயிருக்கிறார். அதே சமயம், அவர் இந்த நிலையை அடைவதற்கு முன் இருந்த பழைய வாழக்கையை மறைக்கவோ மறுக்கவோ விரும்பவில்லை.
பத்திரிக்கையாளர் : “முன்பு நீங்க இந்த சினிமா துறைக்கு வரவில்லையென்றால் கடத்தல் தொழில் செய்வேன். ஏன் என்றால், எனக்கு அதிகமா பணம் தேவை என்று கூறி இருந்திர்கள்.”
தலைவர்: “கரெக்ட்! Underworld Don” என்கிறார் தைரியத்துடன், எதையும் மறைக்காது. “ஆனால், அது முடிந்து போனது விஷயம், ஏன்னா நான் இப்போ நெறைய சம்பாதிச்சிட்டேன்.”
பத்திரிக்கையாளர் : “நீங்க எப்பவும் சொல்வதுபோல், relax பண்ணும் போது, கண்ணாடி முன்னாடி…..”
தலைவர்: “Candle, mirror, music!” முடித்து கொண்டார் ரஜினி. சிறிது நேத்ரம் கழித்து அவராகவே “ஆமாம், அது கரெக்ட் தான். இப்போ கூட அப்படி தான். இரவு 9 -மணிக்கு மேல நான் யாரையும் சந்திப்பதில்லை”.
பத்திரிக்கையாளர் : “எந்திரனுக்கு நீங்க 2 வருடம் கடுமையா உழைச்சி இருக்கீங்க”
தலைவர்: “2 வருடம், 10 மாதம்” மிக சரியாக. “3வருடம் – மிக கடுமையாக”
பத்திரிக்கையாளர் : “படவெளியீட்டுக்கு பிறகு, இமய மலை சென்றிர்களா?”
தலைவர்: “எல்லா தடவையும் போய்டுவேன் – பெரும்பாலும் தனியாக”
பத்திரிக்கையாளர் : “உங்கள யாரும் சூழ்ந்துகொள்ள மாட்டார்களா?”
தலைவர்: “இல்லை, நான் கிராமங்களில் உள்ளே போய்டுவேன். அங்க இருப்பதே ஒரு தியானம் செய்ற மாதிரி தான். அந்த கங்கை, தெய்வீகமான மலைகள், அந்த அழகு, கள்ளம்கபடம் இல்லா மக்கள். அங்க பல தடவ போயிருக்கேன். 1995 -ல இருந்து 15 வருஷமா போயிட்டு இருக்கேன்.”
பத்திரிக்கையாளர் : “நீங்க நேபாளுக்கு ஒவ்வொரு வருஷமும் அங்க போவேன், ஆனா அங்க 5star ஹோட்டல்-ல நான் தங்க மாட்டேன்னு சொல்வீங்க”
தலைவர்: “இப்போ இல்ல. மக்கள் வந்து தொந்தரவு பண்ணுவாங்க. செக்யூரிட்டி தேவை”
யதார்த்தம் அது தான். அது சரி… அவரைப் பத்தி இன்டர்நெட்ல வர்ற ஜோக்சைஎல்லாம் அவர் படிக்கிறாரா?
தலைவர்: “Yes , அதெல்லாம் சும்மா ஜாலிக்கு”
பத்திரிக்கையாளர் : “எப்படி இருக்கு அதெல்லாம்?”
தலைவர்: “அது, சும்மா ஜோக்ஸ் தானே.” சொல்லிட்டு சிரித்தார். ”எப்படி இப்படி எல்லாம் கற்பனை பண்றாங்க? இந்த காலத்து பசங்க எல்லாம் sharp minded , புத்திசாலிங்க.”
பத்திரிக்கையாளர் : “உங்களுக்கு ரெண்டு பெண்கள் உண்டு. எப்பவாவது பையன் இல்லன்னு feel பண்ணிருக்கிங்களா?”
தலைவர்: “இல்ல, இல்ல. நான் சந்தோஷமா இருக்கேன், கடவுள் கிருபையால. நாம இருக்கறது 21 -ம் நூற்றாண்டு. இதில் எல்லாரும் சமம் தான். என்னோட பேரன்கள பாருங்க – யாத்ரா, லிங்கா.”
அருகில் அவர்களின் புகைப்படம் இருந்தது. அதை பெருமையுடன் பார்த்தார், ரஜினி.
பத்திரிக்கையாளர் : “நீங்க ஒரு நல்ல தாத்தாவா இருக்கிங்களா?”
தலைவர்: “ஆம், அன்புள்ள தாத்தாவாக!”
பத்திரிக்கையாளர் : “நீங்க எல்லோரையும் போல இல்லாம, வெறும் குர்தாவோட, தலை வழுக்கையோட, dye இல்லாம வெளியல போறீங்க. அத உங்க ரசிகர்கள் ஏற்று கொள்கிறார்களா?
தலைவர்: “இல்லை, அவர்களுக்கு படத்தில எப்படி இருக்கின்றோம்ரதுதான் முக்கியம். அங்க, அவங்களோட நாயகன் நாயகனாக இருக்கணும். வெளி உலகத்தில அது ஒன்னும் பிரச்னை இல்ல. மக்களுக்கு எல்லாம் தெரியும், அவர்கள் புத்திசாலிகள். தேவை இல்லாம எதுக்கு உங்கள நீங்களே வருத்திக்கணும்?
பத்திரிக்கையாளர் : “ஒரு வேளை உங்க ரசிகர்கள் உங்களை அப்படியே ஏற்றுக்கொண்டார்களா?”
தலைவர்: “ஆம், அப்படிதான். அதான் உங்ககிட்ட சொன்னேன். படத்தில அப்படி வந்தா அவர்களுக்கு பிடிக்காது. படத்தில, ஹீரோன்னா ஹீரோ தான். அதில, எந்த மாற்றமும் இல்ல.”
மக்களுக்கு என்ன தேவையோ இந்த ஹீரோ செய்வார் – காதல் செய்றது, சண்டை போடறது, அதே சமயத்தில், ஹீரோ உடல் ஆரோக்கியமாகவும் இருக்கனும். ரஜினிக்கு அது இருக்கு. உடம்பை FIT ஆ வெச்சிருக்கார் இவர்.
“நான் என் உடலை fit -ஆ வசிக்க தினமும் யோகா, உடற்பயிற்சி பண்றேன். அது தானே என்னுடைய மூலதனம். ஒரு கலைஞன் தன்னோட உடலை மட்டுமே உழைப்புக்கு தர முடியும். மற்றபடி, சிந்திக்கத்தான் நல்ல நல்ல எழுத்தாளர்களும் இயக்குனர்களும் இருக்காங்களே”.
பத்திரிக்கையாளர் : “உங்களுடைய வயச பத்தி கவலைப்பட்டது உண்டா? ரோபோல நீங்க எல்லாத்தையும் செய்தீங்க – காதல் பண்றது, டான்ஸ் ஆடறது, எல்லாம்…”
தலைவர்: (உணர்வுபூர்ணமான சிரிப்புடன்) “சில நேரங்களில் சண்டை போடும்போது அல்லது டான்ஸ் ஆடும்போது feel பண்ணது உண்டு. ஆனால், கலைஞர்களும் இயக்குனர்களும் இருக்கும் வரையில் ஒன்னும் பிரச்னை இல்லை. ஆனாலும், காதல் பண்ணும்போது சங்கடமாதான் இருக்கு. என்னதான் நடிப்பு என்று சொன்னாலும், ஒரு வித குற்ற உணர்ச்சியாகதான் இருக்கு”.
பத்திரிக்கையாளர் : “அதனால் அந்த காட்சிகளில் இப்போல்லாம் அதிக கவனத்துடன் இருக்கிங்களா?”
தலைவர்: “ஆமாம், ரொம்ப ரொம்ப கவனமா இருக்கேன்”.
பத்திரிக்கையாளர் : “ரோபோவுக்கு பிறகு அடுத்த படம் என்ன?”
தலைவர்: “ஹரான்னு அனிமேஷன் படம். கொஞ்சம் ஆக்க்ஷன், அவதார் போல கொஞ்சம் அனிமேஷன். ஆனா முழுக்க, முழுக்க ரஜினிகாந்த் படம், இன்னும் தீர்மானிக்க படவில்லை”.
பத்திரிக்கையாளர் : “யாஷ் சோப்ரா உங்களை தூம்-3க்கு கூப்பிட்டதாக செய்தி வருதே?”
தலைவர்: “அதெல்லாம் வதந்தி, உண்மையில்லை. இன்னும் யாரும் என்னை வந்து சந்திக்கவில்லை. ஹரவுக்கு அப்பறம் சின்னதா ஒரு ஆறு மாதம் break . அதற்கப்புறம், நல்ல கதை, நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பாளர், நல்ல பாத்திரம் கிடைச்சா படம் பண்ணுவேன். இல்லேன்னா, ரொம்ப வருடங்கள் ஆயிடுச்சு. வயசும் 61 ஆயிடுச்சேப்பா”.
பத்திரிக்கையாளர் : “ஆனா அமிதாப் இன்னும் நல்லா நடிச்சிட்டு இருக்காரே?”
தலைவர்: “அவர்தான் என்னோட Inspiration” உடனே சொல்லும் ரஜினி, “உண்மையா சொல்லணும்னா dilipji தான் எங்க எல்லாருக்கும் முன்னோடி. அவர்தான் அமித்ஜி, எனக்கு, sharukh, அமீர் எல்லாருக்கும் ஒரு முன்மாதிரி”.
பத்திரிக்கையாளர் : “மும்பைய மிஸ் பண்றீங்களா?”
தலைவர்: “இல்லை. அமித்ஜி போன்றவர்களோட பழகுறது எவ்ளோ பெரிய பாக்கியம். அந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்?. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து மூன்று படம் பண்ணோம் – அந்த கனூன், கிரப்தார், ஹம் – எல்லாம் மெகா ஹிட் படங்கள். ஒரு சில சமயங்களில் அங்க போய், நண்பர்களை பார்கனும்னு தோணும். அங்க எனக்கு நெறைய friends இருக்காங்க – சுபாஷ்ஜி, குட்டூ, ரிஷி, ஜீதேந்த்ரான்னு நெறைய பேர்”.
பத்திரிக்கையாளர் : “ஏன் இப்போல்லாம் ஹிந்தி படங்களில் நடிப்பதில்லை?”
தலைவர்: “நான் படம் பண்றத நெறைய குறைச்சிட்டேன். இங்கயே ஒன்னு அல்லது ரெண்டு படம் தான் பண்றேன். அதுவும் இல்லாம, ஒரே சமயத்தில் ரெண்டு குதிரைகளில் சவாரி செய்வது ரொம்ப கஷ்டம். அப்புறம், இங்க பண்றதுக்கும், ஹிந்தில பண்றதுக்கும் நெறைய வித்தியாசங்கள் இருக்கு. ஹிந்தில 25 -27 படம் வரைக்கும் பண்ணிட்டேன். அங்க தான் பத்து வருடம் – மகிழ்ச்சியா இருந்தேன்”.
பத்திரிக்கையாளர் : “இங்க ஒரே கதாநயகனா நடிச்சிட்டு அங்க எல்லாரோடவும் சேர்ந்து படம் பண்றீங்களே. அத பத்தி நீங்க கவலைப்படவில்லையா?”
தலைவர்: “இல்லை, இல்லை, இன்னும் சொல்ல போனால் எனக்கு பயம் இல்லாம இருக்கு. இங்க நான் ஒரே ஆளா நடிக்கணும். அங்கே அப்படியில்லை. எல்லாம், பெரிய பெரிய நடிகர்களோட. அதுவும் யார், யாரெல்லாம்? தர்மேந்திரா, வினோத் கண்ணா, அமித்ஜி – - நல்ல மகிழ்ச்சியான தருணங்கள், பெரிய – பல கோடி ரூபாய் படங்கள், நல்ல இடங்கள், நல்ல நண்பர்கள். எல்லாம் மகிழ்ச்சியா இருந்தது”.
பத்திரிக்கையாளர் : “கடிகாரத்தில் உங்க குருவா?”
தலைவர்: “ஆம், நான் ரொம்ப கடவுள் பக்தி உள்ளவன்”.
பத்திரிக்கையாளர் : “எப்படி இந்த அளவுக்கு உடம்பை கட்டுகோப்பா வச்சிருக்கிங்க?”
தலைவர்: “இயற்கையாவே, என்னோட உடல் ரொம்ப சிறியது. கடவுள் அருளலால, என்னோட பெற்றோர்கள் எனக்கு கொடுத்த சொத்து இந்த நல்ல உடம்புதான். BP, Sugar இதெல்லாம் இல்லை. எந்த விதமான பரம்பரை நோயும் இல்லை. சின்ன, உறுதியான உடல். ஆனால், உடலை பாதுக்காக்கறதும் முக்கியம்”.
பத்திரிக்கையாளர் : “எல்லாரும் ஆச்சரிய படக்கூடிய விஷயம் என்னன்னா, ரஜினி என்னதான் சாப்பிடுராறு? அவர் பிறந்த நேரம் என்ன இந்தளவு பேர் புகழும் பணத்தை குவிச்சிட்டாரு..
(மறுபடியும் ஒரு அழகிய புன்னகை ரஜினியிடம் தவழ்கிறது).
தலைவர்: “நான் ரொம்ப கொடுத்துவச்சவன், 100 சதவிதம் ஆசிர்வதிக்கப்படவன். இல்லேன்னா, எப்படி, இப்படி ஒரே பேர், புகழ், அந்தஸ்து? எல்லாரும் தான் வேலை செய்றாங்க. எல்லாருக்கும் தான் சந்தர்ப்பம் வருது. எல்லாம் அந்த கடவுள் செயல். அவர் கொடுத்தத நான் பயன்படுத்திக்கிட்டேன். அவ்வளவுதான்.. நான் கடவுளுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்”.
பத்திரிக்கையாளர் : “உங்களை எல்லாரும் இங்க கடவுளாக பார்க்கும்போது உங்களாலே அவங்களுக்கு என்ன செய்யலாம், செய்ய முடியும்ன்னு பயம் இருக்கா?”
தலைவர்: “இயற்கையாகவே, அவர்களோட எதிர்பார்ப்புக்கள் அதிகம். படத்துக்கு படம், என்ன அடுத்தது, என்ன வித்தியாசம், அப்படின்னு ஒரே பயம் தான். அந்த ஒரு கடமை உணர்ச்சி எனக்கு பயத்தை உண்டு பண்ணுது. அடுத்தது என்ன, எவ்வளவு பெரிய படம்?”.
“எப்படி வித்தியாசபடுத்தலாம், எப்படி ஒரு படத்தை கொடுக்கலாம் – ரொம்ப boring -ஆகவும் ரொம்ப அதிக தொழில் நுட்பம், ரொம்ப தத்துவம் சொல்லற மாதிரி, ரொம்ப கீழ் லெவெலுக்கு போகாம, இப்படி எல்லாம் இல்லாம எப்படி நல்ல படத்தை கொடுப்பது. ரோபோ, ஒரு வித்தியாசமான, எல்லாரையும் கவரக்கூடிய படம்” ஒருவித சந்தோஷத்துடனும், நிறைவுடனும் முடித்தார் ரஜினி.
பத்திரிக்கையாளர் : “ரோபோ படம் முன்னாடி ஷாருக் நடிக்கிறதா பேசப்பட்டதே?”
(கொஞ்சகூடம் அகந்தை என்ற வார்த்தை அவர் வார்த்தைகளில் மட்டும் இல்லாமல் அந்த மனிதனிடம் அது அறவே இல்லை)
தலைவர்: “(அமைதியாக), 10 வருடத்திற்கு முன்பு இந்த கதை கமலை வைத்து தயாரிக்கப்பட்டது. preity zinda -வோடு பூஜை கூட போடப்பட்டது. ஆனால், நாட்குறிப்பு பிரச்சனையில் கைவிடப்பட்டது. அப்புறம், ஷாருக்கை வைத்து பேசப்பட்டது. அது, தயாரிப்பு தொகையின் காரணமாக கைவிடப்பட்டது”.
பத்திரிக்கையாளர் : “சிவாஜி எந்த அளவிற்கு வெற்றிப்பெற்றது?”
தலைவர்: “முதல் தடவையாக 75 -80 கோடி வைத்து தயாரித்த படம், 110 – 120 கோடியை சம்பாதித்து தந்தது. மிக பெரிய தைரியத்தையும், மார்க்கெட்டை விரிவுபடுத்தியது”.
பத்திரிக்கையாளர் : “உங்களுக்கு முன்னாடியே கமலுடனும், ஷாருக்குடனும் படம் பேசப்பட்டது, ஈகோ பிரச்சினை இல்லையா?”
தலைவர்: “யார், யாருக்கு எந்த எந்த அரிசின்னு, அதிலேயே பேர் எழுதப்பட்டு இருக்கும்”. (இதை இதை தான் கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காதுன்னு ஏற்கனவே சொல்லிட்டிங்களே தலைவரே!!!)
“நான் அந்த படம் பண்ணதுக்கு காரணம் எனக்கு ஷங்கரை பற்றியும், அவரோட திறமை பற்றியும் தெரியும். வேற யார் வந்து 200 கோடி படம் அப்படின்னு சொல்லிருந்தாலும், நான் கேட்டுருக்ககூடம் மாட்டேன். இன்னும் சொல்ல போனால், ஹாலிவுட்லேர்ந்து கூப்பிட்டு இருந்தாலும் நான் போயிருக்கமாட்டேன். ஏன்ன நான் ஷங்கருடன் சிவாஜியில் வேலை பார்த்திருக்கிறேன், அவர் மிக பெரிய திறமைசாலி.
பத்திரிக்கையாளர் : “ஆனால், உங்க குசேலன் படம் நன்றாக போகவில்லையே?”
தலைவர்: “அது, நாலைந்து நாள் கௌரவ வேடம்தானே!!”
பத்திரிக்கையாளர் : “அது நன்றாக போகாதது குறித்து வருத்தம் இல்லையா?”
தலைவர்: “கண்டிப்பாக, வருத்தப்பட்டேன். எத்தனை பேரோட பணம், உழைப்பு, நம்பிக்கை, வருத்தம் எல்லாம் என்னை பாதித்தது. ரஜினி மீது வைத்துள்ள மக்கள் (எல்லோரும்) நம்பிக்கை – ஆனால் படம் அந்த அளவுக்கு இல்லாதது வருத்தத்தை அளிக்கும். அவர்களின் வருத்தம், என்னை பாதித்தது”.
பத்திரிக்கையாளர் : “இப்போது எப்படி ரோபோவின் வெற்றியை கொண்டாடுகிறீர்கள்….?”
தலைவர்: “நான் ரொம்ப பிசியா இருக்கிறேன். என்னோட ரெண்டாவது பெண்ணின் திருமணம், அவர்களின் தலை தீபாவளி கொண்டாட்டங்கள். இப்போது அடுத்து அனிமேஷன் படத்தை ஆரம்பிக்கலாம்”.
ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் 7 -8 கோடி வரை ஒவ்வொரு படங்களும் இப்போது விளம்பரபடுத்துவதற்காக செலவிடும்போது, 130 கோடி மதிப்புள்ள ரோபோ படம் விளம்பரத்திற்கு ஒரு கோடியிலேயே முடித்துவிட்டது. அது தான் இன்றைய ரஜினியின் சக்தி. ரஜினி படத்தில் இருந்தாலே போதும், அதை விளம்பரபடுத்த தேவையில்லை. மக்கள் தேடி வந்து பார்பார்கள்.
பத்திரிக்கையாளர் : அப்படிப்பட்ட ரஜினி, மற்ற நடிகர்களை தங்களின் படங்களை விளம்பரம் செய்வதை பார்த்து, “ஏன் இப்படி விநியோகசதர்கள் மாதிரி நடந்து கொள்கிறார்கள் என்று சொன்னதாக கூறபடுகிறதே?” (எவன்டா அவன் இப்படி ஒரு கதையை கிளப்பிவிட்டது? தலைவர் என்னைக்காவது மத்த நடிகர்களை பற்றி தவறாக விமரசித்திருப்பாரா?)
தலைவர்: “நான் அப்படி சொல்லவே இல்லை. ஏன் சொல்ல வேண்டும்? இது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம். இதில் ஏதும் சொல்வதற்கில்லை. 100 % நான் சொல்லவே இல்லை. இபோதைய நிலைமையில் கண்டிப்பாக எல்லோரும் படத்திற்கு விளம்பரம் பண்ணவேண்டும். நான் என் மகள் திருமணத்தால் பிசியாக இருந்துவிட்டேன். அவ்வளவுதான். நான் கூட, பாடல் வெளியிட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். நான் எனது வழியில் விளம்பரம் செய்தேன். மக்களுக்கு விழிப்புணர்ச்சி தேவை. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரிய வேண்டும். நான் அப்படி சொல்லவே இல்லை. நான் யார் அதை சொல்ல?”.
பத்திரிக்கையாளர் : “காவல்துறையில் பலருக்கு தீபாவளி காரணமாக பரிசுகள் கொடுத்ததாக கூறபடுகிறதே?
தலைவர்: “ஆமாம், எல்லா வருடமும் இனிப்பு வழங்குவேன்”.
பத்திரிக்கையாளர் : “சேலை துணிகள் வழங்கப்பட்டதாக கூறபடுகிறதே?
தலைவர்: “இல்லை, இல்லை. அது லஞ்சம் கொடுப்பது போல் ஆகிவிடும். நான் இனிப்பு மட்டுமே வழங்குவேன்”.
அவரை உசுப்பேற்றி வார்த்தைகளை பிடுங்க இது போன்ற செய்திகள் கிளப்பிவிடப்படுகின்றன என்பதை அவர் அறிந்தே இருக்கிறார்.
தலைவர்: “என்னை தூண்டிவிட்டு வார்த்தைகளை பிடுங்க இது போன்ற கதைகள் கிளப்பிவிடப்படுவதுண்டு. ஆனால் நாள் மசிந்துகொடுப்பதில்லை”.
பத்திரிக்கையாளர் : “நீங்கள் அடிக்கடி சொல்லும் குட்டிகதைகளை பற்றி?”
தலைவர்: “நிறைய நீதிகதைகள் உள்ளன. அதை படித்து, அதில் உள்ள (இன்று அன்றாடும் ஒத்துபோகிற) நீதியை தெரிந்துகொள்வேன். சமயத்தில் அதை பயன்படுத்துவேன்”.
பத்திரிக்கையாளர் : “மும்பையை (தங்களின் கடந்த வருகையை) பற்றி?”
தலைவர்: (சில நொடிகளுக்கு பிறகு) “மும்பை, மாயா நகரம்”.
பத்திரிக்கையாளர் : “இந்த முறை பால் தாக்கரே சந்திதிர்களா?”
தலைவர்: “ஆமாம்”.
பத்திரிக்கையாளர் : “அவர் கடவுளை போன்று என்று சொன்னிர்களா?”.
தலைவர்: “ஆமாம். அவர் என்னை முதல் பிள்ளையை போல் அன்போடு பார்த்து கொள்வார். அவரை இதற்க்கு முன்பு கூட பார்த்து இருக்கின்றேன்”.
Tape , அணைக்கப்பட்டு விட்டது. அவரை ஒரு படம் பிடித்தேன் – அவருக்கு பிடித்த கருப்பு நிற உடை அதற்கேற்ப அவர் உட்கார்ந்திருந்த வெள்ளை நிற சோபா.
ரஜினி அழகிய, மாபெரும் சக்தி வாய்ந்த அந்த (அவரின்) கை எழுத்தை ஒரு தாளில் (ரஜினி ஜோக்ஸ் அடங்கியவற்றில்) போட்டார். பின்பு, எனக்கு விடை கொடுக்கும்போது, நீங்கள் எதுவும் சாப்பிடவில்லையா? என அக்கறையுடன் அவர் விசாரிக்க, நானோ, “நீங்கள் எனக்கு கிடைத்துவிட்டிர்கள், அதுவே போதும்!!! என்று பதில் அளித்தேன்.
நன்றி : http://www.thefilmstreetjournal.com/2010/12/%E2%80%9Ci-am-61-years-old-bahut-ho-gaya%E2%80%9D
|