Rajini shares his experience on "Bloodstone" Movie (1987)
ஆங்கிலப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ரஜினிகாந்த் அப்போது அளித்த பேட்டியில் கூறியதாவது:-
"ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பே திட்டமிடுவார்கம்.
ஆறு மாத காலம் தேடி, ஷூட்டிங் லொகேஷனை தேர்ந்தெடுத்த பிறகு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுவார்கம்.
"ஸ்கிரிப்ட் எழுதி, `டிஸ்கஸ்' பண்ணி பண்ணி, வசனம் முதல் கொண்டு... ஷாட் கூட இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று `டேபிம் ஒர்க்' பண்ணி விடுவார்கம்.
இருபதாயிரம் அடிகம் எடுத்து, பதினைந்தாயிரம் அடிகளாக குறைக்கலாம் என்கிறதெல்லாம் அங்கே கிடையாது.
லொகேஷனுக்கு போன உடன் கதையை இப்படி மாற்றிக் கொம்ளலாம். வசனத்தில் இதை சேர்த்துக் கொம்ளலாம்... அப்படி பண்ணலாம்; இப்படி பண்ணலாம் என்கிற வித்தை எல்லாம் இல்லை. ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ, எந்த ஷாட் இருக்கிறதோ, என்ன டயலாக் இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கம்.
அங்கே எல்லாம் ஒரு ஷெட்ல், இரண்டு ஷெட்ல் என்பதெல்லாம் கிடையாது. படத்தை ஆரம்பித்து விட்டால், முடிகிறவரை தொடர்ந்து ஷூட்டிங்தான்.
நான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஒவ்வொரு நாளும் எடுக்கப்படவிருக்கும் காட்சி, அதில் இடம் பெறும் வசனம் போன்ற எல்லா விவரங்களும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கம், டெக்னீஷியன்களிடம் கொடுக்கப்பட்டு விடும்.
இதனால் நட்சத்திரங்கம், அவரவர் சம்பந்தப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து கொம்ளவும், கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தவும் போதிய அவகாசம் கிடைக்கிறது. `ஷூட்டிங்கில் நாம் என்ன செய்யப்போகிறோம' என்பதை தீர்மானித்து விடுவதால், செட்டிற்கும் போனவுடன் டென்ஷன் இருக்காது.
இங்கே முதலில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, பிறகு "டப்பிங்'' பேசுகிறோம். அங்கு அப்படி இல்லை. படப்பிடிப்பின்போது என்ன பேசுகிறோமோ, அது நேரடியாக ஒலிப்பதிவு ஆகிவிடும். படத்தில் அந்த வசனம்தான் இடம் பெறும்.
என்னிடம் அவர்கம் "ஷூட்டிங்கின்போதே ஆங்கில வசனம் பேசவேண்டும்'' என்று சொன்னபோது ஆரம்பத்தில் பயந்தேன். காரணம், நமக்கு ஆங்கிலம் இலக்கண சுத்தமாகப் பேச வராது! படத்தில் பேசுகிற அளவுக்கு நாம் என்ன கான்வெண்டிலேயா படிச்சோம்!
"வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. உங்களிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே டயலாக்கை கொடுத்துவிடுவாங்க. நீங்க தயார் பண்ணிகிட்டு வரலாம்'' என்று தயாரிப்பாளர் ஊக்கம் தந்து தைரியமூட்டினார். அப்படியிருந்தும் ஷூட்டிங்கில் அவர்கம் பேசியதை நான் புரிந்து கொம்ளவும், நான் பேசியதை அவர்கம் புரிந்து கொம்ளவும் ஒரு வாரம் பிடித்தது. உச்சரிப்பில் படிப்படியாக சகஜநிலை ஏற்பட்டது.
"இந்தப்படம் உலகம் முழுவதும் ஓடி, இன்னும் பல ஆங்கிலப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிடுவீர்களா?'' என்று என்னிடம் பலர் கேட்கிறார்கம்.
அவர்களுக்கு என் பதில் இதுதான்:
"நல்ல கதையாக இருந்து, அதில் என் கேரக்டர் நல்லபடியாக இருந்து, அப்படத்தை பெரிய நிறுவனம் எடுத்தால், அத்துடன் கால்ஷீட் பிரச்சினை ஏற்படாமல் இருந்தால், ஆங்கிலப் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொம்வேன். அப்போது கூட நான் ஹாலிவுட்டில் செட்டில் ஆகமாட்டேன். காரணம், நான் இந்திய மண்ணை - இந்திய பண்பாட்டை அதிகம் நேசிக்கிறேன்.
இவ்வாறு ரஜினி கூறினார்.
|