Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

மணவாழ்க்கையில் ரஜினி (பாகம் 9)

முதல் சந்திப்பிலேயே லதாவை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது இயல்பான, எளிமையான தோற்றம், சிவந்த நிறம், மென்மையான இனிய குரல் எல்லாம் ரஜினியை வசீகரித்தது. இப்படிப்பட்ட பெண்தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அப்போதே தீர்மானித்தார்.

ரஜினியின் கறுப்பு நிறத்தைப் பார்த்து, மாணவ பருவத்தில் அவரை ஒதுக்கியவர்கள், ஒதுங்கியவர்கள் நிறைய பேர். அதெல்லாம் ரஜினியின் மனதில் ஒரு நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தது. அவர் பஸ் கண்டக்டரானபோது அவரது வேகம், ஸ்டைல் எல்லாம் பஸ் பயணிகளுக்கு ஒரு காட்சிப் பொருளாகவே ஆனது. குறிப்பாக அதை ரசித்த பெண்கள் ஏராளம். ஆனால் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டனர். "இந்த வித்தியாசமான மனிதருடன் நாம் நட்பு கொள்ள ஆசைதான். ஆனால ஆள் கறுப்பாக இருக்கிறாரே! போயும் போயும் கறுப்பனுடனா பேசுகிறாய், பழகுகிறாய் என்று மற்றவர்கள் கேலி செய்வார்களே...!" என்று ஆசையைப் பூட்டி வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களது பார்வையை ரஜினி அளந்து பார்த்து சிரித்துக் கொள்வார். இதையும் மீறி அவரோடு பழகியவர்கள் உண்டு. தங்களைப் பறி கொடுத்தவர்களும் உண்டு.

பெண் பார்த்தார்கள் குடும்பத்தார்

பெண்களுடன் ஈடுபாடு என்பது ரஜினிக்கு ஒரு சீரியஸான விஷயமாக இருந்ததில்லை. அந்த வயது உணர்வுகள் அப்படி. ஆனால் அவரது வீட்டிலுள்ளவர்கள் அதை சீரியஸான விஷயமாக எடுத்துக் கொண்டார்கள். ரஜினிக்கு மணக்கட்டுப் போட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்தார்கள். ஆனால் ரஜினிக்கோ அதில் விருப்பமில்லை. 'நாம் இப்போதுதான் வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறோம். மனைவியோடு குடும்பம் நடத்த வேண்டுமென்றால் நிறைய பணம் தேவை. அதைச் சேர்த்துக் கொண்டால்தானே இன்பமாக வாழ முடியும்' என்றெல்லாம் தன் மனதில் எழுந்த சிந்தனையைத் தன் வீட்டில் சொல்லியிருக்கிறார். ஆனால் அது எடுபடவில்லை.

வேறு வழியின்றி வீட்டுப் பெரியவர்களோடு பெண் பார்க்கப் போனார். பெண் வீட்டார் ஓரளவு வசதியுள்ளவர்கள். ஒரு வகையில் உறவும் கூட. பெண்ணைப் பார்த்து வீட்டிலுள்ள அனைவருக்கும் திருப்தி. அவர்கள் திருப்தியுறும் போது ரஜினி மட்டும் எதிராக இருக்க முடியுமா? தனக்கும் பெண் பிடித்திருப்பதாகச் சொன்னார். ஆனால் அந்தப் பெண்ணுக்கோ ரஜினியைப் பிடிக்கவில்லை. 'நமக்கு புருஷனா வரப் போகிறவன் என்ன இவ்வளவு கறுப்பா, ரவுடி மாதிரி இருக்கான்' என்று மனதில் நினைத்ததைத் தன் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லி மறுத்துவிட்டார். அது பற்றிக் கேள்விப்பட்டதும் ரஜினி கொதித்துப் போனார். அதைப் பெரும் அவமானமாகக் கருதினார். அப்போதே மனதில் ஓர் உறுதி பூண்டார். நல்ல சிவந்த நிறமுள்ள அழகிய பெண்ணை மணந்து, தான் யார் என்பதை அவளுக்கு நிரூபிக்க வேண்டும் என்று.

திரையுலகில் காதல்

திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிகரான பின்பு ரஜினி பல நடிகைகளோடு சேர்ந்து நடித்தார். அப்போது ரஜினியைச் சில நடிகையர் விரும்பினர். ரஜினியும் ஓரிரு நடிகைகள் மீது விருப்பம் வைத்திருந்தாலும், தனது எண்ணத்தை வெளிப்படுத்த அவருக்குத் தைரியம் வந்ததில்லை. எளிதில் யாருடனும் பழகாத அவரது தன்மையே அதற்குத் தடையாக இருந்தது.

நல்ல சிவந்த நிறமுள்ள ஒரு பிரபல நடிகை ரஜினியோடு இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தார். ஒரு படத்தில் ஜோடியாகவும், மற்றொரு படத்தில் தங்கையாகவும் நடித்தார். அவர் ரஜினியைக் காதலிப்பதாகச் சொன்னார்.

பணத்தாசை கொண்டவர் அந்த நடிகை. அதற்காக ஒரு பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் இருந்தார். ரஜினிக்காக அந்தப் பெரிய மனிதரிடமிருந்து விலகிச் செல்லவும் மனமில்லை. நடிகை தன்னிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டு தனக்குத் துரோகம் செய்வதாக எண்ணிய அந்தப் பெரிய மனிதர் அவரது காதலுக்கு அணை போட முயன்றார். அதன் விளைவாக ரஜினியும் பாதிக்கப்பட்டார். தௌ¤வில்லாத நடிகையை விரும்பியது தவறுதான் என்று உணர்ந்த ரஜினி, அவரிடமிருந்து விலகிக் கொண்டார்.

முதல் சந்திப்பு

அப்போதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, அப்போது கல்லூரி மாணவி. தங்களது கல்லூரி இதழுக்காக ரஜினியைப் பேட்டி காண விரும்பிய லதா, சௌகார் ஜானகியின் வீட்டில் நடந்த படப்பிடிப்பொன்றில் ரஜினியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

முதல் சந்திப்பிலேயே லதாவை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது இயல்பான, எளிமையான தோற்றம், சிவந்த நிறம், மென்மையான இனிய குரல் எல்லாம் ரஜினியை வசீகரித்தது. இப்படிப்பட்ட பெண்தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று அப்போதே தீர்மானித்தார். அடுத்தடுத்த சந்திப்புகளை உருவாக்கிக் கொண்டு தனது எண்ணத்தை லதாவிடம் தெரிவித்தார். லதாவும் தன் குடும்பத்தாரிடம் ரஜினியின் எண்ணத்தைச் சொல்லி சம்மதம் பெற்றார்.

பெங்களூரில் தனது வீட்டிலுள்ளவர்களிடம் ரஜினி லதாவை மணந்து கொள்ளப் போவது பற்றிச் சொன்னபோது அவர்கள், "நம் உறவிலேயே பெண் எடுக்கலாமே?" என்று யோசனை சொல்ல, ரஜினி அதை ஏற்கவில்லை. 'நான் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டேன். இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. இதைத் தவற விட்டால் அப்புறம் என் வாழ்வில் திருமணம் செய்து கொள்ளும் சிந்தனையே எழாது' என்று கூறிவிட்டார். அப்புறமென்ன இரு பக்கத்திலும் எந்தவித தயக்கமும், எதிர்ப்பும் இன்றி ரஜினி-லதா திருமணம் திருப்பதியில் எளிமையாக நடந்தது.

தனது திருமணத்தைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த ரஜினி, 'யாரும் என் திருமணத்திற்கு வரவேண்டாம்' என்று கூறிவிட்டார். 'இது என் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சியைப் போல்தான். இதற்குத் தனி முக்கியத்துவம் தர வேண்டியதில்லை' என்று அதற்கான காரணமும் சொன்னார். எப்போதுமே ரஜினி ஆடம்பரமான படாடோபமான சடங்குகளில், சம்பிரதாயங்களில் நாட்டம் கொண்டதில்லை. அதெல்லாம் பணம், பொருள், நேரம் இவற்றுக்கான விரயத்தின் முதலீடு என்று கருதுபவர். தன் திருமண வைபவத்தையும் அப்படித்தான் நினைத்தார். அதனால் இரு குடும்பத்து நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். திரையுலகிலிருந்து யாரும் அங்கு செல்லவில்லை. அரசியலில் பெருந்தலைவர் காமராஜர் எப்படி மிக யதார்த்தமானவராக இருந்தாரோ, அதுபோல் சினிமா உலகில் இருக்கிறார் ரஜினிகாந்த்.

சென்னையில் ரஜினி-லதா திருமண வரவேற்பு எளிமையாகத்தான் நடந்தது. இருவரும் தேனிலவுக்காக வெளியிடங்களுக்குச் செல்லவில்லை.

இல்லற இன்பம்

திருமண வாழ்வில் ரஜினிக்கு நிறைய அனுபவங்கள். அவரது முரட்டுத்தனமெல்லாம் காணாமல் போய்விட்டது. எல்லாம் லதா வந்த நேரம் என்று மகிழ்ந்தார் ரஜினி.

ரஜினிக்கு சிக்கன் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் லதாவோ பிராமண குடும்பத்துக்கேயுரிய சுத்த சைவம். ஆனாலும் தன் விருப்பத்தை மனைவியின் மேல் திணிக்க விரும்பவில்லை. அசைவம் சாப்பிட எண்ணும் நேரங்களில் ஹோட்டலுக்குச் சென்று விடுவார். ஒரு நாள், சாப்பாட்டோடு புதிதாக ஒரு பதார்த்தத்தை லதா கணவரின் தட்டில் வைத்துத் தர, ரஜினி என்ன அது என்று ஆர்வத்தில் சாப்பிட்டுப் பார்த்தார். அப்படியொன்றும் அது ருசியில்லை என்றாலும், அது அசைவ உணவு, சிக்கன். மனைவியே தயாரித்தது என்று அறிந்ததும் ரஜினி மனம் நெகிழ்ந்து போனார். அப்புறம் ரஜினியின் ருசிக்கேற்ப மனைவி அசைவ வகைகளைத் தயாரிப்பதில் முன்னேறி விட்டார்.

மணமாகிவிட்டாலே கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புவது இயல்பானது. இந்தப் போட்டி இருந்தால்தான் வாழ்க்கை ரசனையுடையதாக இருக்கும் என்பதற்கு ரஜினி-லதா விதிவிலக்கல்ல.

திருமணத்திற்கு முன் காலையில் ரஜினியின் உறக்கத்தை விரட்டி படப்பிடிப்பிற்கு அனுப்புவது நண்பர்களின் செயலாக இருந்தது. ரஜினியைக் கரம் பற்றியபின் அந்தப் பொறுப்பு லதாவிடம் வந்தது. ஆனால் அவர் ரஜினியை 'என்னங்க', 'என்னங்க' 'எழுந்திருங்க....', நேரமாச்சுலலே...,' 'இன்னும் தூங்கறீங்களே...,' 'படபிடிப்புக்குப் போக வேண்டாமா?' என்று மெதுவாகத் தொட்டு, தட்டி எழுப்பும்போது ரஜினிக்கு அது சுகமான அனுபவமாக இருந்தது. ரஜினிக்கு விழிப்பு வந்தாலும் எழுவதற்கு மனம் வராது. அதனால் திருமணமான புதிதில் ரஜினி சில மாதங்கள் படப்பிடிப்பிற்குத் தாமதமாகவே செல்ல நேர்ந்தது.

மனைவியை ரஜினி, 'ஜில்லு', 'ஜிலுமா' என்று அழைத்து மகிழ்வார். அந்த இனிய மனைவிக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் அதை அதிகம் சாப்பிட்டால் குண்டாகி விடுவோம் என்ற பயமும் இருந்தது. ரஜினிக்கோ ஐஸ்கிரீம் என்றாலே ஆகாது. மனைவிக்காக வெளியே எங்காவது செல்லும்போது அன்பாக ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். கணவர் வேடிக்கை பார்க்க, தான் மட்டும் சாப்பிடுவது நன்றாக இராது என்று லதா, ரஜினியையும் வற்புறுத்தி ஐஸ்கிரீம் சாப்பிட வைப்பார். அதன் குளிர்ச்சி தாங்காமல் ரஜினியின் முகம் கோணலாக மாறுவது பார்த்து ரசித்துச் சிரித்து மகிழ்வார் லதா.

திருமணமாகிய புதிதில் ரஜினிக்கு வியாழன் என்றாலே பிடிக்காமல் போனது. காரணம் அன்று அவர் எண்ணெய்க் குளியல் செய்தாக வேண்டும் என்பது மனைவியின் கண்டிப்பான உத்தரவு. விபரம் தெரிந்த நாள் முதலே ரஜினி எண்ணெய் தேய்த்து குளித்ததெல்லாம் கிடையாது. அதற்கான பொறுமையும் அவருக்கு இல்லை. திருமணத்திற்குப் பின் மனைவியின் அன்பால் எண்ணெய் தேய்க்க ஒப்புக்கொண்டாலும், தலைக்கு எண்ணெய் தேய்ப்பதற்குள் எரிச்சலாகிவிடும். அப்புறம் உடலிலும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு ஒரு மணி நேரம் ஊற வேண்டும் என்று விதிமுறை வேறு. பரபரப்பாக இருக்கும் ரஜினிக்கு இதெல்லாம் அறவே பிடிக்கவில்லை என்றாலும், அழாக்குறையாக மனைவியைச் (செல்லமாக) சபித்துக் கொண்டு, சகித்துக் கொண்டு குளியலை முடிப்பார்.

'நெற்றிக் கண்' படத்தில் சக்ரவர்த்தி (தந்தை) சந்தோஷ் (மகன்) என்று ரஜினிக்கு இரு வேடங்கள். சக்ரவர்த்தி பெண்களின் மீது நாட்டம் உள்ளவர். மகனோ தந்தையைத் திருத்த முயல்பவர். இந்தப் படம் வெளிவந்த பின் லதா தன் கணவனை 'சக்ரவர்த்தி' என்று அழைக்க ஆரம்பித்தார். காரணம் மனைவியோடு காரில் வெளியே போகும்போது, வேண்டுமென்றே அவரைச் சீண்டுவதற்காக ரஜினி பிற பெண்களைச் சைட் அடிப்பது போல் பார்ப்பார். அப்படியே தன் மனைவியின் முக பாவங்களையும் பார்ப்பார். லதாவும் சளைக்காமல், "உங்களுக்கு சந்தோஷ் (நெற்றிக்கண்) மாதிரி ஒரு பிள்ளை பிறந்துதான் உங்களைத் திருத்தப் போறான்" என்பார்.

ரஜினி ஒரு பாத்ரூம் பாடகர். திருமணத்திற்கு முன்பிருந்தே அப்படித்தான். திருமணத்திற்குப் பின்பும் அந்தப் பழக்கம் மாறவில்லை. கணவர் குளிக்கும்போது என்ன பாட்டுப் பாடுகிறார் என்று லதா பாத்ரூம் அருகில் செல்லும்போது ரஜினி யூகித்துக் கொண்டு பாடுவதை நிறுத்திவிடுவார். மனம் சந்தோஷமாக இருக்கும்போது இசைக்கேற்ப நடனம் ஆடுவார். மனைவி அருகில் வந்தவுடன் நடனம் நின்றுவிடும். ஆனால் நாளடைவில் அந்தக் கூச்சம் விலகி மனைவி இருக்கும் போதே பாடுவதையும், நடனத்தையும் ஆரம்பித்து நிறுத்தாமல் மேலே செல்வார்.

ரஜினி நல்ல நகைச்சுவை உணர்வுள்ளவர். அதன் ஓர் அங்கமாகப் பிறரைப் போல் இமிடேட் செய்து நடிப்பதும் அவருக்கு சாதாரணம். இது பலருக்குத் தெரியாது. அவருக்கு ஜாலி மூடு வந்துவிட்டால் அவரது இமிடேட் நடிப்பில் யாரெல்லாம் வந்து போவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் பார்த்தால் தங்களது மேனரிஸங்களையே மாற்றிக் கொண்டு விடுவார்கள்.

இப்படித்தான் ஒருநாள் மனைவியிடமே டைரக்டர் பாலச்சந்தர் போல் ரஜினி நடித்துக் காண்பித்திருந்தார். இதற்குப் பின் ஒரு நாள் பாலச்சந்தர் ரஜினியின் வீட்டிற்கு வந்தபோது, ரஜினியோடு பேசிக் கொண்டேயிருக்க, ரஜினி எப்படியெல்லாம் பாலச்சந்தரை இமிடேட் செய்திருந்தாரோ, அது போலவே பாலச்சந்தரின் அங்க அசைவுகள், ஸ்டைல் அச்சாக இருந்ததைப் பார்த்து லதாவுக்கு தன் கணவரது இமிடேட் நடிப்பு நினைவில் வர, சிரிப்பு வந்துவிட்டது. நேரம் செல்லச் செல்ல அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. திடீரென்று அந்த இடத்தை விட்டு எழுந்து போனால் பாலச்சந்தர் மட்டுமின்றி, தன் கணவரும் தவறாக நினைத்து விடுவாரே என்று தொண்டைக் குழி வரை வந்துவிட்ட சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். பாலச்சந்தர் போனபின் லதா சிரித்த சிரிப்பைப் பார்த்து ரஜினிக்கு வியப்பு தாளவில்லை. விஷயம் தெரிந்து அவரும் பலமாகச் சிரித்தார்.

ரஜினிக்கு நேரம் இருக்கும்போது வீட்டில் உணவு பரிமாறுகையில் தானே சாப்பிட்டு விடுவார். இல்லையென்றால் மனைவி அவருக்கு ஊட்டிவிட, அந்த நேரத்தில் வேறு பணிகளைக் கவனிப்பார். தனக்குரியதைத் தயார் செய்து கொண்டு விடுவார். ஒரு நிமிட நேரத்தை விரயமாக்குவது கூட அவருக்குப் பிடிக்காது.

ரஜினியின் பரபரப்பான நடிவடிக்கைகளால் லதா களைத்துப் போய்விடுவார். ரஜினி ஹாலில் இருக்கிறார் என்று லதா அங்கு வந்தால், அதற்குள் அவர் வேறொரு இடம் மாறிவிடுவார். அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் செல்வதற்குள், ரஜினி அங்கும் இருக்கமாட்டார். சில சமயம் வேண்டுமென்றே மனைவியை அலைக்கிழித்து திடுமென்று அவர் முன் தோன்றி 'ஆ' என்று அலறி பயமுறுத்துவார்.

ரஜினிக்கு நன்றாகச் சீட்டாட வரும். வீட்டில் சில சமயம் மனைவியைத் துணைக்குச் சேர்த்துக் கொள்வார். மனைவி மிகவும் சிரியஸாக சீட்டுகளை வரிசைப்படுத்தி அக்கறையோடு விளையாடுவார். ரஜினியோ சில புரட்டுகளைச் செய்து வெற்றி பெற்று விடுவார். இப்படி ரஜினியின் தொடர் வெற்றியில் லதா மனம் சோர்ந்து விடும்போது, அவர் மீது இரக்கம் கொண்டு உண்மையைச் சொல்லிவிடுவார்.

பகலெல்லாம் நடித்து களைப்பாக வரும் ரஜினி இரவில் படுக்கப் போகுமுன் லதா அவரை முகத்தில் கிரீம் தடவிக் கொள்ளச் சொல்வார். மறுநாள் காலையில் முகம் பளிச்சென்று இருக்கும் என்பதற்காக. லதா அப்படி விரும்பினாலும், ரஜினி மறுத்துவிடுவார்.

லதா-ரஜினியின் சந்தோஷம் நீடித்ததா? விடை....
அடுத்த இதழில்.
..

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information