Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை (பாகம் 10)

பாலச்சந்தரின் தயாரிப்பான 'ஸ்ரீராகவேந்திரா' படத்திற்காக ரஜினி கடுமையான விரதத்தில் இருப்பதால் வீட்டிற்கு வருவதோ, மனைவி குழந்தைகளைப் பார்ப்பதோ மிக மிகக் குறைந்துவிட்டதென்று பாலச்சந்தரிடம் சொல்லி, ரஜினிக்கு அட்வைஸ் செய்யச் சொல்லியிருக்கிறார் லதா என்பது படப்பிடிப்பில் இருந்தவர்களுக்குக் கிடைத்த செய்தி.

இப்படிப் பல பிடிவாதங்களுடன் ரஜினி-லதா மணவாழ்க்கை இன்று வரை வெற்றிகரமாகவே திகழ்ந்து வருகிறது.

'என் கணவர்' என்ற பெயரில் ராம்கி, நிரோஷா நடித்த படத்தினை இயக்கியவர் அஸ்வினி குமார். ரகுமான்-நிரோஷா நடித்த 'உன்னை கண் தேடுதே' என்ற படத்தையும் இவர் இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்த் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், சென்னை மாம்பலத்தில் தையல் கலைஞராக இருக்கிறவர். குமார் என்று சுருக்கமாய் அழைக்கப்படுவார்.

குமாரை ரஜினியிடம் முதன் முதலாக அறிமுகம் செய்து வைத்தவர் 'உங்கள் வெறியன் இவர்' என்று கூறியிருக்கிறார். அதற்கு ரஜினி, "என்றைக்கும் எனக்கு ரசிகனாக இரு. வெறியர்களை எனக்குப் பிடிக்காது" என்றாராம்.

மதுரையைச் சேர்ந்த வசதி படைத்த ரசிகர் முத்துமணி. அவர் திடீரென்று ஒரு நாள் குமாரைத் தேடி வந்தார். "கை கொடுக்கும் கை'யில் ரஜினியின் மனைவி (ரேவதி) கற்பழிக்கப்பட்டு விடுகிறார். இருந்தாலும் ரஜினி அவருக்கு வாழ்வு கொடுக்கிறார் என்று நான் கேள்விப்பட்டேன். ரஜினியின் மனைவியாக நடிப்பவர் எப்படி கற்பழிக்கப்படலாம்? அதை ஒப்புக் கொள்ள முடியுமா?" என்று கேட்டார். அதைத் தொடர்ந்து குமாரும், முத்துமணியும் ரசிகர்களோடு கூட்டமாக டைரக்டர் மகேந்திரன் வீட்டிற்குச் சென்றார்கள். மகேந்திரன் அவர்களைச் சமாதானப்படுத்தினார். குறிப்பிட்ட காட்சியை இப்படி அமைக்கலாம் என்று ரசிகர்களோடு கலந்து ஆலோசித்த முடிவை குமார் மகேந்திரனிடம் சொன்னார். அவர் மறுநாள் படப்பிடிப்பில் ரஜினியைச் சந்திக்கச் சொன்னார்.

அருணாசலம் ஸ்டுடியோவில் 'கை கொடுக்கும் கை' படப்பிடிப்பில் குமார் ரஜினியைப் பார்த்தபோது, "குமார் நீ படம் பாரு. பார்த்தேன்னா உனக்கு இந்த எண்ணங்கள் வராது. மகேந்திரன் அந்த அளவுக்குச் செய்திருக்கிறார்" என்றார் ரஜினி.

அலங்கார் தியேட்டரில் 'கை கொடுக்கும் கை' முற்பகல் காட்சியாகத் திரையிட்டார்கள். மகேந்திரன் முதல் நாள் வந்தபோது ரஜினி ரசிகர்களெல்லாம் அவரை ஆரவாரத்தோடு வரவேற்றார்கள்.

படம் நடந்து கொண்டிருந்தது. ரேவதி கற்பழிக்கப்படும் காட்சியினைக் கண்ட ரசிகர்கள் கொதித்துப் போய் மகேந்திரனை நோக்கி எழுந்து விட்டார்கள். குமாரும் நண்பர்களும் மகேந்திரனை உடனே அங்கிருந்து அனுப்பி வைத்தார்கள். ரஜினிக்கு தன் இமேஜின் மீது நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தது.

ஒரு பிறந்த நாளின்போது ரஜினியின் வீட்டு முன்பாக கட்டுக் கடங்காத ரசிகர்கள் கூட்டம். ரஜினி வாசலுக்கு வந்தும் பின்புறமிருந்த ரசிகர்களின் பார்வைக்குத் தெரியவில்லை. அதனால் ரஜினியை மாடிக்குச் சென்று பார்க்கச் சொல்லி குரல் கொடுத்தார்கள். ரஜினி மாடிக்குச் செல்வதற்குள் நிறைய ரசிகர்கள் காம்பவுண்டு சுவர் மீது ஏறி நிற்க, சுவர் இடிந்து சில ரசிகர்களுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அதற்கு பின்புதான் தொடர்ந்து சனி, ஞாயிறுகளில் ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்க ஆரம்பித்தார்.

வெளியூர்களில் நடக்கும் படப்பிடிப்பிற்குத் தன்னை ரசிகர்கள் தேடி வந்து பார்ப்பதை ரஜினி விரும்பமாட்டார். அப்படியே சென்றாலும், "உங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு என்னை ஏன் பார்க்க வருகிறீர்கள்? வேலைதான் முக்கியம். வேலையைக் கெடுத்துக் கொண்டு நீங்களெல்லாம் இப்படிப் பார்க்க வருவதில் எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு நேரமும் இழப்பு. பொருளும் இழப்பு. அது தேவைதானா?" என்று புத்தி கூறி அனுப்பி விடுவார்.

ரஜினி 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். அதில் ஒரு சமயம் அவர் தீவிரம் கொண்டிருந்தபோது அதற்காக தன் போயஸ் கார்டன் வீட்டையே தந்துவிடும் எண்ணத்தில் இருந்தார்.

அதனால் குடும்பத்திற்குள் சிறிய ஊடல். அது பெரிதுபடுத்த வேண்டாததுதான். ஆனால் 'ரஜினி தன் மனைவியைப் பிரியப் போகிறார்' என்று பத்திரிகைகளில் செய்திகள், ஊகங்கள் வெளிவரத் தொடங்கின.

ரஜினி-லதா பிரிவுச் செய்தி பத்திரிகைகளில் வருவதற்கு முன்பு, லதா டைரக்டர் பாலச்சந்தரைச் சந்தித்தார். அப்போது வளசரவாக்கத்தில் உள்ள கே.ஆர்.விஜயா தோட்டத்தில், தனது 'சிந்து பைரவி' பட ஷ¨ட்டிங்கில் இருந்தார் பாலச்சந்தர். படப்பிடிப்பு நடைபெறுமிடங்களுக்கெல்லாம் லதா செல்பவரல்ல. ரஜினி கலந்து கொண்ட படப்பிடிப்பு இடங்களில் லதாவைப் பார்த்தவர் எவருமிருக்க முடியாது. அப்படிப்பட்டவர் இன்னொருவர் படப்பிடிப்பிற்கு, அதிலும் புறநகர்ப் பகுதியிலுள்ள இடத்திற்குச் சென்று பாலச்சந்தரைச் சந்தித்தது கண்டு பார்த்தவர்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. பாலச்சந்தரின் தயாரிப்பான 'ஸ்ரீராகவேந்திரா' படத்திற்காக ரஜினி கடுமையான விரதத்தில் இருப்பதால் வீட்டிற்கு வருவதோ, மனைவி குழந்தைகளைப் பார்ப்பதோ மிக மிகக் குறைந்துவிட்டதென்று பாலச்சந்தரிடம் சொல்லி, ரஜினிக்கு அட்வைஸ் செய்யச் சொல்லியிருக்கிறார் லதா என்பது படப்பிடிப்பில் இருந்தவர்களுக்குக் கிடைத்த செய்தி. அன்று மாலையே பாலச்சந்தர், ஏவிஎம் ஸ்டூடியோவிற்குச் சென்று 'ஸ்ரீராகவேந்திரா' செட்டில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார். என்றாலும் மறுநாள் 'ரஜினி-லதா விவாகரத்து' என்று பத்திரிகைகளில் பொய்ச் செய்தி வந்துவிட்டது. திரையுலகிலுள்ளோருக்கும், ரசிகர்களுக்கும் அது பெரும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. ரஜினியோடு நெருங்கிய தொடர்பில்லாத நட்சத்திரங்களில் சிலர், "ரஜினி விரும்பினால் நான் தலையிட்டு ஒன்று சேர்த்து வைக்கிறேன்" என்றார்கள். சினிமா நட்சத்திரங்களின் காதல், திருமணம் போன்ற விஷயங்களில் அக்கறை இல்லாதவர்கள் கூட ரஜினி விஷயத்தில் இரக்கப்பட்டார்கள். ரஜினியின் ரசிகர்களில் சில அப்பாவிகள், "யாரோ ரஜினிக்கு சூன்யம் வைத்துத் தம்பதியைப் பிரித்து விட்டார்கள்" என்று புலம்பினார்கள்.

ரஜினி-லதா பிரிவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்தச் செய்தி வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு, போயஸ் கார்டன் வீட்டை ரஜினி, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்திற்கு கொடுக்க நடந்த விழாவில் லதாவும் கலந்து கொண்டார். அதற்கு முந்தைய மாதம் நடந்த "சினிமா எக்ஸ்பிரஸ்" விருது வழங்கும் விழாவிற்கு ரஜினி-லதா இருவருமே வந்திருந்தனர்.

'ரஜினி லதா இருவருமே ஒருவரையொருவர் நேசிக்கிறவர்கள். ரஜினியின் குணமறிந்து விட்டுக் கொடுப்பவர் லதா. ரஜினிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் எதுவானாலும் செய்யத் தயங்க மாட்டார் லதா' என்பதெல்லாம் ரஜினி தம்பதியோடு பழகியவர்கள் கொண்டிருந்த கருத்து.

பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில் ரஜினியின் பக்தி மட்டுமே குடும்பப் பிரச்னைகளுக்குக் காரணமென்று ரஜினியின் நலம் விரும்பிகள் கருதினார்கள். ராகவேந்திர சுவாமிகள் மீதுள்ள பக்தி, 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' இயக்கத்தின் மீதுள்ள ஈடுபாடு இரண்டுமே அவருக்கு வாழ்க்கையில் ஈடுபாடில்லாமல் செய்து விட்டதாகவே நினைத்தார்கள்.

'ஸ்ரீராகவேந்திரர்' படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியது ரஜினிதான். பாலச்சந்தரும், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனும் ஆரம்பத்திலிருந்தே இந்தப் படத்தில் அத்தனை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய நாளிலிருந்தே ரஜினியின் பக்தியும், விரதமும் அதிகமாகியது. மொத்தத்தில் ரஜினியின் அதிக அளவு பக்தியே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அணை போட்டது போலாகிவிட்டது. நாளாக ஆக ரஜினிக்கு குடும்பத்தில் ஒரு பிடியே இல்லாமல் போயிருக்கலாம் என்று அவரது மனோநிலையைத் தொடர்ந்து கவனித்து வந்தவர்கள் கருதினார்கள்.

இந்த பிரிவு விஷயம் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ, ரஜினியின் ரசிகர்களுக்கு அளவு கடந்த வருத்தத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த விஷயம் கேள்விப்பட்டதுமே ஏராளமான ரசிகர்கள் 'விவாகரத்து வேண்டாம்' என்று ரத்தக் கையெழுத்துப் போட்டு ரஜினிக்கு அனுப்பி வைத்தார்கள். 'விவாகரத்து செய்தாலோ, மனைவியைப் பிரிந்து வாழ்ந்தாலோ உங்கள் வீட்டு முன்பு பிணமாக விழுந்து மடிவோம்' என்று எச்சரித்து கடிதங்கள் வந்தன. சிவகாசியிலுள்ள ரஜினியின் மன்றங்கள் கூடி, 'தீக்குளிப்போம்' என்று எச்சரிக்கையோடு கூடிய அறிக்கை வெளியிட்டார்கள். இதுபோக, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் ரஜினியின் வீட்டு முன் திரண்டு விட்டனர். சிலர் தங்கள் கையில் பிளேடால் கீறி ரத்தம் வழிந்த நிலையில் 'ரஜினி-லதா ஒன்றுபட வேண்டும்' என்று ஆவேசமாக கூக்குரலிட்டனர். அதையெல்லாம் கண்டு ரஜினி திகைத்துப் போனார். "நீங்கள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை. அமைதியாக திரும்பிச் செல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதன் பின்பே ரசிகர்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். ரஜினியின் மீது ரசிகர்களுக்கு எந்த அளவு ஈடுபாடு இருந்தது என்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தப் பிரிவு விஷயம் ஒரு உதாரணமாகும்.

இதையொட்டி இன்னொரு விஷயமும் உண்டு. 'யார்?' படத்திற்காக ரஜினியை ஒரு பாடல்காட்சியில், அவர் கடவுளைப் பிரார்த்தனை செய்வது போல் படமாக்க விரும்பி, அதற்காக ரஜினியின் அனுமதியும் பெற்றிருந்தார்கள். படப்பிடிப்பு ரஜினியின் வீட்டில் நடைபெறுவதாக இருந்தது.

ரஜினி-லதா பிரிவுக்காக அவர் வீட்டின் முன் ரசிகர்கள் கூடி நின்று ஆர்ப்பாட்டம் செய்தபோது, ரஜினி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த சம்பவம் நடைபெற்றது ஒரு வெள்ளியன்று. இதற்கடுத்து ஞாயிறன்று 'யார்?' படப்பிடிப்பு ரஜினியின் வீட்டில் நடக்க வேண்டும். அப்போதிருந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு நடக்குமா என்று யூனிட்டிலுள்ளவர்களுக்குச் சந்தேகம். யூனிட்டிலிருந்த உதவி இயக்குநர் (தையற் கலைஞர்) குமார் ரஜினியின் வீட்டிற்கு போன் செய்தார். விபரமறிந்த ரஜினியின் செயலாளர், "ரஜினியிடம் பேசுங்கள்" என்று போனைக் கொடுத்தார். குமார் ரஜினியிடம் தன் சந்தேகத்தைச் சொன்னபோது.... "நாளை ஞாயிற்றுக் கிழமைதானே.... பிற்பகல் 3.00 மணிக்குப் போன் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் ரஜினி. குமாருக்கு நம்பிக்கை இருந்தது என்றாலும் 'கலைப்புலி' தாணு (தயாரிப்பாளர்களில் ஒருவர்), டைரக்டர்கள் சக்தி-கண்ணன் ஆகியோர் 'மறுநாள் படப்பிடிப்பு நடக்குமா?' என்ற சஸ்பென்ஸில் தவித்தார்கள்.

ஞாயிற்றுக் கிழமை படப்பிடிப்புக் குழு ரஜினியின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு ரஜினி மட்டுமே இருந்தார். சுமார் மூன்று மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது. 'யார்' குழுவினர் ரஜினியின் வீட்டில் நினைத்த இடத்தில் பெரிய விளக்குகளைக் கொண்டு வந்து நிறுத்தி ஒளியமைத்தார்கள். படப்பிடிப்பு நடத்தினார்கள். ரஜினி எதையும் கண்டுகொள்ளவில்லை. சக்தி-கண்ணன் விருப்பப்படி 'கடவுளை பிரார்த்தனை செய்வதுபோல்' நடித்து ஒத்துழைத்தார். இந்த அனுபவத்தை 'யார்' குழுவினர் மறக்கவே முடியாது.

ரஜினிகாந்த்தின் அதிகபட்ச படங்களுக்கு வசனமெழுதியவர் பஞ்சு அருணாசலம். அது மட்டுமின்றி, ரஜினி மாறுபட்ட வேடங்களில் நடித்த கவிக்குயில், புவனா ஒரு கேள்விக் குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களெல்லாம் இவர் தயாரித்தவையே.

'புவனா ஒரு கேள்விக் குறி'யில் ரஜினிக்கு கொடுக்க வேண்டிய ரோலை சிவக்குமாருக்கும், சிவக்குமாருக்குக் கொடுக்க வேண்டிய ரோலை ரஜினிக்கும் கொடுத்திருக்கிறார்கள். 'பஞ்சு அருணாசலம் தவறு செய்கிறார்' என்று அன்றைக்குத் திரையுலகில் பலரும் பேசினார்கள். ஆனால் அப்படி மாற்றிக் கொடுத்தால்தான் அந்தப் படம் வெற்றி அடையுமென்று ஒரு கதாசிரியர் என்ற முறையில் பஞ்சு அருணாசலம் நினைத்திருக்கிறார். அதன்படி படமும் வெற்றியடைந்தது.

ரஜினிகாந்த் பிரமாதமான நடிகராகப் பெயர் எடுப்பதற்கு ஒரு வருடம் முன்பேயே எழுத்தாளர் சுஜாதாவின் 'ப்ரியா' ('குமுதம்' இதழில் தொடராக வெளிவந்தது) கதையின் உரிமையை பஞ்சு அருணாசலம் வாங்கியிருந்தார். அந்தக் கதையில் வரும் வக்கீல் கணேஷ் வேடத்திற்கு முதலில் சிவக்குமாரைத்தான் அணுகி கால்ஷீட் விஷயமெல்லாம் பேசி முடிவு செய்திருந்தார். ஆனால் சிவக்குமார், "இந்தப் படத்திற்கு அவசரமில்லை. பின்னர் பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறிவிட்டார்.

ஆரம்பம் முதலே சிவக்குமாருக்கும் பஞ்சு அருணாசலத்துக்கும் நல்ல நட்புறவு இருந்தது. ஆனால் 'புவனா ஒரு கேள்விக் குறி' படத்தில் சம்பத் வேடத்தில் ரஜினி நடித்தால்தான் நன்றாக இருக்குமென்று சிவக்குமாரிடம் வாதாடிய பஞ்சு அருணாசலம் அவரை நாகராஜன் வேடத்தில் நடிக்கச் செய்ததில் சிவக்குமாருக்கு வருத்தம்.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தைப் பொறுத்தவரை ரஜினிகாந்திற்கு நல்ல பாத்திரம் கொடுத்து அவரை உயர்த்த வேண்டும் என்றோ, சிவக்குமாரை அமுக்க வேண்டும் என்றோ எனக்கு எந்த எண்ணமும் இல்லை. ரஜினியைவிட அந்த நேரத்தில் சிவக்குமார்தான் என் படங்களில் அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.

அன்றைய சூழ்நிலையில் ரஜினிகாந்திடம் நான் எந்த ரோலைச் சொல்லியிருந்தாலும் அவர் செய்திருப்பார். ஆனால் நான் அப்படி செய்யாததற்கு காரணம், ரஜினி அப்படி செய்தால் அதில் புதிதாக ஒன்றும் இருக்காது என்பதினால்தான்.

ஆனால் 'புவனா ஒரு கேள்விக்குறி' வெற்றிக்குப் பின் ப்ரியா-விற்கு கொடுத்த கால்ஷீட்டை சிவக்குமார் வாபஸ் செய்துவிடவே, அந்த பாத்திரத்திற்கு யாரைப் போடுவதென்று யோசித்தேன். ரஜினியிடம் கேட்டேன். அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் மூன்று மாதம் கழித்துத்தான் கால்ஷீட் கொடுக்க முடியுமென்றார். 'சரி' என்றேன். அதன் பிறகு சிங்கப்பூர், ஹாங்காங் போய் 'ப்ரியா'வை எடுத்துக் கொண்டு வந்தோம்" என்று ஒரு சந்தர்ப்பத்தில் பஞ்சு அருணாசலம் கூறியிருக்கிறார்.

ரஜினி பற்றி ஸ்டில் போட்டோகிராபர்கள் என்ன சொல்கிறார்கள்?
பார்ப்போமா அடுத்த வாரம்...

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information