Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ப்ளட் ஸ்டோன் ராதா (பாகம் 18)

ரஜினியுடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒத்திகையில் செய்வது வேறு. ஷாட்டில் சில விஷயங்களைச் சேர்த்துக் கொள்வார். அதையும் பிடித்துக் கொண்டு அவரோடு போட்டியிட வேண்டும்.
 

 'பிளட் ஸ்டோன்' படம் பார்த்தேன். அதுபற்றி ரஜினியிடம் மனதில் பட்டதைச் சொன்னேன். "மைசூர், சென்னையில் அந்தப் படத்தை எடுத்ததாலோ என்னவோ, அது ஆங்கிலப் படம் மாதிரி இல்லாமல் போயிற்று, தெலுங்குப் படத்தின் தரத்தைவிட குறைவாகவே இருந்தது. இனி நடிக்கப் போகிற ஆங்கிலப் படத்தில், வெளிநாட்டிலேயே படம் எடுக்கிற மாதிரி நடிங்க. அப்பதான் அந்த ஆங்கிலப் பட தரமும், உங்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்தும் குறையாம இருக்கும்" என்றேன்.

"அது உண்மை தான். எனக்கே தெரியுது. நான் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் அமையவில்லை என்பது மட்டும் அல்ல, எனக்கு வருத்தத்தையும் கொடுத்தது. அடுத்து ஓமர் ஷெரீப்புடன் நடிக்கிறேன். அதை வெளிநாட்டிலேயே படமாக்குறாங்க" என்று ரஜினி சொன்னவுடன், நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார் ராதா.

ராதிகாவுக்குத் தந்த மரியாதை

யாருக்கு மரியாதை தர வேண்டும் என்பதில் ரஜினி சில கணக்குப் போட்டு வைத்திருப்பார். அதற்கு ஒரு சம்பவம்.

'குரு சிஷ்யன்' படத்தின் தொடக்க விழா படப்பிடிப்போடு ஏவிஎம்மில் துவங்கியது. ரஜினியைக் காண பலரும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். ரஜினி அங்குள்ள சோபா ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். சில தயாரிப்பாளர்கள் (அவரை வைத்து படமெடுத்தவர்களும் உண்டு) அவர் முன்பாக நின்றபடி பேசினார்கள். அப்போது நடிகை ராதிகா அங்கு வந்தார். அவரைப் பார்த்ததும் ரஜினி எழுந்து நின்று வரவேற்றதோடு அவரோடு நின்ற நிலையிலேயே உரையாடினார். அது ரஜினி, ராதிகாவுக்குத் தந்த மரியாதை.

போக்கிரி ராஜா, ரங்கா, நல்லவனுக்கு நல்லவன், ஊர்க்காவலன் ஆகிய படங்களில் ரஜினியோடு நடித்திருக்கும் ராதிகாவின் ரஜினியுடனான அனுபவங்கள் என்ன?

"பத்திரிகையொன்றிற்காக ரஜினியைப் பேட்டி காணச் சென்றேன். அதுதான் அவருடன் எனக்குள்ள முதல் சந்திப்பு. அதிகம் பேசமாட்டார்.

அப்போது என்னிடம், "என்னோடு போக்கிரி ராஜா படத்தில் நடிக்கிறீர்கள் வாழ்த்துகள்" என்றார். அவரோடு அந்தப் படத்தில் நடிக்கப் போவதே அவர் மூலமாகத் தான் தெரியும். அது மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம்.

'போக்கிரி ராஜா' படத்தில் 'போக்கிரிக்கு போக்கிரி ராஜா' என்ற பாடல் காட்சி வருகிறது. திருப்பதிக்கருகில் படமாக்கப்பட்ட அந்தக் காட்சியில், ரஜினியின் தோள் மீது குதித்து ஏறுவது போல் ஒரு ஷாட். இந்த ஷாட் சரியாக வராமல் சுமார் பத்து பனிரெண்டு முறையாவது அவரது தோளில் குதித்திருப்பேன். ஒரு முறையாவது அவர் முகம் சுளிக்க வேண்டுமே. அது மட்டுமல்ல. அந்தப் படத்தில் அவரை நான் எப்போதுமே கன்னத்தில் இடித்து இடித்துப் பேசுவது போல் என் வேடம் அமைந்திருந்தது. நடிக்கின்றபோது பொய்யாக இடிப்பதுபோல வரவில்லை. அந்த சமயத்தில் நிஜமாகவே அவரது கன்னத்தில் இடித்து.... அதற்கும் அவரிடம் ரியாக்ஷன் வரவில்லை. 'என்னடா மனுஷன்?' என்று எனக்கே போராகிவிட்டது.

'அசலி நகலி' என்றொரு இந்திப் படத்தில் (இது தமிழில் 'நானே வல்லவன்' என்று டப் செய்யப்பட்டு வந்தது) ரஜினிக்கு ஜோடியான நான், அவரைக் கன்னத்தில் இடித்து கேலி செய்வது போல் நடித்தேன். அப்போது ரஜினி, 'போக்கிரி ராஜாவில் இடிக்க ஆரம்பித்ததை இன்னும் நிறுத்தவில்லை போலிருக்கிறதே...?" என்று கன்னத்தைத் தடவியபடியே கேட்டார்.

'அசலி நகலி' படத்தில் மற்றொரு ஹீரோ சத்ருகன் சின்ஹா. காலை 9.00 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மாலை 4.00 அல்லது 5.00 மணிக்கு சாவகாசமாக வருவார். நானும் ரஜினியும் யார் முதலில் வருவது என்று போட்டிப் போட்டுக் கொண்டு சில சமயம் காலை 8.00 மணிக்கே வந்து விடுவோம். அந்த நேரம் யூனிட்டில் யாருமே வந்திருக்க மாட்டார்கள். எங்களுக்குக் காப்பி கொடுக்கக் கூட ஆள் இருக்காது. சத்ருகன் சின்ஹா வரும்வரை ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்தபடி இருப்போம்.

'ரங்கா' படத்தில் நடித்தபோது ரஜினி 'அந்தாகானூன்' இந்திப் படத்தில் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

'ரங்கா' படத்தின் பாடல் காட்சியொன்று அண்ணாசாலையில் படமாக்கப்பட்டது. நானும் ரஜினியும் பாடியபடியே ஓடி வருவோம். ரசிகர்கள் திரண்டு எங்களைத் துரத்துவார்கள். அவர்களைத் தவிர்ப்பதற்காக ஷாட் முடிந்ததும் காருக்குள் போய் அமர்ந்து கொள்வோம். அப்போது ரஜினி என்னிடம் இந்திப் பட வசனங்களைச் சொல்வார். வசனங்களைச் சொன்னாரா, அல்லது இந்தியில் பேசினாரா என்று எதுவும் புரியவில்லை. விழித்துக் கொண்டிருப்பேன்.

போட்டி

'நல்லவனுக்கு நல்லவன்' படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் போட்டி வந்துவிட்டது. ரஜினியுடன் நடிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒத்திகையில் செய்வது வேறு. ஷாட்டில் சில விஷயங்களைச் சேர்த்துக் கொள்வார். அதையும் பிடித்துக் கொண்டு அவரோடு போட்டியிட வேண்டும்.

எனக்கு தனி ஷாட் இருந்தால் ரஜினி தனக்கு ஷாட் இல்லையென்று ஓய்வாக உட்கார்ந்து விட மாட்டார். நான் என்ன நடிக்கிறேன் என்ற கவனித்துக் கொண்டிருப்பார். சில சமயம் என் நடிப்பில் லயித்துப் போய் 'அடேங்கப்பா' என்று விமர்சிப்பார்.

சிந்தனைச் சிற்பி

இடைவேளை நேரத்தில் ரஜினி ஆன்மிகம், தத்துவம் என்று பேசிக் கொண்டிருப்பார். நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லி, அவரை மடக்குவேன். பேசிக் கொண்டிருக்கும்போதே மௌனமாகி விடுவார். தீவிர யோசனையில் இருப்பார். அதனால் அவரை 'சிந்தனைச் சிற்பி' என்று கிண்டல் செய்வேன்.

இதே படத்தின் 'உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" என்ற பாடல் காட்சி முட்டுக்காடு அருகில் படமாக்கப்பட்டது. படகில் நானும் ரஜினியும் பாடியபடி செல்வது போல் லாங் ஷாட்டில் வரும். அப்போது நானும், ரஜினியும் பேசிக் கொண்டிருந்தோம். ரஜினி, "வாழ்க்கையில் என்ன இருக்கிறது? சாமியாரா போயிடலாமா என்று நினைக்கிறேன்" என்றார்.

சாமியார்

நான் அதற்கு, "சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கீங்க. இதைவிட நிச்சயமாக வேறு நிலைக்குப் போக மாட்டீங்க. நீங்க சாமியாரா மாறுவது பற்றி எனக்கு நம்பிக்கையில்லை" என்றேன். பாடல் வரிகளுக்கு வாயசைப்பதற்கு பதில் இதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.

நகைச்சுவை வசனம் என்பது எல்லோருக்கும் வரக்கூடியதல்ல. இதில் ஆக்ஷன், ரியாக்ஷன் மிகச் சரியாக இருந்தால்தான் ரசிகர்கள் அனுபவித்துச் சிரிக்க முடியும். ரஜினி நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் போது நான் ஜாக்கிரதையாக இருப்பேன். நூலிழை கூடப் பிசகாமல் ரியாக்ட் செய்வார். அவருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் அது போல் காட்சிகளில் நடிக்கும்போது உற்சாகமாக இருக்கும். 'ஊர்க்காவலன்' படத்தில் எங்களது நகைச்சுவை நடிப்பு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது.

ரஜினியை சினிமாவில் உள்ள எல்லோருமே விரும்புவார்கள். அதற்குக் காரணம், மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்துவிட்டு அவர்களைப் பாரபட்சமின்றிப் பாராட்டுவார். பிறரைப் பாராட்டும் விஷயத்தில் ரஜினியை வள்ளல் என்றே சொல்லலாம்.

நான் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் சரியாகச் சாப்பிட மாட்டேன். எனக்குக் குறைந்த ரத்த அழுத்தம் உண்டு. அதனால் சாப்பிடாததன் பலகீனம் சில சமயம் மயக்கமாகிவிடும். ரஜினி என்னிடம் அடிக்கடி உபதேசிப்பது, "நன்றாகச் சாப்பிடுங்கள்" என்று. என்னை உற்சாகப்படுத்தி சாப்பிட வைப்பதற்காக, "மயங்கி விழுந்திடுங்க. இன்றைக்கு ஷ¨ட்டிங் ரத்தாயிடும்" என்று கிண்டல் செய்வார்.

ரஜினியின் ஸ்டைல் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது கண்களில் இருக்கும் ஈர்ப்பு சக்தி எவரையும் கவர்ந்துவிடும்.

ரஜினியைப் போலவே அவரது மனைவி லதாவுக்கும் நல்ல சுபாவம். நாங்கள் இருவரும் நல்ல சிநேகிதிகள். அடிக்கடி சந்தித்துப் பேசுவோம்" என்றார் ராதிகா.

ரஜினிக்கு கோபாலி ஆசிரியர்

பிலிம் சேம்பர் திரைப்படக் கல்லூரியில் ரஜினி நடிப்புக்காக பயிற்சி பெற்றபோது, அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் எஸ்.கோபாலி.

இவர் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் (National School of Drama) நடிப்புக்கலை பற்றிய பயிற்சியில் பதினாறு படங்களில் பதின்மூன்றில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை நிகழ்த்தியவர். இந்த பயிற்சிக்காக அந்த ஆண்டில் தென் இந்தியாவிலிருந்து சென்றவர் இவர் மட்டுமே.

கோபாலி, திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு பயன்பட வேண்டமென்பதற்காக பி.என்.ரெட்டி உட்பட அன்றைய திரையுலகப் புள்ளிகள் பலரும் கேட்டுக் கொள்ள, அதற்காக அப்போதே அசோக் லேலண்டில் 1500 ரூபாய் சம்பளம் மற்றும் வசதிகளை உதறிவிட்டு வந்தவர். சென்னையில் தொலைக்காட்சி தொடங்கியபோது நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்து நான்காண்டுகளுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார்.

இயக்குநர் ஸ்ரீதர் 'சித்ராலயா' பத்திரிகை நடத்தியபோது அதில் திரைப்பட விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். அதில் மட்டுமல்ல, பல ஆங்கில நாளிதழ்களிலும் எழுதியிருக்கிறார்.

கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்: "பிலிம் சேம்பர் திரைப்படக் கல்லூரியில் நான் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தபோது ரஜினிக்கு அது இரண்டாமாண்டு (1974). நான் முதன் முதலாக வகுப்பு நடத்துகையிலேயே ரஜினி உட்பட மற்ற மாணவர்களையும் அழைத்து ஒரு தேர்வு வைத்தேன். அதை ஆங்கிலத்தில் 'Improvisation' (இட்டுக்கட்டி நடித்தல்) என்பார்கள்.

மாணவர்களிடம் நான், "பறந்து செல்லும் விமானமொன்று கீழே விழுந்து விடுகிறது. அந்த விமானத்தில் நீங்களும் பயணம் செய்கிறீர்கள். விமானம் கீழே விழுந்தாலும் உங்களில் யாரும் சாகவில்லை. விமானம் கீழே விழுந்த பின் நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள்?" என்று கூறி அவர்களின் கற்பனைக்கு முப்பது நிமிடம் ஒதுக்கினேன்.

முப்பது நிமிடங்களுக்குப் பின் ரஜினி தயாராய் வந்து நின்றான். அவனது நடிப்பும், துடிப்பும் அருமையாய் இருந்தது. முதலில் பைலட்டாக (விமான ஓட்டி) நடித்தான். திடீரென்று அவனைப் பயணியாக நடிக்கச் சொன்னேன். இப்படி கேட்ட பாத்திரங்களில் அனைத்தையும் செய்து காட்டினான். முதல் வகுப்பிலேயே அவனை எனக்குப் பிடித்துப் போயிற்று.

என்னைப் பொறுத்தவரையில் (திரைப்படக் கல்லூரி) மாணவர்களுக்கு ஆசிரியரிடம் பயம் இருக்கக் கூடாதென்று நினைத்தேன். நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள்ள வந்துள்ளவர்களுக்கு ஆசிரியர்கள் தங்கள் அறிவையோ, அதிகாரத்தையோ திணிக்கக் கூடாது என்று நினைத்தேன்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்கள்

வரும் இதழில்.....

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information