Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... எஸ். கோபாலி (பாகம் 18A)

அதனால் அவர்களிடம் இயல்பாய்ப் பழகினேன். வகுப்பு முடிந்து இடைவேளையில் எனது சிகரெட் பாக்கெட்டை மேஜையில் எடுத்துப் போட்டு மாணவர்களை எடுத்துக் கொள்ளச் சொன்னேன். ரஜினியும் வந்து எடுத்துக் கொள்வான்.

எனது வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டை மாணவர்களோடு பகிர்ந்து கொள்வேன். ரஜினி அடிக்கடி என்னோடு அமர்ந்து கொள்வான். எங்கள் வீட்டு உணவை தாராளமாகவே எடுத்துக் கொள்வான். அதனால் எனக்கு சில சமயம் சாப்பாடு குறைந்து போகும்.

அதற்காக ரஜினி யாரிடமாவது சைக்கிள் வாங்கிக் கொண்டு டிரைவ்-இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குப் போய் எனக்குப் பிடித்த ரவா தோசை வாங்கி வந்து தருவான். சில சமயம் வீட்டிற்கே வருவான். அவனுக்கு எங்கள் வீட்டு ஊறுகாய் என்றால் உயிர். வெறும் ஊறுகாயைக் கூட அள்ளிப் போட்டுக் கொள்வான். என் குழந்தை அடம் பிடித்தால் அவளைச் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவான்.

போயே போச்சு தொப்பை

ரஜினிக்கு அப்போது சில விஷயங்களில் தாழ்வு மனப்பான்மை இருந்தது. தான் கறுப்பாக இருக்கிறோம் என்பது ஒன்று. மற்றொன்று உடல் நல்ல பருமனாக, தொப்பையுடன் இருந்தது. இதை நான் கவனித்து உடனே தொப்பையைக் குறைக்கச் சொன்னேன். என்ன செய்தானோ ஏது செய்தானோ, ஆச்சர்யப்படும் வகையில் தொப்பை குறைந்து மிடுக்கான உடம்பாகிவிட்டது அவனுக்கு.

கறுப்பு நிறமென்பது ஒரு இழிவான விஷயமே அல்ல என்று அவனுக்கு உணரச் செய்து, தினமும் கண்ணாடியை அதிக நேரம் பார்க்கச் சொன்னேன். ரஜினி கறுப்பென்றாலும், அந்த கறுப்பிலும் ஒரு தேஜஸ் இருந்தது. ஆனால் தான் கறுப்பாய் இருப்பதால் மற்றவர்கள் கேலியாகப் பார்க்கிறார்களே என்ற எண்ணம் அவன் மனதை பாதித்தது.

"மற்றவர்கள் கேலி செய்வதைக் கண்டு கொள்ளாதே. உன்னைப் பற்றி உனக்கே இருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் போக்கிக் கொள். தினமும் கண்ணாடியைப் பார்க்கும்போது 'கறுப்பு நிறம் நமக்கு அழகுதான்' என்று நினைத்துக் கொள்'' என்று ரஜினிக்குப் பாடம் நடத்துவது போல் சொன்னேன்.

தன்னம்பிக்கை தலையெடுத்தது

இதனால் நாளடைவில் ரஜினியிடம் தேவையற்ற கூச்ச சுபாவம் காணாமல் போனது. தைரியமும், தன்னம்பிக்கையும் அவனுள் தலையெடுத்தன. மற்றவர்களின் கேலிப் பார்வையை அவன் லட்சியம் செய்வதே இல்லை.

ரஜினி படித்தது கன்னட வகுப்பில் என்றாலும் தமிழில் அவனுக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஆண்டு இறுதியில் தமிழ் மாணவர்களின் நாடகம் நடந்தபோது ஏதாவது ஒரு வகையில் 'நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்' என்றான் ரஜினி. அதன்படி மேக்கப் விஷயங்கள் மட்டுமின்றி, ஒலி-ஒளி அமைப்பை அவனையே பார்க்கச் செய்தேன்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க பாலச்சந்தர், ஸ்ரீதர், சவுகார் ஜானகி, பானுமதி ஆகியோரெல்லாம் வந்தார்கள்.

அப்போது நான் பாலச்சந்தரிடம் ரஜினியை ஒரு பொய் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன் என்று கூறிய கோபாலி, அந்த சுவாரஸ்யமான சந்திப்பு பற்றிக் கூறினார். அது என்ன?

இரண்டு தடவை பார்த்தால்....

"ரஜினி ஒரு நல்ல மாணவன். அது மட்டுமல்ல. உனது ரசிகனும் கூட. 'அவள் ஒரு தொடர்கதை' படத்தை 17 முறை பார்த்திருக்கிறான்" என்று கூறி ரஜினியை பாலச்சந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.

அதைக் கேட்டு அருகில் இருந்த ரஜினி, என்னிடம் மெதுவாக, "சார் நான் இரண்டு தடவைதான் அந்தப் படம் பார்த்தேன்" என்றான். நான் அவனது காலை நாசூக்காக மிதித்துப் பேசாமல் இருக்கச் சொன்னேன்.


பாலச்சந்தர் என்னைத் தனியாக அழைத்துப் போய் "17 தடவையா பார்த்தான்?" என்று சந்தேகமாகக் கேட்டதற்கு, நான் 'நிச்சயமாய்' என்று அடித்துக் கூறினேன். பாலச்சந்தர் திருப்தியுடன் ரஜினியை வரச் சொல்லிவிட்டுப் போனார்.

அழுத்தமான அபிப்ராயம்

நான் ரஜினியைத் தனியே அழைத்து, "பாலச்சந்தரிடம் அறிமுகப்படுத்தும்போது உன்னைப் பற்றி அழுத்தமான அபிப்ராயம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்படிப் பொய் சொன்னேன். அதை நீயே ஏன் கெடுத்துக் கொள்கிறாய்?" என்று கண்டித்தேன். நான் அவனுக்காகப் பொய் சொன்னது கண்டு மிகுந்த மகிழ்சியடைந்தான்.

ரஜினி பாலச்சந்தரைப் பார்த்துவிட்டு மறுநாள் வந்தான். "சின்ன வேஷம் கொடுத்திருக்கிறார்" என்றான்.

"எதுவானாலும் செய்" என்றேன். அப்போது பாலச்சந்தரின் கோபம் பற்றியும் சொன்னேன். "படப்பிடிப்பில் பாலச்சந்தர் சில சமயம் உன்னைத் திட்டும்போது, சுளீர் என்று கோபம் வரக்கூடும் உனக்கு. அதனால் மிக மிகப் பொறுமையாக இரு" என்று அட்வைஸ் செய்தேன். ரஜினி அதன்படியே பொறுமையாக இருந்து நல்ல பெயர் வாங்கினான்.

'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் ரஜினி வந்து, "சார், நீங்க அவசியம் படப்பிடிப்பிற்கு வரணும்" என்று கேட்டுக் கொண்டான். நான் மறுத்துவிட்டேன். "கல்லூரியோடு என் வேலை முடிந்தது. இனி உன் முன்னேற்றம், உன் திறமையெல்லாம் உனது கையில்தான்" என்று கூறி அனுப்பிவிட்டேன்.

'அடுத்து கவிக்குயில்' படத்தில் நடிக்கப் போவது பற்றிச் சொன்னான். "பஞ்சு அருணாசலம் மென்மையானவர், எளிமையானவர். அதனால் அவரைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை" என்று கூறினேன்.

மூன்று, நான்கு படங்களுக்குப் பின், ரஜினி வழக்கம் போல் தான் நடிக்கும் படங்களைப் பற்றிச் சொல்ல வந்தபோது, "இப்படி அடிக்கடி என்னைத் தேடி வரும் வேலையை இத்தோடு விட்டு விடு. நீ நல்ல நிலைக்கு வந்துவிட்டாய். இனிமேல் நீ யாரையும் யோசனை கேட்கத் தேவையில்லை. இப்படி அடிக்கடி யோசனை கேட்டால் உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லாமல் போகும்" என்று நல்லவிதமாகக் கூறி அனுப்பினேன்.

முள்ளும் மலரும்

அப்புறம் நான் ரஜினியை அதிகம் சந்திக்கவில்லை. ஒரு சமயம் 'முள்ளும் மலரும்' பிரத்யேகக் காட்சியைப் பார்க்க பிரிவியூ தியேட்டருக்குப் போயிருந்தேன். தியேட்டருக்கு வெளியே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

திடீரென்று என் முதுகுப் பக்கமாக யாரோ தூக்குவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தால் ரஜினி மேக்கப்பில் இருந்தான். என் நலம் விசாரித்தவன், 'முள்ளும் மலரும்' படத்தில் தான் கதாநாயகனாக நடித்திருப்பதாகச் சொன்னான். நான் சந்தோஷப்பட்டேன். "படம் பார்த்துவிட்டுப் பேசுகிறேன்" என்றேன் ரஜினியிடம்.

"மன்னிக்கணும் சார். இப்போ 'நினைத்தாலே இனிக்கும்' ஷ¨ட்டிங் இருக்கு இரவு முழுக்க போகும்" என்று கூறி விடைபெற்றான். அருகில் இருந்த பாலுமகேந்திரா, "நல்லா நடிக்கிறார். நல்ல திறமை இருக்கு. வெளியூர் படப்பிடிப்பில் உங்களைப் பற்றியே ரஜினி பேசறார்" என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.

பெருமைக்குரிய மாணவன்

ரஜினி எனது பெருமைக்குரிய மாணவன் என்பது மட்டுமல்ல, கல்லூரி வாழ்வில் உடன் படித்த மாணவிகளை அவன் ஏறெடுத்தும் பார்த்தது இல்லை. அங்கு பெண்கள் என்றாலே ஒதுங்கி இருந்தான். பயிற்சிக்காக வந்தவன் அதில் மட்டுமே கவனம் செலுத்தினான். தன்னுடைய திருமணத்திற்கு வரவேண்டுமென நேரில் வந்து ரஜினி அழைப்பு விடுத்தான். ஆனால் என்னால் செல்ல முடியவில்லை.

கஷ்டத்தை நீக்கிய கருணை வடிவம்

ஒரு சமயம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலுள்ள எனது நண்பரொருவர், "உங்களுக்குத்தான் ரஜினியைத் தெரியுமே, நீங்கள் சொன்னால் உதவி செய்வார்" என்று கேட்டார்.

ஒரு கடிதம் மட்டும் அவர் மூலம் கொடுத்தனுப்பினேன். கடிதத்தைப் பார்த்த ரஜினி, "கோபாலி சாரா எழுதியிருக்கிறார்?" என்று பார்த்தவன், மறுநாள் அவரை வரச் சொல்லி இருக்கிறான். மறுநாள் போனால் தட்டில் வெற்றிலை பாக்கு, பழத்துடன் நிறைய பணமும் கொடுத்தனுப்பினான்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்கள்

வரும் இதழில்.....

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information