ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம் (பாகம் 36)
'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. ரஜினி, மாதவி சம்பந்தப்பட்ட காட்சி படமானது. காட்சிப்படி ரஜினி அணிந்திருந்த பேண்ட், சர்ட் எல்லாம் சகதியாக இருக்க வேண்டும். மேக்கப் மேனிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னபோது, அது ரஜினி காதில் விழுந்துவிட்டது. அடுத்த நிமிஷம் அவர் ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடை சகதியை அள்ளி மேலே பூசிக் கொண்டு "நான் ரெடி சார்!" என்றார்.
ஆம். ரஜினியின் ஆசை நிறைவேறியது. நிறைவேற்றியவர் இயக்குநர் ராஜசேகர்.
ராஜசேகர் மேலும் கூறுகிறார்:
அவரது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அங்கேயே 'மாவீரன்' என்ற தலைப்பைக் கொடுத்தேன்.
இதன் படப்பிடிப்பு மைசூரில் நடந்தபோது ஒரு காட்சியில் ரஜினிகாந்த் அம்பிகாவை குதிரையில் ஏற்றிக் கொண்டு போகும்போது அம்பிகா குதிரையிலிருந்து கீழே விழுந்து இடுப்பில் பலத்த அடிப்பட்டு, படப்பிடிப்பு ரத்தானது பற்றிய செய்தி தினசரி பத்திரிகைகளில் கூட வந்திருந்தது.
பத்திரிகையில் வராத செய்தி இது. ரஜினிக்கு முன் பக்கம் கால்களை இருபுறமும் தொங்கவிடாமல் ஒரே பக்கத்தில் கால்களைப் போட்டவாறு குதிரையில் அமர்ந்திருந்தார் அம்பிகா. குதிரை சென்ற வேகத்தில் அம்பிகா பாலன்ஸ் இழந்து ரஜினியின் கையைப் பிடித்தபடியே கீழே விழுந்திருக்கிறார். அதனால் ரஜினியும் கீழே விழ வேண்டியதாயிற்று. அவருக்கும் இடுப்பில் அடிப்பட்டு உள்காயம் ஏற்பட்டிருந்தாலும், வலியை வெளியே சொல்லாமல், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடித்தார். ஆனால் நடக்கும்போது மட்டும் கால்களில் கம்பீரத்தைக் கொண்டு வரமுடியவில்லை. தனது வேதனையை யாரிடத்திலும் வெளிப்படுத்தாமல் தன் இருப்பிடத்துக்குச் சென்று தானே சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.
நடிகர்களில் ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம். ஒருமுறை கொடைக்கானலில், 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பு. ரஜினி, மாதவி சம்பந்தப்பட்ட காட்சி படமானது. காட்சிப்படி ரஜினி அணிந்திருந்த பேண்ட், சர்ட் எல்லாம் சகதியாக இருக்க வேண்டும். மேக்கப் மேனிடம் அதற்கு ஏற்பாடு செய்யச் சொன்னபோது, அது ரஜினி காதில் விழுந்துவிட்டது. அடுத்த நிமிஷம் அவர் ரோடு ஓரத்தில் இருந்த சாக்கடைச் சகதியை அள்ளி மேலே பூசிக் கொண்டு "நான் ரெடி சார்!" என்றார். யூனிட்டில் இருந்த அத்தனை பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
ஏற்கெனவே இன்னொரு நடிகர் விஷயத்தில் எங்களுக்கு நேர்மாறான அனுபவம். அவரது பாண்டில் சகதியைப் பூசச் சென்றபோது அவர் தடுத்து நிறுத்தி, "எனக்கு இந்த சேறு சகதியெல்லாம் அலர்ஜி! பான் கேக்கை வச்சு சகதி பூசின மாதிரி செய்!" என்று சொல்லிவிட்டார். அதையும் இதையும் ஒப்பிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்" என்றார் ராஜசேகர்.
கடுமையான சோதனைக் காலம்
வாழ்க்கையில் மிகப் போராடி புகழின் உச்சியை எட்டிய திரைப்படக் கலைஞர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பகுதியில் சோகம், கடுமையான சோதனைகள் இருக்கும்.
எம்.ஜி.ஆருக்கு 1958-ல் நாடக மேடையில் கால் ஒடிந்த போதும், 1967-ல் துப்பாக்கியால் சுடப்பட்டபோதும் எம்.ஜி.ஆர். அவ்வளவுதான் என்றார்கள். ஆனால் இந்த விபத்து, ஆபத்துகளிலிருந்து எம்.ஜி.ஆரின் உடலும், உயிரும் மீண்டு முன்னைவிட புகழ் பெற்றார்.
ரஜினிக்கும் அவரது வாழ்வில் ஒரு ஆறுமாத காலம் இருண்ட காலமாக அமைந்தது. அது 1979-ல். அப்போது அவரது உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்ட அவரது அபரிமிதமான வளர்ச்சியைப் பொறுக்க முடியாத சிலர், அவருக்கு ஏற்பட்ட நலக்குறைவைப் பயன்படுத்தி ஒழித்துக் கட்ட முனைந்தார்கள்.
நெருக்கமான நட்பில் இருந்தவர்கள்கூட இந்த நேரத்தில் ரஜினிக்கு உதவாமல் ஒதுங்கிப் போனார்கள். 'கடவுள் கூட ரஜினிக்கு உதவமாட்டார்' என்று சொல்லப்பட்ட நேரத்தில் அன்பு காட்டி ஆதரித்தவர்...
யார்...?
அடுத்த இதழில்
Previous |
|
Next |
|