Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட் (பாகம் 37)

'குடிக்கிறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் வேலை நேரத்தில் குடிக்கிறது சரியில்லே'' என்று நான் கூறியதை ரஜினி ஏற்றுக் கொண்டு தலையசைத்தான்.

Rejinavincentரஜினியை அன்பு காட்டி ஆதரித்தவர் திருமதி. ரெஜினா வின்சென்ட். ரஜினியின் அகராதியில் 'அம்மா' 'மம்மி' என்றால் அது திருமதி. ரெஜினினா வின்சென்ட் மட்டுமே. அது இன்றைக்கும் பொருந்தும். 'பெஸ்ட் அண்ட் கிராம்டன்' என்ற பொறியியல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற வின்சென்ட் அவர்களின் துணைவியார் திருமதி. ரெஜினா வின்சென்ட்.

இவர் ஒரு சமூக சேவகி. மதர் தெரசா சமூக நல அமைப்பின் சென்னை நகர பொறுப்பாளராக இருப்பவர். இயற்கை வைத்தியத்தில் பல்வேறு பட்டங்களைப் பெற்றவர் என்றாலும், அதைத் தொழிலாகக் கொள்ளாமல் தெரிந்தவர்கள், நண்பர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே சிகிச்சை செய்கிறார்.

''நான் ஒரு டாக்டர் என்பது ரஜினிக்குகூட தெரியாது என்று நினைக்கிறேன்'' என்று குறிப்பிட்ட திருமதி. வின்சென்ட், இருபது ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சிந்தித்து ரஜினியின் நட்பு ஏற்பட்ட அந்த நிகழ்ச்சிகளைச் சொல்லத் தொடங்கினார். தாய்மை பாசத்துடன் அவர் ரஜினியை தன் மகனாகவே பாவித்து பழகிய விதத்தால் ஒருமையிலேயே குறிப்பிட்டுப் பேசினார்.

''பெஸ்ட் அண்ட் கிராம்டன் நிறுவனத்தில் என் கணவர் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்ததால், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகர் அருகில் எங்களுக்கு ஒரு பெரிய பங்களா கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த பங்களா, சுற்றிலும் தோட்டம், அழகிய புல் தரையுடன் நாகரீகமாகக் காட்சி அளித்த பங்களா அது. (அந்த பங்களா இன்று அடுக்குமாடி கட்டிடமாகி விட்டது. திருமதி. ரெஜினாவின் குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து வாலஸ் கார்டன் பகுதியிலுள்ள சொந்த வீட்டிற்கு குடியேறி விட்டனர்.)

ஏ.பி.நாகராஜன் 'மேல் நாட்டு மருமகள்' படத்திற்காக ஒரு பங்களா தேடிக் கொண்டிருந்தார். நாங்கள் வசித்த பங்களாவைப் பற்றிக் கேள்விப்பட்டு வந்தார். சினிமா படப்பிடிப்பிற்கு நாங்கள் அனுமதியளிப்பதில்லை என்றாலும், அவரது படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒத்துக் கொண்டோம்.

என் கணவரிடம் பணி புரிந்தவரான ஜேப்பியார், அந்த உரிமையில் தனது படங்களின் படப்பிடிப்பை எங்களது பங்களாவில் நடத்திக் கொண்டார்.

Rajini in Dharmayudhamஇதெல்லாம் தெரிந்த 'ஜாக்பாட்' சீனிவாசன் ஒரு நாள் என்னிடம் வந்து, ''தர்மயுத்தம்' என்ற எனது படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகிய பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அதனால் மூன்று நாட்களுக்கு உங்களது பங்களாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வேண்டும்'' என்று கேட்டார். மூன்று நாட்கள் தானே என்று நானும் அனுமதித்து விட்டேன்.

என் வீட்டில் என்ன படப்பிடிப்பு நடக்கிறது, யார் நடிக்கிறார்கள் என்பதிலெல்லாம் நான் அக்கறை கொண்டதில்லை. என் பிள்ளைகள் அவர்களது மனைவியர் படப்பிடிப்பு பார்க்க ஆசைப்பட்டார்கள் என்ற காரணத்திற்காகவே அனுமதித்திருந்தேன்.

இப்படி 'தர்மயுத்தம்' படப்பிடிப்பு நடந்த மூன்றாம் நாள் காலையில், நான் சிவாஜிகணேசன் சாலையிலுள்ள 'பிரேம் நகர்' என்ற பெயரில் 'அன்னை தெரசா இல்லம்' சென்னை கிளையினைத் திறந்து வைக்கச் சென்றிருந்தேன். விழா முடிந்து பிற்பகலுக்கு மேல் வீடு திரும்பினால் படப்பிடிப்பு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. படப்பிடிப்பு சாதனங்கள் ஒவ்வொன்றாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தது. தயாரிப்பாளர் சீனிவாசன் மட்டும் சோர்வாக உட்கார்ந்திருந்தார்.

என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து, ''அம்மா...! நாளைக்கு ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்...'' என்று இழுத்தார். என்ன விஷயமென்று கேட்டேன். இன்னைக்கு படப்பிடிப்பு நடந்தபோது மதியம் ஹ¨ரோ (ரஜினிகாந்த்) மது அருந்தி வந்து விட்டார். வந்தவர் 'ஷ¨ட்டிங்' கை கேன்சல் பண்ணிடுங்க'ன்னு சொல்லிட்டு போயிட்டார்'' என்றார். அவரது நிலைக்காக இரங்கி மறுநாளும் படப்பிடிப்பு நடத்த ஒத்துக் கொண்டேன்.

குடும்பப் பணிகள், வெளியில் சமூக பிரச்னைகள் இப்படி எப்போதும் பரபரப்பாக இருந்த எனக்கு மறுநாள் வெளியில் வேலை இல்லை. வீட்டிலேயே இருந்தேன். அதனால் மருமகள்களுடன் நானும் படப்பிடிப்பைப் பார்க்க உட்கார்ந்து விட்டேன். என் கணவருக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லையென்றாலும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

படப்பிடிப்பு கீழ்த்தளத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ரஜினி நடித்ததை நான் வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். உடன் நடித்தவர்களைவிட ரஜினி வேகமாக வசனம் பேசியதும், நடிப்பில் ஸ்டைலும் எனக்கு புதிதாகத் தெரிந்தது. நான் பார்த்த வரையில் ரஜினி ஒரு முறை கூட 'ரீடேக்' (திரும்ப படமாக்குவது) போகவில்லை. வேகமாக காட்சிகள் படமாயின. இதைப் பார்த்து ரஜினி மீது இனம் புரியாத அன்பு எனக்கு ஏற்பட்டது.

படப்பிடிப்பு இடைவேளையில் நானும், மற்றவர்களும் மாடிக்கு செல்ல புறப்பட்டோம். தூரத்தில் இருந்த ரஜினி என்னைக் கவனித்து விட்டு வேகமாக ஓடிவந்து ''அம்மா! நான் உங்களோடு பேசணும் போல் இருக்கு. நிறைய விஷயங்கள் பேச வேண்டும்'' என்றான்.

உடனே பதிலுக்கு, ''நானும், உனக்கு நிறைய அட்வைஸ் பண்ண விருப்பப்படறேன்'' என்றேன். நான் அப்படி பதில் கூறியதும், ரஜினி சட்டென்று ஒரு மாதிரியாக தலையை சாய்த்துப் பார்த்தான். என்னை உற்றுப் பார்த்து விட்டு, ''சரியம்மா, நான் தினமும் வந்து உங்களோடு பேசுவேன்'' என்று கூறியதைக் கேட்டு நான் தலையசைத்து போய்விட்டேன்.

கிட்டத்தட்ட இதை நான் மறந்தே போனேன். ஒரு வாரத்திற்கு பின் பிப்ரவரி 22-ந் தேதி வியாழன் என்று நினைக்கிறேன். அப்போது நான் மாடியில் இருந்தேன். கீழே என் மகள் பமேலா வயலின் வாசித்துக் கொண்டிருந்தாள். அம்மா டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். கீழே ரஜினி வந்திருப்பதாக மகள் வந்து சொன்னாள்.

நான் அதற்கு முன் சினிமாக்காரர்களுடன் பேசியதில்லை. பேசுவதற்கு என்ன இருக்கிறது. நம் பையன்கள் இருந்தால் ரஜினியுடன் பேசுவார்களே என்ற எண்ணத்தில் கீழே வந்தேன். ரஜினி பின்புறமாகச் சென்று அங்கு புல்வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

பங்களாவின் பின்புறம் நீண்ட புல்வெளியுடன் கொண்ட அமைதியான இடம் அது. அங்கு ஊஞ்சலொன்றும் இருக்கிறது. நான் ரஜினியின் அருகில் சென்றதும், சற்றும் தாமதிக்காமல் நெடுஞ்சாண்கிடையா காலில் விழுந்தான். நான் பதறினேன்.

''என்னப்பா, இதெல்லாம்? என்ன வேண்டும்?'' என்று அன்போடு எழுப்பிக் கேட்டேன். ''எனக்கு ஆசீர்வதித்து அட்வைஸ் பண்ணுங்க'' என்று சொன்னான்.

''நீ ஏதோ பேசணும்னு சொன்னியே, அதைச் சொல்லு?'' என்று நான் கேள்வி எழுப்ப, 'இல்லம்மா, நீங்க முதல்ல சொல்லுங்க, அப்புறம் பேசறேன்'' என்றான். கைகளைக் கட்டியபடி பவ்யமாக.

''குடிக்கிறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் வேலை நேரத்தில் குடிக்கிறது சரியில்லே'' என்று நான் கூறியதை ரஜினி ஏற்றுக் கொண்டு தலையசைத்தான்.

''இனிமே நான் வேலை நேரத்தில் நிச்சயமாக குடிக்க மாட்டேன்'' என்று உறுதி கூறிய ரஜினி, 'எனக்கு எத்தனையோ பேர் குடிக்கக் கூடாது என்று அட்வைஸ் செய்திருந்தாலும், அதை நான் பொருட்படுத்தவில்லை, இப்ப நீங்க சொன்ன பிறகுதான் வேலை நேரத்தில் குடிக்கக் கூடாதுங்கற உறுதி மனசில் வந்திருக்கு' என்றான். அவனை ஆசுவாசப்படுத்தி அமரச் சொன்னேன். தனது மனக் குறைகளையெல்லாம் சொன்னான்.

ரஜினியின் மனக்குறை என்ன?....

அடுத்த இதழில்...

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information