Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

  Join Us

Rajini Story

ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா? (பாகம் 41)

மனிதனுக்கு சோதனைகள் எதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. அப்படி சோதனைகள் வந்துவிட்டால், அவனுக்கு உதவிகள் செய்து அதில் இருந்து மீள வைக்க வேண்டுமே தவிர, சோதனைக்குள்ளேயே போட்டு புதைத்துவிடக் கூடாது.

திருமதி ரெஜினா வின்சென்ட், ரஜினி பற்றி மேலும் கூறுகையில்...

ரஜினி ஒரு நடிகையின் மீது காதல் கொண்டான். அந்த நடிகையை ஒரு நாள் சந்தித்து தன் ஆசையைத் தெரிவிக்க விரும்பி நகையொன்று வாங்கினான். அதை என்னிடம் காட்டி, விபரம் சொன்னபோது, ''நீ விரும்புவது அந்தப் பெண்ணுக்கு தெரியுமா?'' என்று கேட்டேன்.

''தெரியாது'' என்றான்.

''உனக்கு விருப்பம் இருக்கிறது-அவளுக்கு விருப்பம் இல்லாமல் போனால் அதை உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா? இருவரும் ஒரே துறையில் இருப்பவர்கள். நாளைக்கு நீ அவளிடம் சம்மதம் கேட்டு, அவள் மறுக்கப் போய் அப்புறம் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் அவள் சங்கடப்படுவாளே, உனக்கும் சங்கடம் ஏற்படும்-இது தேவைதானா? அவளாக தன் மனதில் உள்ளதைச் சொல்லாத வரை நீ பொறுமையாக இரு'' என்றேன்.

ரஜினி அதைக் கேட்டு அமைதியாகி விட்டான். மறுபடியும் அதைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. அந்த நடிகையிடம் அதைப்பற்றி பேசினானா என்றும் தெரியவில்லை.

ரஜினியிடம் எந்த அளவுக்கு வேகமும், முரட்டுத்தனமும் இருந்ததோ, அதே அளவில் பயமும் இருந்தது சில விஷயங்களில்.

'தர்மயுத்தம்' படத்தின் கிளைமாக்ஸில் ரஜினியை மரத்தில் கட்டிப் போட்டு மரத்தைச் சுற்றி நெருப்பு வைத்துவிடுவார்கள் வில்லனின் ஆட்கள். அந்தக் காட்சியில் ரஜினி நடிக்க வேண்டுமென்றபோது, ''நடிக்க மாட்டேன்'' என்று மறுத்தான்.

காரணம், ''என்னைக் கொல்ல சதி பண்றாங்க. மரத்தில் கட்டி கொளுத்திடுவாங்க'' என்றான். நான் சமாதானம் கூறி ரஜினிக்கு துணையாக என்னுடைய கூர்க்காவை அனுப்பி வைத்தேன்.

படப்பிடிப்பு நடந்த அடையாறு ஆலமரம் பகுதியில் கூட்டம் கூடிவிட, அவர்களில் சிலர் கேலி-வேடிக்கை பேச்சுடன் நெருங்கி வரும்போது-ரஜினி கோபமுற்று அடிக்க முனைந்தால்... கூர்க்கா அவனது காதில், ''அம்மா யாரையும் அடிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க'' என்றால் அமைதியாகி விடுவான்.

''அன்னை ஓர் ஆலயம்'' படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளை முதுமலையில் படமாக்க வேண்டியிருந்தது. அதற்காக தேவர் பிலிம்சார் டாக்டர் செரியன் மூலம் என்னை அணுகினார்கள். நான் ரஜினியிடம் சமாதானப்படுத்தி படப்பிடிப்பிற்குப் போகச் சொன்னேன்.

''இதோ பார்! நான் அம்மா இல்லையா. அம்மான்னா கடவுள் மாதிரி இல்லையா?'' என்று கேட்டதும், ரஜினி ''ஆமாம்மா! நீங்க சொல்றதை தட்ட மாட்டேன்'' என்று சொல்லிப் புறப்பட்டான். போன ஜோரில் ரஜினி சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து திரும்பிவிட்டான். நல்ல பிள்ளையாக வந்தது போலிருந்தது.

ஆனால் போன இடத்தில் ரஜினி நடந்து கொண்டவிதம் வேறுமாதிரியாக இருந்தது. அங்கு உடன் நடித்த நடிகர் ஒருவரை கோபத்தில் (அவர் பேசிய விஷயம் ரஜினிக்குப் பிடிக்கவில்லையாம்) அடித்திருக்கிறான்.

அதுமட்டுமல்ல, சிறுத்தையுடன் சண்டையிடுவது போல் உள்ள காட்சியில் ரஜினி சிறுத்தையின் வாலைப் பிடித்திழுத்துத் தூக்கி கிறுகிறுவென்று சுற்றி வீசியிருக்கிறான். பாவம் சிறுத்தை. அதன் நகங்களைப் பிடுங்கி, வாயையும் தைத்துவிட்ட நிலையில் இப்படித் தூக்கி விசினால் தாங்குமா?

ரஜினியிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, தவறை உணர்ந்து வருந்தினான். இப்படி முரட்டுத்தனமாக அவன் நடந்து கொள்வதை யாராவது சுட்டிக்காட்டினால் வருத்தப்படுவது அப்போது அவனிடம் சகஜமாக இருந்தது.

ஒரு சமயம் மனோதத்துவ நிபுணரும், டென்னிஸ் வீரர் அமிர்தராஜ் சித்தியுமான திருமதி.சாந்தி கருணாகரன் ரஜினியைப் பரிசோதிக்க விரும்பினார். அங்கே சென்ற ரஜினி ஸ்டைலாக உட்காந்திருக்கிறான். அவனிடம், ''உன் பெயரென்ன?'' என்று சாந்தி கருணாகரன் கேட்டிருக்கிறார். ''சிவாஜிராவ் கெய்க்வாட்'' என்று ரஜினி ஸ்டைலாக பதிலளிக்க, ''உன் பெயர் ரஜினிகாந்த் இல்லே?'' என்று அவர் கேட்க, ''அது சினிமாவுக்கு வச்ச பெயர்'' என்று கூறிய ரஜினி அதன் பிறகு பேசப் பிடிக்காமல் எழுந்து வந்துவிட்டான்.

ரஜினியின் இத்தகைய நடிவடிக்கைகளைக் கண்ட பலரும், குறிப்பாக அவன் அருகிலேயே இருந்தவர்கள் கூட, ''இனி ரஜினியைச் சாதாரணமாக நடமாடவிடக்கூடாது. பெங்களூரில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அனுப்பிவிட வேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ''அதற்கு அவசியமில்லை ரஜினி அத்தகைய கட்டத்திலும் இல்லை'' என்று அவர்களுக்கு விளக்கம் சொல்லி அனுப்பினேன். மனிதனுக்கு சோதனைகள் எதும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. அப்படி சோதனைகள் வந்துவிட்டால், அவனுக்கு உதவிகள் செய்து அதில் இருந்து மீள வைக்க வேண்டுமே தவிர, சோதனைக்குள்ளேயே போட்டு புதைத்துவிடக் கூடாது.

எனக்கென்னவோ, ஒரு நம்பிக்கை, ரஜினி நல்லபடியாக வந்துவிடுவான் என்று. அதற்கு இயேசுவைப் பிரார்த்தித்துக் கொண்டேன். கடவுள் கைவிடமாட்டார் என்று நினைத்து ஒவ்வொரு கட்டத்திலும் அவனிடம் அன்பு செலுத்துவதிலிருந்து நான் மாறவில்லை. அதற்கும் ஒரு நாள் சோதனை வந்தது.

ரஜினிக்கு வந்த சோதனை என்ன?

அடுத்த இதழில்

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information