ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து (பாகம் 50)
''முள்ளும் மலரும்'' படத்தைப் பார்த்துவிட்டு என் தந்தை (ஏவி.எம.¢) ரஜினிகாந்த் நடிப்பை மிகவும் பாராட்டினார். தமிழில் இன்னொரு கிரேட் ஆர்ட்டிஸ்ட் உருவாகியிருக்கிறார் என்று எங்களிடம் கூறினார்.
ஏவி.எம்.சரவணன் தொடர்கிறார்...
''போக்கிரிக்குப் போக்கிரி ராஜா'' என்ற பாடல் காட்சியில் ரஜினி ராதிகாவை முதுகில் தூக்கிக் கொள்வதுதான் முதலில் சொல்லப்பட்ட யோசனை. ஆனால் காட்சியின் சிறப்புக்காக ரஜினி, ராதிகாவைத் தன் தோளிலேயே தூக்கிக் கொண்டார். தூக்கிக் கொண்டு நடனமும் ஆடி சிரமப்பட்டார். 'போக்கிரி ராஜா' முரட்டுக்காளை போலவே வெற்றிப் படமாக அமைந்தது. இதன் வெற்றி விழாவில் கலந்து கொண்ட ரஜினி, ''போக்கிரி ராஜா படத்தில் நடித்ததும், இது வெற்றி பெற்றது எல்லாமும் சரவணன் சாருக்குதான் சேரும். இனிமேல் ஏவி.எம்.மில் நான் கதையே கேட்க மாட்டேன்'' என்றார்.
ரஜினி இதற்குப் பின்பும் அடிக்கடி ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டிருந்தார். ஒருநாள் ஸ்கூட்டர் கவிழ்ந்து ரஜினிக்கு முகத்தில் அடிபட்டு வீட்டில் இருந்தார்.
அவரை நலம் விசாரிக்கப்போன நான், ''நான் உங்களை நடிகர் என்று நினைத்துச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு பெண்ணுக்குக் கணவர். குழந்தைக்குத் தந்தை. உங்களை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. உங்களை நம்பி கணிசமான தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள். உங்களது படங்களில் இந்த நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்குமேல் முடக்கப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் நீங்கள் சிந்திக்காமல் இருக்கலாமா? ஸ்கூட்டரில் செல்ல வேண்டிய அவசியம் அப்படி என்ன இருக்கிறது? உங்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள்? இனிமேலாவது ஸ்கூட்டர் பயணத்தைத் தவிர்க்க வேண்டும்'' என்று கேட்டேன்.
ரஜினியோ, ''ஸ்கூட்டர் ஓட்டறதெல்லாம் சும்மா ஜாலிக்குத்தான். எனக்கு எதுவும் ஆகாது'' என்றார்.
''இனி ஸ்கூட்டர் ஓட்டுவதில்லை என்று உறுதி சொன்னால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்'' என்றேன். ரஜினி சிரித்தபடியே அதை ஏற்றுக் கொண்டார். எனக்குத் தெரிந்து அப்புறம் ரஜினி ஸ்கூட்டர் ஓட்டவில்லை.
''முள்ளும் மலரும்'' படத்தைப் பார்த்துவிட்டு என் தந்தை (ஏவி.எம.¢) ரஜினிகாந்த் நடிப்பை மிகவும் பாராட்டினார். தமிழில் இன்னொரு கிரேட் ஆர்ட்டிஸ்ட் உருவாகியிருக்கிறார் என்று எங்களிடம் கூறினார். அது மட்டுமல்ல. அந்தப் படத்தின் விற்பனை உரிமை எந்தெந்த ஏரியாக்களுக்குக் கிடைக்குமோ அவை எல்லாவற்றையும் வாங்கிவிடச் சொன்னார்.
அவருடைய யோசனைப்படி ஏற்கெனவே உரிமை பெற்றிருந்த ஒருவரிடமிருந்து சில ஏரியாக்களை மீண்டும் அதிக விலை கொடுத்து நாங்கள் வாங்கினோம். வியாபார ரீதியிலும் அந்தப் படம் வெற்றிகரமாகவே அமைந்தது.
'அபூர்வ ராகங்கள்' படத்தின் வெற்றி விழா எங்களது ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் என் தந்தை கலந்து கொண்டு படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களுக்குக் கேடயம் வழங்கினார். அந்தப் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்தும் அவரிடம் கேடயம் பெற்றார். முதன் முதலில் அவரிடம் கேடயம் பெற்றதை ராசியாகக் கருதிய ரஜினி ஏவி.எம். தயாரிப்பில் நடிக்க விரும்பினார்.
தனித்தன்மையோடு விளங்குபவர் ரஜினி...
அடுத்த இதழில்...
Previous |
|
Next |
|