Other Articles
Kalaa Worldwide Celebration Photos
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் திரைவிமர்சனம்
மக்கள் ரஜினியின் கருத்தை தான் ஏற்கிறார்கள் - ரஜினியை வீழ்த்த முடியுமா?
தூத்துக்குடியில் தலைவர் ரஜினி அளித்த பேட்டியின் விபரம்
உன்னால் முடியும் தலைவா... உன்னால் மட்டுமே முடியும்....
தூத்துக்குடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து கண்கலங்கிய ரஜினிகாந்த்
தலைவரின் அதிரடி நகர்வுகளும் பதிலடிகளும் - மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
தமிழ் இந்து கட்டுரைக்கு பதில்
rajinifans.com நிர்வாகிகளுள் ஒருவரான ராம்கியின் தலைவர் குறித்த பேட்டி
திருவள்ளூர் மாவட்டத்தில் www.rajinifans.com சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியது
40+ வருடங்களாக ஓடும் ரஜினி என்ற வெற்றிக்குதிரை!
தென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும
எனக்கு பின்னாடி இருப்பது கடவுளும் மக்களும்தான் ... பாஜக இல்லை
தமிழன் வளா்ந்தால் தான் தமிழ் வளரும் ...
மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் எமது வேலைகளைப் பார்ப்போம்: ரஜினி
Rajinifans.com Admin நண்பர் கோபிக்கு கண்ணீர் அஞ்சலி
Malaysia Natchathira Vizha 2018 Photo Compilations
Superstsar Rajinikanth Fans Meet Photo Session December 2017
தெறிக்கவிட்ட தலைவர்! - இன்றைய நாள் நம் நாள்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
வேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட எதிர்ப்பில் படத்தை வெளியிடவே தயங்குவார்கள்
(Saturday, 9th June 2018)

ரஜினி அவ்வளவு தான் என பல  வருடங்களாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பல பதிவுகளை  கடந்து வந்துவிட்டேன்.. இவர்களின் பரிணாம வளர்ச்சி எவ்வாறு இருந்தது என பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. காலா திரைப்படம் வெளியாகும் முன்பு ரஜினியின் தூத்துக்குடி விசிட்டையும் அதில் அவரின் கருத்துகளையும் மிக கவனமாக மக்களிடம் தவறாக கொண்டு சென்ற ஊடகங்களும், அண்ணன் எப்போடா சறுக்குவாரு எனக் காத்திருந்த மாற்றுக் கட்சியினரும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மிக மிக வலுவாக ரஜினி எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.. குறிப்பாக சமூக வலை தளத்தில் மிக ஸ்ட்ராங்காக இருக்கும் திமுக,நாம் தமிழர்,பிற நடிகர்களின் சில  ரசிகர்கள்  பிரச்சாரம் செய்தனர்.. ரஜினி  தமிழக மக்களுக்கு எதிரானவர் என்ற  கருத்தினை எப்பவும் போல  திணிக்க முயற்சி செய்து எப்பவும் போல தோற்றனர்.

பள்ளிகள் திறக்கும் நேரம், விடுமுறையற்ற வேலை நாள் என எல்லாமும் ஒரு திரைப்படம் வெளியாகும் சூழலுக்கு எதிராக இருக்கிறது. ரஜினிக்கு எதிரான பிரச்சாரம்  முன்னெடுக்கப்பட்ட பின்பு  ரஜினி மீதான கோபத்தை படத்தில் காட்ட வேண்டும் எனப் பிரச்சாரம்  செய்தனர்.

வேறு சிலர் எதிர்ப்பதற்க்கான காரணம் ரஞ்சித்துடன் ரஜினி மீண்டும் இணைந்தது .. சாதீய வன்மம் .இவையெல்லாம்தான்  படத்தின் புக்கிங்கில்  மந்தம் என்ற தோற்றத்தை நிறுவியது.. முதல் நாள் திரையரங்கு சென்று பார்த்தவர்களில் 90% துய்மையான ரஜினியின் வெறியர்கள் மட்டுமே.. அந்த அத்தனை பேரும் ரஜினிக்கு தான் வாக்களிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்..திரும்பிய திசையெங்கும் எதிர்ப்பு வலையில் பின்னப்பட்டிருந்த ரஜினி படம் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை பெற்றதே மிகப்பெரும் சாதனை.. வேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட எதிர்ப்பில் படத்தை வெளியிடவே தயங்குவார்கள்.. படம் நன்றாக இருக்கப்போவதில்லை என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற ஆரம்பித்ததும் இது ரஞ்சித்துக்கு கிடைத்த வெற்றி என உச்சி முகர்கிறார்கள்.. இன்றைக்கு காலாவுக்கு ஓப்பனிங் வரவில்லை என்று சொல்லும் அதே வாய்கள் நாளை. 2.0 பெறப்போகும் பிரம்மாண்ட வரவேற்புக்கு சங்கர் தான் காரணம் என்று சொல்வார்கள். ரஜினி படத்தில் அவர் விரும்பாமல் ஒரு துரும்பும் அசைந்துவிட முடியாது என்பதை தெரிந்து கொண்டே இது ரஞ்சித்துக்கு மட்டுமேயான வெற்றி என சொல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாப்படுவதை தவிர வேறு வழியில்லை.. இருக்கட்டும் ராஜாக்களா, ரஞ்சித்துக்கு மட்டுமே கிடைத்த வெற்றியாகவே இருக்கட்டும்.. தவறேதும் இல்லை.

அடுத்தது ரஜினி மீது சிலருக்கு பொறாமை ,வெறுப்பு,பயம் அதிகரித்திருக்கிறிது.. அதல் முக்கியமானவர்கள் திமுகவினர்.. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ரஜினியை டார்கெட் செய்துள்ளனர்.. அது இயல்பு.. தங்கள் தலைமையின் மேலான அவ நம்பிக்கையின் வெளிப்பாடு.. எடப்பாடியையே சமாளிக்க முடியாத ஸ்டாலின் ரஜினியை சமாளித்துவிடுவார் என்பதை சின்னக் குழந்தை கூட நம்ப தயாராக இல்லாத போது உலகிலேயே அதிக அறிவுடையவர்களான திமுகவினர் எப்படி நம்புவார்கள்..?  ரஜினியின் தனது கட்சி தொடங்கும் தொடர்பாகா எடுக்கும் நடவடிக்கைகளும், அவரின் தொடர் வெற்றிகளும் திமுகவினருக்கு ரஜினியின் மீது கொண்டுள்ள பயம் காரணமாக எரிச்சலடைய வைக்கிறது.. இது மேலும் அதிகரிக்கும். ரஜினி களம் இறங்கும் போது திமுகவினருக்கு ரஜினியின் மீதான பயமும் எரிச்சலும் அதிகரிக்கவே செய்யும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதிலேயே அவர்களின் நேரம் போய்விடும்.

காலா படத்துக்கு முன்பு ரஜினி தூத்துக்குடிக்கு போனால மீடியாக்களும் அரசியல்வியாதிகளும் எப்பவும் போல திரித்துக் கூறி மக்களிடையே பரப்ப முயற்சிப்பார்கள் என்பதெல்லாம் தெரியாமலா போனார்.. நன்றாகவே தெரியும்.. பிறகும் ஏன் போனார்..? அவரின் படம் குறித்து அவர் கவலைப் படவில்லை.. படம் நன்றாக இருந்தால் ஓடும் ..இல்லாவிட்டால் ஓடாது.. ரஜினியே பலமுறை பேட்டியில் சொன்னது தான்.

முன்பதிவுகள் பல இடங்களில் இன்னமும் கிடைக்கின்றது என அடுத்த கூவல்.  ரஜினியின் படங்கள் ரசிகர்களைத் தாண்டி அவர்தம் குடும்பங்களுக்கும் நெருக்கமாகி வருகின்றது என்பதுதான் இன்றைய யதார்த்தம். Ageing gracefully என்பார்களே அது ரஜினிக்கு மிகவும் பொருந்தி வருகின்றது. வசூல சாதனை புரிந்த கபாலியையே வசூல் இல்லை எனத் தூற்றியவர்கள்தான் இவர்கள்.

படத்தின் உண்மையான வசூல் தனுசுக்கு தான் தெரியும்.. நான் பல வருடங்களாக தியேட்டர் நிலவரங்களை கவ்னித்து வருபவன்.. பி சென்டர்களின் தலைமையிடம் என வர்ணிக்கப்படும் புதுக்கோட்டையின் சினிமா வரலாறுகள் எனக்கு நன்றாகவே தெரியும்..  கபாலி படம் மூன்று பெரிய தியேட்டர்களில் வெளியானது.. காலா இரண்டு பெரிய தியேட்டர்கள்.. கபாலி வெள்ளிக்கிழமை.. காலா வியாழன்.. இரண்டும் வொர்க்கிங் டே ரிலீஸ் தான்..கபாலி ரஜினி ரசிகனை திருப்தி செய்யவில்லை என சிலர் சொன்ன போதும் ரசிகர்களும் கொண்டாடினார்கள். காலா விமர்சன ரீதியில் நல்ல பெயரை முதல் ஷோவிலிருந்து வாங்கிவிட்டது.. எனவே கபாலியை விட நன்றாக போகும்மா என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.. அப்படி இருந்தும் வரவேற்பு குறைவு என எழுதப்படுவது ரஜினியின் மீதான பயம் & காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறொன்றும் இல்லை..

மிக முக்கியமான விசயம் ரஜினி ரசிகர்கள் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.. எல்லாமும் ரஜினி மீதான காழ்புணர்வில் திட்டமிட்டு பரப்பப்படும் விசப் பிரச்சாரம்.... அதை தலைவர் பார்த்துக் கொள்வார்  & தலைவர் சொன்னது போல மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத் தெரியும் அரசியல்வியாதிக்ளின் தகிடுத்தனங்கள் பற்றி.

இதுவரை ஆயிரம் முறைக்கும் மேலாக  நம் தலைவரை திரையில் பார்த்து விட்டோம்.. விரைவில் முதல்வர் பதவியில்  அவர் பழகுவதற்க்கான  வேலையைத் தொடங்குங்கள்..

மீதத்தை தலைவர் மக்கள் துணையுடனும்  அந்த  இறைவனின் அருளோடும்  பார்த்துக் கொள்வார்.

- ஜெயசீலன்


 
1 Comment(s)Views: 5420

Pichaikaaran,Chennai
Sunday, 10th June 2018 at 02:24:15

http://www.pichaikaaran.com/2018/06/blog-post_9.html?m=1

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information