Movie Review
2.0
16 Vayathinille
Aandavan
Aarulirunthu Arupathuvarai
Aayiram Jenmangal
Aboorva Raagangal
Adutha Varisu
Alavudinum Aruputha Vizhakkum
Anbulla Rajinikanth
Anbuku Naan Adimai
Annaatthe
Annamalai
Arunachalam
Annai Oru Aalayam
Athisaya Piravi
Aval Appaadithaan
Avargal
Baba
Baasha
Bairavi
Bhuvana Oru Kelvikuri
Billa
Chandramukhi
Darbar
Dharmadurai
Dharmautham
Ejamaan
Endhiran
Engeyo Ketta Kural
Garjanai
Gayathiri
Guru Sishyan
Illamai Oonjaladukirathu
Jailer
Jhonny
Kaali
Kaala
Kabali
Kai Kodukum Kai
Kazhugu
Kochadaiyaan
Kodi Parakuthu
Kupathu Raja
Kuselan
Lingaa
Manithan
Mannan
Mappillai
Maveeran
Moondru Mudichu
Moondru Mugam
Mr. Bharath
Mullum Malarum
Murattukalai
Muthu
Naan Sigappu Manithan
Naan Vazha Vaipen
Naan Adimai Illai
Naan Mahaan Alla
Naatukku Oru Nallavan
Nallavanukku Nallavan
Netrikan
Ninaithale Inikum
Oorkavalan
Padaiyappa
Padikathavan
Panakaran
Pandiyan
Payum Puli
Petta
Pokiri Raja
Pollathavan
Priya
Puthu Kavithai
Raanuvaveeran
Raja Chinna Raja
Rajathi Raja
Ram Robert Rahim
Ranga
Siva
Sivappu Sooriyan
Sivaji
Sri Ragavendra
Thaai Veedu
Thalapathy
Thambikku Endha Ooru
Thanga Magan
Thanikaattu Raja
Thappu Thalangal
Thee
Thillu Mullu
Thudikkum Karangal
Unn Kannil Neer Vazhindal
Uzhaipazhi
Valli
Velaikaran
Veera
Viduthalai
Hindi Movies
Blood Stone

  Join Us

Movie Review

Padaiyappa



Tamil Movie Fans (that will be you!) always have high expectations for movies starring great stars, or directed by established Directors, or produced by proven Banners/Producers. The expectations are even higher when it is a movie involving a 'Super Star' (wait,...please stop clapping or whistling alright ?! this is only a review and not the title scene of Padaiyappa !!). Usually, the expectations of the fans in a Rajni movie includes: a good story with sentiments, at least one new style from Rajni, a punch dialogue which people like to quote often, some comedy scenes done by Rajni, good supporting cast, good looking & acting heroine(s), good songs and good fights. Rajnikanth's new movie 'Padaiyappa' has all these elements except for the last two items.

This movie has a strong dramatic story. Sivaji Ganesan is a highly respected Jameendar in a village. Lakshmi is his wife. AruPadaiyappan (alias) Padaiyappa (Rajnikanth) is their son (please stop clapping and scroll down to read the rest of the review !!! ;-)) and Siththara is their daughter. Manivannan is Sivaji Ganesan's brother. Manivannan and his family live together with Sivaji and family. One day, Manivannan claims his share of the family wealth. Sivaji writes off all his properties to Manivannan and walks out with his family. While doing so, Sivaji dies. At that point, Panakkara (rich) Padaiyappa becomes Pauperappa ! Padaiyappa owns a small dry land property and by the turn of luck, he finds granite stones in his land. We hear the song Vazkayil aayiram thadaikallappa..... in the background and before it is over, Padaiyappa becomes Panam'appa (a rich man) !

Lakshmis brother is Radha Ravi. Naasar is his son and Nilambari (Ramya Krishnan) is his foreign-educated, arrogant daughter. Vasanthira (Soundarya) is a servant maid in Nilambaris house. Nilambari falls in love with Padaiyappa for his Five good qualities (one of the questions in next years Fifth standard final exam would be What are the Five qualities of Padaiyappa for which Nilambari falls in love with him ?!). But, Padaiyappa falls in love with Vasanthira. Padaiyappa overcomes all the hurdles and tricks of Nilambari and marries Vasanthira. So, it is just another Triangular Love story right ?! Well, it would have been, if the movie stopped here. Nilambari keeps her disappointment and vengeance deep in her heart. Time flies by and Padaiyappa is old now and he has two daughters (Preetha and Anita). Nilambari tries to take revenge on Padaiyappa and his family after 18 years, using Padaiyappa's daughter Preetha Vijaykumar. How will Padaiyappa handle this ? Will Nilambari win her battle ? - forms the rest of the story.

Rajnikanths acting is very good. He portrays enthusiasm in the younger role and seriousness and maturity in the older role. His comedy is enjoyable. He does a new style of throwing a shawl, and a new Rajni Salute ! (he does a variation of his good old cigarette style - in this movie, he does it with a cigar !). Super Star looks Super Slim ! (looks like he lost some weight - he looks thinner than everybody else in the movie). The makeup for Rajni could have been better - in some scenes, the wig (toupe) is obvious and for the older Rajni, the beard is not so natural (the olders Rajnis make up is similar to his makeup in the movie Batcha). Rajnis punch dialogue in this movie is "My way is unique way'' !

The real heroine of this movie is Ramya Krishnan. She has a powerful role and she has done it well. Contrary to the rumors in the media, her role does not portray the Tamil Nadu political leader Jayalalitha (except that Ramya Krishnans character also has a lot of arrogance and anger). However, some of the dialogues delivered by Rajni to Ramya Krishnan would also fit - if he said those dialogues to Jayalalitha. Even though Soundarya acted as Rajnis pair, her role is a 'jujubi' (small) one in this movie ! There is no need to mention, but, Sivaji Ganesans acting is good (ayya, kalakiteengalae !!). Sivaji portrays the role of a serious, yet, loving father in a nice way. The scene where he runs like a kid and feels the pillar of his house for one last time - is touching. Lakshmis acting is nice. Manivannan has done good acting - for a change, he has done comedy plus serious acting. Senthil and the rest of Rajnis friends have done good comedy acting. Senthil's comedy in a scene where he goes to see a bride (along with Rajni and friends) is hilarious. To compensate for her lost movie career after "Arunachalam" movie (for doing a 'Villi' role), Vadivukarasi has been given a small, but safe role in 'Padaiyappa'. Prakashraj has acted (well) in just one scene - he should not waste his talents by agreeing to act in 'one scene' movies. Siththara, Radha Ravi, Naasar, Ramesh Kanna, Anu Mohan - all have done their roles well. Preethas acting is just OK. Abbass acting is Adapas ! (people who know Coimbatore Tamil will understand this!).

Lets talk about the Music: Singa nadai pottu sigarathil aeru.....en paru Padaiyappa is an regular intro song for Rajni and it is OK (one more question in next years Fifth standard final Tamil exam would be Singa nadai pottu sigarathil aeru..." endra paadalai adi piralamal ezuthuga !!). This song also has the tune of Suthi Suthi vantheeha... in between the verses. The dance sequence for this song is good in the movie. Vazkayil aayiram ......Vetrikodi... (Sriram) - is a good motivational song and it is OK to watch along with the movie. The lyric in this song is good. This song sounds like some very old song (Srirams voice also sounds like some old singer). Minsara Kanna'' (Sriram, Nithyashree and Srinivas) song is OK. The dance for this song is not good in the movie. The costumes in this song are similar to that of Muthu. "Suthi Suthi Vandeeha...'' (SPB and Harini) song is the best in this movie with nice music and melodious voices of SPB and Harini. Harini's voice is very sweet in this song. It is also good to watch in the movie. Every body except for A.R. Rahman knows (if he knew, he should not have done it !) that "Oh oh oh... Kikku aeruthae..." (Mano and Febi) song strikingly resembles (the tune and Mano's voice) 'Ayirathil naan oruvan...' song from the movie 'Iruvar'. This song has a good beat and it is good to watch in the movie. The CD / Tape has an additional instrumental music of "Suthi Suthi Vandeeha...'' song and it is good to listen. There is nothing worth mentioning in the background score. It is very disappointing to watch the songs in the movie (except for 2 songs) - it looks like they filmed the songs in a hurry. Also, Vairamuthu (lyrics) is invisible in most of the songs.

Director K.S. RaviKumar has clearly understood the way a Rajni movie should be and has delivered a good product. The weakness of Arunachalam movie is the strength of Padaiyappa movie - the story that is. The basic plot of the story has similarities with some of Rajnikanth's previous movies like 'Mannan' and 'Nallavanukku Nallavan'. The story (by Aruncahala story discussion group) and screenplay (K.S. RaviKumar) have been planned and executed well (except for the last parts of the movie). The strong dialogues are a plus. This movie has all the elements (except for good songs) of a typical M.G.R. movie (love, drama, sentiments, fights, some political dialogues,.....). Well done K.S. RaviKumar ! Also, K.S. RaviKumar should be appreciated for giving good comedy opportunities to Senthil, Ramesh Kanna and other people who have acted as Rajnis friends.

The editing is good - there are a few good continuity scenes - where the ending of a scene leads to the beginning of the next scene. The cinematography (by S. Murthy and Prasad) is OK for the most part (since most of the movie happens in indoors). There is one scene where the camera pans a huge crowd of people and that scene is completely out of focus. The dance choreography (Tharun Kumar, Lalithamani and Brinda), art backgrounds (G.K.) and costumes could have been better. Some songs settings and costumes resemble that of the movie Muthu. Considering that it is a Rajni movie, the fight scenes are so-so. They are below average and there is no style or bravery in them (what happened to 'paranthu paranthu fighting' of Rajni ?!). The movie also has some masala car chasing. This movie has some computer graphics - it is good for the most part - except for the climax (the flying Vel) - where it has been done with poor quality.

Whether Rajnikanth would enter into politics is debatable. However, if he is planning to enter politics, this movie would place him in the right track (similar to the MGRs movies that were made before he entered into Politics).

Padaiyappa ......

Nalla Padamappa ! (movie is good !)

 

படையப்பா


"முத்து'' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய "படையப்பா'' மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. சென்னையில் 210 நாட்கள் (30 வாரம்) ஓடி, வசூலில் சாதனை புரிந்தது.

"முத்து'' படத்தை அடுத்து ரஜினி நடித்த படம் "அருணாச்சலம்.'' இதை சுந்தர் சி.டைரக்ட் செய்தார்.

இதற்குப்பிறகு ரஜினி நடித்த படம் "படையப்பா.''

1997 தமிழ்ப்புத்தாண்டுக்கு "அருணாச்சலம்'' வெளிவந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து, 1999 தமிழ்ப்புத்தாண்டுக்கு "படையப்பா'' வெளிவந்தது.

ரஜினியின் வெற்றி வரலாற்றில் வைர மகுடம் சூட்டிக்கொண்ட படம் படையப்பா. தமிழ் சினிமா வரலாற்றில் அதுவரை இருந்த அத்தனை வசூல் ரெக்கார்டையும் தகர்த்த படம் என்ற பெருமையும் இந்தப் படையப்பாவுக்கு உண்டு.

ரஜினி, "அருணாசலா சினி கிரியேஷன்ஸ்'' என்ற பேனரில் சொந்தமாகத் தயாரித்த படம் இது.

இந்தப் படத்துக்கு கதையும் ரஜினிதான். கதை இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று அவரே யோசித்து உருவாக்கிய கதை. இதை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாருடன் ஆலோசனை செய்து முழுக்கதையையும் உருவாக்கினார்.

அப்போது தமிழில் சற்று இடைவேளை விட்டிருந்த ரம்யா கிருஷ்ணனை தேடிப்பிடித்து `நீலாம்பரி' என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார் ரஜினி.

ரஜினியின் அப்பாவாக, கவுரவ வேடத்தில் சிவாஜி நடித்தார்.

கோடீசுவர சிவாஜியை அவரது தம்பி குடும்பம் ஏமாற்றி சொத்துக்களை பறித்துக்கொள்கிறது. வேதனை தாங்காமல் சிவாஜி உயிர் துறக்கிறார்.

சொத்துக்கள் போனதை விடவும் அப்பாவின் மரணம் மகன் படையப்பாவை (ரஜினி) அதிகம் பாதிக்கிறது. வாழ்வில் உயர்ந்து காட்டி உறவினர்களுக்கு முன் இமயமாக நிற்க விரும்புகிறார். அதற்காக கடினமாக உழைக்கிறார். உழைப்பு கைகொடுக்க, கோடீஸ்வரர் ஆகிறார்.

படையப்பா மீது உறவுக்காரப்பெண் நீலாம்பரிக்கு (ரம்யாகிருஷ்ணன்) ஒரு கண். அவளும் பணக்காரிதான். ஆனால் அவளது பிறவிக்குணமே, தான் ஆசைப்பட்டதை அடைந்து விடவேண்டும் என்பதுதான். படையப்பா மீது ஆசைப்பட்ட அவள், அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.

படையப்பாவுக்கோ நீலாம்பரியின் வீட்டு வேலைக்காரி வசந்துரா (சவுந்தர்யா) மீது காதல். இது தெரியாமல், படையப்பா வீட்டுக்கு `மாப்பிள்ளை' கேட்க தன் அப்பாவை (ராதாரவி) அனுப்புகிறாள், நீலாம்பரி.

ஆனால், நீலாம்பரியின் கண்ணெதிரிலேயே அவளது வேலைக்காரி வசந்துராவுக்கு `பரிசம்' போடப்படுகிறது. திருமணமும் நடக்கிறது.

தன்னை நிராகரித்து விட்டு தன் வீட்டு வேலைக்காரியை மணந்த படையப்பாவை பழி வாங்க முடிவு செய்கிறாள், நீலாம்பரி. 18 ஆண்டுகளாக ஒரே இருட்டறைக்குள் அடைந்து கொண்டு வெளியுலகுக்கே தெரியாமல் தன்னை மறைத்துக் கொள்கிறாள்.

காலம் ஓடுகிறது. படையப்பாவின் மகள், நீலாம்பரியின் அண்ணன் மகனை காதலிக்கும் விஷயம் நீலாம்பரியின் காதுக்கு சேருகிறது. படையப்பாவை பழிவாங்க இதைவிட நல்ல சந்தர்ப்பம் வேறில்லை என்று எண்ணும் நீலாம்பரி, இருட்டறை வாசத்தில் இருந்து வெளி வருகிறாள். படையப்பாவின் மகள் காதலுக்கு தனது அண்ணன் மகன் மூலமே தடை ஏற்படுத்துகிறாள். இதனால் மகளின் திருமணம் நடக்கவேண்டி படையப்பா தனது காலில் விழுவார் என்பது அவள் எதிர்பார்ப்பு.

இதை எதிர்பார்த்த படையப்பா, தனது சாமர்த்தியத்தால் நீலாம்பரியின் அண்ணன் மகனை தன் வசப்படுத்துகிறார். தன் மகள் மீது உண்மையிலேயே அவனுக்கு காதல் இருப்பதையும், அத்தை நீலாம்பரியால் அது தடுக்கப்பட்டதையும் புரிந்து கொண்டு காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறார்.

இப்போதும் படையப்பாவால் தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாக கருதும் நீலாம்பரி, திருமணம் நடக்கும் இடத்துக்கே வந்து தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.

"அதிகமா ஆசைப்பட்ட ஆம்பளையும், அதிகமா கோபப்பட்ட பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்று ரஜினி பேசும் வசனம் படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

ரஜினியுடன் சவுந்தர்யா பாடும் "சுத்தி சுத்தி வந்தீக'' பாட்டு காதல் இளமை ராகம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம் பெற்ற மற்ற பாடல்களான "என் பேரு படையப்பா'', "வெற்றிக்கொடிகட்டு'', "மின்சாரக்கண்ணா'', "கிக்கு ஏறுதே'' போன்ற பாடல்களும் ரசிகர்களை சொக்க வைத்தவை. `கிக்கு ஏறுதே' பாடல் காட்சியில் ரஜினியுடன் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரும் சேர்ந்து நடனமாடி கலக்கினார்.

"மன்னன்'' படத்தில் பணக்கார விஜயசாந்தியை சாதாரண ரஜினி எதிர்கொண்டு ஜெயிப்பதாக கதை போகும். படையப்பா இதே பாணியில் வேறு களம். இரண்டுமே வெற்றிக்களம்.

"படையப்பா'' தமிழ்நாட்டிலும், அண்டை மாநிலங்களிலும் மொத்தம் 123 தியேட்டர்களில் நூறு நாள் ஓடியது.

11 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடியது.

சென்னையில் 210 நாட்களும், கோவையில் 275 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. 

 

படையப்பா - ஆனந்த விகடன் விமர்சனம்


திறமை மிக்க நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஒரு வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு விட்டுட்டாரோ என்று கவலையாக இருக்கிறது. வரவர அவர் எது செய்தாலும் என்ன பேசினாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரு அரசியல் அர்த்தம் ' இருக்கும்படி திரைக்கதையை அமைத்துவிடுகிறார்கள். கடந்த இரண்டு மூன்று ரஜினி படங்களிலேயே இது மையம் கொள்ள ஆரம்பித்தது . இப்போது படையப்பாவில் உச்சத்துக்குப் போய்விட்டது ! இனி ரஜினியே விரும்பினாலும் எந்த மறைமுக கலப்பும் இல்லாமல் நேர் கதையுடன் ஒரு படம் கொடுப்பது கஷ்டம்தான் போலிருக்கிறது ! 

படையப்பாவையே எடுத்துக் கொண்டால் , " பொம்பளை பொம்பளையா இருக்கணும் ! " என்று தனது எதிரியை இலைமறை காயாக தாக்கி வந்த ரஜினி , அந்தத் தாக்குதலை வேகப்படுத்த வேண்டும் என்பதற்காகவே எடுத்த படமாகத்தான் தெரிகிறது .

மூன்றேகால் மணி நேர நீளத்துக்கு அவசியமில்லாத கதை . ரஜினியைக் காதலிக்கிறார் அவரது மாமன் மகளான ரம்யாகிருஷ்ணன் . ஆனால் , ரஜினியின் பார்வையோ ரம்யா வீட்டு வேலைக்காரியான சௌந்தர்யா மீது . ரம்யாவின் எல்லா சகுனித்தனங்களையும் முறியடித்து சௌந்தர்யாவை மணக்கிறார் ரஜினி . உள்ளுக்குள்ளேயே கறுவிக்கொண்டு இருக்கும் ரம்யா , பதினெட்டு வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியைப் பழிவாங்க வருகிறார் . வழக்கம்போல் க்ளைமாக்ஸுக்குப் பிறகு ரஜினி ஜெயிக்க . . . சுபம் ! 

' என் வழி தனி வழி ' என்ற பன்ச் டயலாக்கை ரஜினி உதிர்க்கும் ஒவ்வொரு சமயமும் தியேட்டரில் விசில் பறக்கிறது . அதேபோல் , தனியறையில் கால்மேல் கால் போட்டு ரம்யா பேச , எதிரில் உட்கார ஒரு நாற்காலியும் இல்லாத நிலையில் நின்றபடியே அந்த அறையை நோட்டமிட்டு , உத்தரத்தில் மடித்துப் போடப்பட்டிருக்கும் ஊஞ்சலை சட்டென தனது துண்டால் அடித்து இறக்கி , அதில் அமர்கிறாரே ரஜினி . . . ஒரிஜினல் அக்மார்க் ரஜினி ஸ்டைல் ! 

ஹீரோவுக்கு நண்பர்கள் கூட்டம் அவசியம் என்று சமீப படங்களில் தப்பாக பரவியிருக்கும் சென்டிமெண்ட்டுக்கு படையப்பா ' சிக்கியிருக்க வேண்டியதில்லை . ரஜினியை இளமையாகக் காட்டுவதற்காக ' பெரியப்பா ' க்களையெல்லாம் அவருக்கு ஃப்ரெண்ட்ஸாகப் போட்டிருப்பது கொடுமை ! 

ரேஸ் குதிரை போன்ற , கிண்னென்ற கட்டுக்கோப்புடனும் ஹைஹீல்ஸ் நடையுடனும் இமைக்காமல் பேசுகிற இறுமாப்புமாக ரகளை ராணியாக ராஜபாட்டை நடத்துகிறார் ரம்யாகிருஷ்ணன் ! அதிலும் , ரஜினி தன் மகளுக்கு மாப்பிள்ளை கேட்டு ரம்யாவின் வீட்டுக்கு வரும்போது , ' மின்சார கண்ணா . . ' என்று காதலும் குரோதமும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் பேசுகிறாரே . . . கில் ' லேடி ' ! 

மருண்ட கோழியாக மான் விழியோடு சௌந்தர்யா ! ஆனாலும் ரஜினி , ரம்யா கிருஷ்ணன் என்ற இரண்டு மலைகளுக்கு இடையேயான யுத்தத்தில் இந்தப் பூவின் அழகு எடுபடாமல் போகிறது . 

சிவாஜி கம்பீரத்துக்காக மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிற ஒரு பாத்திரம் . குரலில் இன்னமும் பழைய கம்பீரம் இருந்தாலும் , உடலும் முகமும் தளர்ந்து அவரைத் திரையில் பார்க்கையில் சங்கடமாக இருக்கிறது . 

ரஜினியை ஸ்டென் கன்னால் ரம்யா சுட்டுத்தள்ள , துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாக்கள் ' ஓம் நமச்சிவாய ' டிவி சீரியலில் அம்புகள் போவது மாதிரி சர்சர்ரென்று வேறு ஒருபுறம் போய்க்கொண்டிருக்க மறுபுறம் . . சிவப்புப் புடவை அணிந்த ரம்யாவை முட்டிக் கொல்வதற்காக தூரத்திலிருந்து மாடு ஓடிவர , இடையில் ரஜினி எறிந்த வேல் ஆகாயமார்க்கமாக செயற்கைக் கோள் லெவலில் எங்கோ செல்ல . . . உச்சகட்டத்தில் குழந்தைகளுக்கான படம் மாதிரியான தோற்றம் ! 

பாடல்கள் . . . ஒன்று , தேவா இசையமைத்தது மாதிரி , ஒன்று இளையராஜா போட்டது மாதிரி . . மற்றொன்று . வித்யாசாகர் மாதிரி . . . சரி , ஏ . ஆர் . ரஹ்மான் எங்கே . . ? 

மொத்தத்தில் , ரஜினியின் ரசிகர்களுக்கென்றே எடுக்கப்பட்ட படமப்பா ! 

விகடன் விமரிசனக் குழு

விகடன்  மதிப்பெண் : 41



PADAYAPPA - KALKI REVIEW

(25.04.1999 தேதியிட்ட கல்கி இதழிலிருந்து . . .)





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information