இந்தக் கட்டுரையின் முதல் இரு பாகங்களைக் கீழ் உள்ள லிங்கில் படியுங்கள்.
Part 1: http://rajinifans.com/detailview.php?title=1682
Part 2: http://rajinifans.com/detailview.php?title=1690
இந்தக் கட்டுரை துவங்கும் முன் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர், டாக்டர். கலைஞர் அவர்களுக்கு என் இதயப் பூர்வமான அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன்.
அவரது ஆன்மா சாந்தி அடையவும், தமிழகத்திற்குக் கலைஞர் மற்றும் ஜெ போன்ற வலிமையான தலைவர்கள் மீண்டும் கிடைக்கவும் எல்லாம் வல்ல அந்த இறைவனைப் பிராத்திக்கிறேன் !!!
சரி , மீண்டும் ரஜினியின் அரசியலுக்குள் நுழைவோம்.
நிர்வாகத் திறமையும், தலைமை பண்பையும் மக்களிடம் காண்பிக்கும் போது, அவர்கள் கூத்தாடியாக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி, மக்கள் அவர்களை வரவேற்பார்கள் என்று கடந்த முறை கூறி இருந்தேன்.
அப்படிப் பார்த்தால் விஜயகாந்த் ஒரு "Proven Leader".
கடனில் இருந்த தென் இந்திய நடிகர் சங்கத்தை லாபகரமாக மாற்றிக் காட்டிய அந்த நிர்வாகத் திறமைக்குக் கொடுக்கப்படாத "Hype", தான் சேர்ந்த திரை துறையிலேயே எந்த ஒரு பொறுப்பும் வகிக்காத ரஜினிக்கு ஏன் வருகிறது?
ஒருவரது மதிப்பு என்ன என்பதை அவன் தோல்வியுறும் போது ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு அறியலாம்.
உதாரணமாக சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த வீரர் என்பது, அவர் சரியாக விளையாடாமல் போனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதன் மூலம் தெளிவாகப் புரியும்.
மற்ற 10 வீரர்கள் சரியாக ஆடாமல் போனாலும், "ச்சே, சச்சின் நல்லா ஆடி இருக்கனும்” என்று கூறுவோம் அல்லவா !! அது போலத் தான்.
அது சரி, இதுக்கும் ரஜினிக்கும் எனச் சம்மந்தம்?!
விஜயகாந் தனது முதல் தேர்தலில் 233 தொகுதியில் தோற்றாலும், அவர் மட்டும் ஜெயித்து, அவரது கட்சியும் 8% வாக்கு வங்கியுடன் தனக்கென ஒரு இடத்தைப் பதித்த சமயம்.
துக்ளக் ஆசிரியர் "சோ"விடம் நிருபர்கள் "விஜயகாந்தின் இந்த அசுர வேக வளர்ச்சியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "1 சீட் வெற்றி, 10% வாக்கு வங்கி, இவையெல்லாம் விஜயகாந்த் பெற்றதால் அது அசுர வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்.
இதுவே ரஜினி இதைச் செய்து இருந்தால் வெறும் 10% வாக்கு, ஒரே ஒரு சீட், ரஜினியின் பலம் இது தானா என்று கேட்டு இருப்பீர்கள் அல்லவா ?" என்று பதிலுக்குக் கேட்டார் .
ஆம், உண்மை தான். ரஜினியின் வெற்றி அவரது ரசிகர்களால் எவ்வாறு கொண்டாடப்படுகிறதோ, அதை விடப் பல மடங்கு அவரது தோல்வி எதிரிகளால் கொண்டாடப்படும்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் "பாபா", 2014 இல் அதிக வசூல் செய்தது "லிங்கா".
ஆனால் அதைத் தோல்வி படங்களாகக் கூறி, அந்த ஆண்டில் அதை விடக் குறைவான வசூல் செய்த படங்களை "Industry Hit" என்று பலர் கூறும் போதே தெரிய வேண்டாமா ரஜினியின் தோல்வி எப்படிக் கொண்டாடப்படுகிறது என்று !!
அதனால், ரஜினிக்கு Hype இருப்பதில் ஒரு உண்மை தன்மை உள்ளது. ஆனால் இங்கே வேறு ஒரு கேள்வியும் கூடவே எழுகிறது.
தனது நிர்வாகத் திறமையை அரசியலுக்கு வரும் முன்னே வெளிக்காட்டிய விஜயகாந்த் "டெபாசிட்" இழந்து தோல்வியுறும் நிலை வந்த பிறகும், ரஜினியின் மீதான அந்த "Hype" மற்றும் எதிர்பார்ப்பு அப்படியே உள்ளதே !! அது எப்படி ??
பொதுவாக மனிதன் என்பவன்....
சரி நிறைய "Theory" பேசி விட்டேன், நேரடியாக வருகிறேன்.
விஜயகாந்தும் ஆளுமையைக் காட்டி இருந்தார் (நடிகர் சங்க தலைவராக), ரஜினிகாந்தும் ஆளுமையைக் காட்டி இருக்கிறார் (சென்ற கட்டுரையில் படிக்கவும்). ஆனால் காட்டிய இடங்கள் வேறு.
M.G.R மற்றும் ஜெ அவர்கள் மக்களைச் சந்திக்கும் முன்னரே தங்களது ஆளுமையை வெளிப்படுத்தியதாகக் கூறி இருந்தேன்.
அதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. ஆம், அவர்கள் இருவரும் அரசியல் சார்ந்த ஒரு விஷயத்தில் தான் தனது முத்திரையைப் பதித்து இருந்தார்கள்.
அதுவே அவர்கள் அரசியலுக்குத் தகுதியானவர்களாக மக்கள் நினைக்கக் காரணமாக இருந்தது.
ஆனால் விஜயகாந்தோ தனது திறமையை நிரூபிப்பதில் தன்னை வெறும் நிர்வாகியாக வெளிப்படுத்திக்கொண்டாரே தவிர, ஒரு அரசியல்வாதியாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளத் தவறி விட்டார்.
காவிரி பிரச்சனையில் நெய்வேலியில் அனைத்து நடிகர்களையும் ஒன்று திரட்டி சுமூகமாக நிர்வகித்து , அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தாலும், அது ஒரு சினிமா நிகழ்ச்சியைப் போலச் சுருங்கி விட்டது .
அதில் அரசியல் ரீதியாக மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மாறாக, அதற்கு அடுத்த நாள், தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த ரஜினியின் உண்ணாவிரதத்தில் எத்தனை அரசியல் !!!
கலைஞர் அவர்களே ஸ்டாலினிடம் கடிதம் கொடுத்து அனுப்பி வாழ்த்திய வரலாற்று நிகழ்வல்லவா அது !!!
சுருக்கமாக மக்கள் சொன்னது இதைத் தான்... விஜயகாந்த் அருமையாகப் போராட்டம் செய்தார், ரஜினிகாந்த் அதிரடியாகப் போராட்டம் செய்தார்.
இந்த "அருமை" மற்றும் "அதிரடி" ஆகிய இரு வார்த்தைகளுக்குள்ள மெல்லிய வித்தியாசம் தான், ரஜினியை அரசியல் ரீதியாக மக்களின் முன் நிறுத்துகிறது...
மேலும் 1991 - 1996 காலக் கட்டத்தில் ஜெ எவ்வளவு பெரிய Terror ஆக இருந்தார் என்று இன்றைய 90's Kids க்குத் தெரிந்திருக்க வாய்பில்லை.
ஆனால் தனது தைரியம், திறமை, capacity ஆகியவற்றை அந்த Terror இடம் வெளிப்படுத்தி அதில் வெற்றியும் கண்ட ரஜினியை தமிழக மக்கள் ஒரு அரசியல் தலைவனாகவே பார்க்க துவங்கினர்.
இப்போது உள்ள சிலர், நான் ரஜினியின் படம் என்றால் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன், ஆனால் அரசியல் என்று வந்தால் நான் அவரை எதிர்ப்பேன் / யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறுகின்றனர்.
எதிர்ப்பேன் என்று கூறுபவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் !! "எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம்" என்று ரஜினியே கூறியுள்ளார்.
தனக்கு எதிர்ப்பு இருந்தால் தான் தன்னால் அதைச் சரி செய்து கொண்டு சிறப்பாகச் செயல் பட முடியும் என்று எண்ணுகிறார்.
ஆனால் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான். கொஞ்சம் Logic உடன் உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.
யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறுபவர்கள் தான் உண்மையான அரசியல் அக்கறையும், அதே சமயம் எந்தத் தலைவரைத் தேர்ந்து எடுப்பது என்ற குழப்பமும் உடையவர்கள்.
அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை விடக் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம். இவர்களில் யார் உண்மையிலேயே நல்லாட்சி தருவார் என்பதில் 1000 மாற்றுக்கருத்து இருக்கலாம்.
இருக்கும் 1000 Option களில் ரஜினி எனும் Option ஏன் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு Option ஆக உள்ளது என்பது தான் நான் எழுதிய மூன்று கட்டுரையின் சாராம்சம்.
அது சரி, ரஜினி சிறந்த தலைவனாகவே இருக்கட்டும், இந்த வயதில் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் ?
அதிரடியாக உண்ணா விரதம் நடத்திய அவர் , ஏன் அதிரடியாகக் கட்சி ஆரம்பிக்கவில்லை ? ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே கருத்து சொல்கிறாரே ?
கொள்கையைக் கேட்டால் "ஆன்மீக அரசியல்" என்று ஒற்றை வரியில் சொல்கிறாரே !!! ஆன்மீக அரசியல் உண்மையிலேய நமக்குத் தேவையா?
இந்த நிலையில் ரஜினியை ஆதரிப்பது தமிழகத்திற்கு நல்லதா / ஆபத்தா ??
பேசித் தெளிவோம்....
- விக்னேஷ் செல்வராஜ்
|