Other Articles
Shankar Interview in Kungumam Magazine
Superstar: Rajnikanth highest paid actor in India
Superstar became Super Grandpa
Japanese in Chennai to Watch Chandramukhi after 50
Thalaivar at imsai Arasan function
Thalaivar is highest paid actor in India.. NDTV Re
Sri Vidya passed away on 20 Oct 2006. Write up on
Superstar Became SuperGrandpa!!!!
Now Director Velu Prabakaran praising our Thalaivar.....
Superstar at Actor Surya and Actress Jothika Marriage Function
Danush Interview in Ananda Vikatan
Superstar at Thamiraparani Movie Launch
Superstar at Sivaji Statue Opening Function
P Vasu son Sakthi emerges as actor! Rajini, Kamal welcome the budding star!!
Rajinikanth Muthu movie in a French film!!
I am eagerly waiting for poll results in TN, says Rajnikanth
South India Film Chamber of Commerce paid tributes to Rajkumar
Top 50 List in India Today Magazine
Rajnikanth all set to star in new animation film
Rajinikanth Birthday 2006 Activities

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Will Rajini accpet the Ravana role????
(Friday, 10th November 2006)
 
அஜய் தேவகன், கஜோல் நடிப்பில் பிரமாண்டப் படைப்பாக இந்தியில் உருவாகவுள்ள ராமாயாணம் படத்தில் ராவணன் வேடத்தில் நடிக்க ரஜினியை கேட்டுள்ளாராம் பிரபல இயக்குநூநூர் ராஜ்குமார் சந்தோஷி.

இந்தித் திரையுலகின் பிரபல இயக்குனரான ராஜ்குமார் சந்தோஷி, ராமாயணத்தை திரைப்படமாக எடுக்கவுள்ளார். ரூ. 50 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை அவர் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ராமனாக அஜய் தேவகனும், சீதையாக அவரது மனைவியும், நடிகையுமான கஜோலும் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ராவணன் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என சந்தோஷி யோசித்தபோது ரஜினிதான் அவரது மனதில் தோன்றியுள்ளார். உடனேயே சென்னைக்குக் கிளம்பி வந்த சந்தோஷி, ரஜினியை சந்தித்து தனது மனக் கிடக்கையை தெரிவித்துள்ளார்.
ரஜினியும் ராமாயணம் பிரமாண்ட திரைப்படமாக உருவாகப் போவதை அறிந்து சந்தோஷப்பட்டாராம். இருப்பினும் ராவணன் வேடத்தில் நடிப்பது குறித்து சந்தோஷியிடம் அவர் பதில் எதையும் சொல்லவில்லையாம் யோசித்துச் சொல்வதாக கூறியுள்ளார்.
ரஜினி ராவணனாக நடித்தால் நிச்சயம் படம் பிரமாண்ட வெற்றி பெறும் என்பது சந்தோஷியின் கணக்கு. ஆனால் ரஜினி நடிப்பாரா என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் சந்தோஷி 'திராவிடர் கழக' கோணத்தில் இதை அணுகியுள்ளாராம்.

அதாவது ராவணன், சீதையைக் கடத்திப் போனான் என்பது நிஜம்தான். ஆனால், சீதையை ஒருபோதும் ராவணன் தொட்டதில்லை. யாரும் அவ்வளவு சீக்கிரம் அண்டி விடாதபடி, ஒரு பாதுகாப்பான இடமான அசோக வனத்தில்தான் சீதையை சிறை வைத்திருந்தான்.

மேலும், ராவணன் தீவிரமான சிவ பக்தன். எனவே ராவணனை வில்லனாக பார்க்கவே முடியாது. அவன் செய்த ஒரே தவறு சீதையை கடத்திச் சென்றது மட்டும்தான். எனவே நிச்சயம் ரஜினி இந்தக் கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்வார் என்று சந்தோஷி நம்பிக்கையாக தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளாராம்.
முதலில் சீதை வேடத்தில் நடிக்க நம்ம ஸ்னேகாவைத்தான் பார்த்துள்ளார் சந்தோஷி. மேக்கப் டெஸ்ட் கூட பார்த்தாகி விட்டதாம். பார்த்தவுடனேய பளீர் என தோன்றும் ஸ்னேகாவின் வசீகரம், சீதை வேடத்திற்கு மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பது அவரது எண்ணம். ஆனால் திடீரென அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு கஜோலுக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்து விட்டார் சந்தோஷி.

சினிமாவில் ராவணனான (வில்லனாக) இருந்த ரஜினி 'ராமனாகி' பல காலமாகிறது. மீண்டும் அவர் ராவணன் ஆவாரா?





 
0 Comment(s)Views: 1291

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information