Other Articles
Rajini film audio release analysis
Kusalan songs - Howz it?
Kuselan breaks first-day records!
Kuselan Audio Review - Simply stunning
The highly anticipated Thalaivar's Speech..
Superstar's Kuselan audio launch at Le Meridian.
Kuselan - Super Star ordered?
Kuselan Audio launch - Invitation design
Video clip of Superstar speech in a school function in 90's
King Khan vs Southern Shehanshah Rajini
Superstar Rajini among 50 most admired Indians!
Thalaivar style finds eager fans in Pakistan
Superstar Rajinikanth will soon be seen in comics
Superstar at Vairamuthu's son marriage function
Rajini's charm stuns foreigners
Kuselan Telugu Gallery – Completely different from Tamil
Kuselan - Audio on June 30
Exclusive New Kuselan Stills
Kuselan - Counting starts...
Big Music gets Kuselan audio for Rs 2.25 crore - record price

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
Super Star as Thiruvalluvar?
(Saturday, 5th July 2008)
ஈயை பேனாக்கி, பேனை பெருமாளாக்கும் சித்து வேலையெல்லாம் பத்திரிக்கைகளுக்கு வழக்கமான விஷயம்தான்.  திருவள்ளுவராக நடிக்க ரஜினியை அணுகியிருக்கிறோம்  என்று வந்த ஒற்றை வரிச் செய்தியையே கவர் ஸ்டோரியாக்கியிருக்கிறார்கள்.

வழக்கம்போல் ரஜினி தரப்பு பற்றி பத்திரிக்கைகள் கவலைப்படவில்லை. ரஜினியை பற்றி எந்தச் செய்தி வந்தாலும், எங்கிருந்து மறுப்பு வந்தாலும் எல்லாமே சர்க்குலேஷன் சம்பந்தப்பட்ட சங்கதிகள் என்பதால் திருவள்ளுவர் விஷயத்தையும் முடிந்தளவுக்கு காசாக்கியிருக்கிறார்கள்.

மயிலை மறை மாவட்டம் தயாரிக்கப்போகும்  புதிய படத்தின் பெயர் `புனித தோமையார்'. இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்து, இந்தியாவுக்கு வேதம் போதிக்க வந்து  உயிர்நீத்தவர்தான் புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம்  திரைப்படமாக எடுக்க இருக்கிறது. இதுதான் சினிமா வட்டாரத்தில் உலா வரும் செய்தி.

இதில் ரஜினி எங்கே வருகிறார்? படத்தில் தோமையாரும் திருவள்ளுவரும் சந்திப்பது போல ஒரு காட்சி. அதில்தான் திருவள்ளுவராக ரஜினி நடிக்கப்போவதாக செய்தி பரப்பப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் சொல்வது இதுதான்.  படம் பற்றி விவாதம் நடந்தபோது,  ரஜினியின் நண்பர்  வள்ளுவரின் கேரக்டரில் ரஜினி  நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என்றாராம்.  உடனே, ` நீண்டகால நண்பர் என்ற முறையில் ரஜினியின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு' என  சம்பந்தப்பட்டவர்கள் அவரை கேட்டுக்கொண்டாரர்களாம், அந்த நண்பரும் ரஜினியிடம் இது  பற்றி பேசுவதாக சொல்லியிருக்கிறாராம். அவ்வளவுதான் விஷயம்.

கவர் ஸ்டோரி எழுதுவதற்கு இது போதாதா?  இதில் ரஜினிக்கு ஜோடியாக வாசுகியாக நடிக்கப்போவது யார் என்கிற கேள்வியையும் கேட்டு பரபரப்பான விஷயமாக்கியிருப்பதுதான் வேடிக்கை.

Previous

Next
 
   
0 Comment(s)Views: 1171

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information