ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு – பகுதி 1

பட உலகைச் சேர்ந்த பலரும் அறிந்த ஒரு உண்மை – உலகப் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்த் ஒருகாலத்தில் பேருந்து நடத்துநராக இருந்தவர்.

அபூர்வமான அறிவாள், கடுமையான உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால் “சூப்பர் ஸ்டார்” ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அவருடைய புகழ் உச்சத்தில் பிரகாசிக்கிறது.

ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அவருக்கு “ரஜினிகாந்த்” என்ற பெயரை வைத்தவர் இயக்குநர் கே. பாலச்சந்தர்.

ரஜினிகாந்த் இளம் வயது படம்

பெற்றோர்

ரஜினியின் தந்தை பெயர் ராமோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய்.

“கெய்க்வாட்” என்பது குடும்பப் பெயர். மராட்டிய மன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மேல்காப்பாளர்களாக இருந்தனர். பின்னர் சிலர் கர்நாடகத்தில் குடியேறினர். ரஜினியின் தந்தை பெங்களூரில் போலீஸ் துறையில் பணியாற்றினார்.

பிறப்பும் குழந்தைப் பருவமும்

ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். பிறந்த நேரம் காலை 11:45.

தாயார் ராம்பாய் ரஜினி 5 வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தந்தை மறுமணம் செய்துகொண்டார். ரஜினிக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரர்கள் உள்ளனர்.

சிறு வயதிலேயே ரஜினி துறுதுறுப்பும், குறும்பும் நிறைந்த குழந்தையாக இருந்தார். படிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை, ஆனால் நாடகம், நடிப்பு, கலை நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

ரஜினிகாந்த் குடும்ப புகைப்படம்

இளமைப் பருவத்தில் முரட்டுத்தனம்

இளம் வயதில் ரஜினி முரட்டுத்தனமாக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற பழக்கங்களில் ஈடுபட்டார். மீசை நன்றாக வளர வேண்டும் என்று மையினால் மீசை வரைந்து கொள்வதும் வழக்கம்.

ரஜினி ஒரு பேட்டியில் கூறியது:

“பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அது மாதிரி நான் வளர்ந்தேன். சின்ன வயதிலேயே ‘செக்ஸ்’ என்றால் என்னவென்று தெரியும். மூத்த நண்பர்கள் குடித்துவிட்டு தாசிகள் வீட்டுக்கு போவார்கள். நான் நின்று பார்த்திருக்கிறேன். 16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபோது கொஞ்சம் மாறினேன். ஆனால் பத்தாம் வகுப்பு முடித்தபின் மீண்டும் முரட்டுத்தனம் திரும்பியது.”
ரஜினிகாந்த் இளம் வயது

ஒரு சம்பவத்தில் பெண்ணை விரட்டியதாக போலீஸ் புகார் வந்தபோது, ரஜினியும் நண்பர்களும் பிடிபட்டனர். ஆனால் தந்தை போலீஸ் அதிகாரி என்பதால் விடுவிக்கப்பட்டார். இதை அறிந்த அண்ணன் சத்தியநாராயணன் ரஜினியை கடுமையாக அடித்தார்.

பூதச்சாமியார் பற்றிய கதையும் இளம் வயதில் நடந்த துணிச்சல் நிகழ்வு. (அதை பகுதி 2-ல் விரிவாகப் பார்க்கலாம்)