Sivappu Sooriyan

Rajinikanth Sivappu Sooriyan

அடி முந்தானை பந்தாட

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே

பெண் : ஆ…

ஆண் : ஆ….

பெண் : ஆ…..

ஆண் : அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே

பெண் : நீதானே சூரப்புலி
அட நான்தானே சோடிக்கிளி
பூப்பூத்த ரோஜாச் செடி
இதை காப்பாத்த லேசா புடி

ஆண் : காவேரி நீராட்டமா
வாடி கஸ்தூரி மானாட்டமா
காவேரி நீராட்டமா
வாடி கஸ்தூரி மானாட்டமா
ஆத்தோர காத்தாட ஆனந்த கூத்தாட
வளைக்கரம் அணைத்திட வரலாமா

பெண் : அட முந்தானை பந்தாட
வந்தாளே சிந்தாமணி
மெதுவா நீ தொட்டதும் சுட்டதய்யா
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
மனசு கைப்பட்டதும் கெட்டதய்யா…

ஆண் : நீ சூடும் பூவாசனை
அது தேடாதோ ஆண் வாசனை
நாள்தோறும் உன் யோசனை
மனம் செய்யாதோ ஆராதனை

பெண் : போட்டானே பூபாணம்தான்
நாளும் பொண்ணான நாளாகத்தான்
தோளோடு தோள் சேர பாலோடு தேன் சேர
துடிக்கிற துடிப்பென்ன தெரியாதா……

ஆண் : அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே

பெண் : பாடாத தேவாரம்தான்
இவள் வாடாத பூவாரம்தான்
ராசாதி ராசாவும் வந்தான்
வந்து ஏறாத பல்லாக்குதான்

ஆண் : நான்தான்டி நடுராத்திரி
ஒன்னை தாலாட்டும் நீலாம்பரி
காதோரம் நான் பேச கண்ணோரம் நீ பேச
மயக்கமும் கிறக்கமும் தெளியாதா…….

பெண் : அட முந்தானை பந்தாட
வந்தாளே சிந்தாமணி
மெதுவா நீ தொட்டதும் சுட்டதய்யா
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
மனசு கைப்பட்டதும் கெட்டதய்யா…

ஆண் : அடி முந்தானை பந்தாட
வந்தாடும் சிந்தாமணி
கனியே என் உத்தம பத்தினியே
இளமொட்டாகி பூவாகி காயான செம்மாங்கனி
கிளியே என் அந்தரி சுந்தரியே

மிஸ்டர் மிராண்டா

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : மிஸ்டர் மிராண்டா

ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா
உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா…
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா…
பூலோகம் பூராவும் எல்லாமும் என் ஏரியா

பெண் : சூசு சூசூசூ…

ஆண் : ஆனாலும் நான் வாழும் தேசம் நைஜீரியா

பெண் : ஹா…..ஹா…..ஹா…..ஹா…ஹா….

ஆண் : காடு நடுங்கும் சாது மிரண்டால்
நாடு நடுங்கும் நானும் எழுந்தால்
அஞ்சாத நெஞ்சுண்டு கெஞ்சாத கண்ணுண்டு
எங்கேயும் பேருண்டு என்னாட்டம் யாருண்டு பார்…..

ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா
உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா
வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா…

பெண் : உன்னைப்போல் யார் சூப்பர் ஸ்டார்
உன் கையில் நான் பேஸ் கிட்டார்
என்னைதான் நீ நேசிப்பாய்
என் கன்னம் உன் விஸ்கி பார்
வில்லாதி வீரன் சூராதி சூரன்
எல்லாமும் சேர்ந்து பொல்லாதவன் நீ
மன்னாதி மன்னா என் கண்ணான கண்ணா
உன் பின்னாடி கொத்தாட
கொத்தோடு முத்தாட வா….

ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா

ஆண் : உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா இருவர் : வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா…

பெண் : அன்பே வா நான் உன் ஜோடி
அங்கேதான் உன் லவ் ஸ்டோரி
பக்கம் வா ஓ மை டியர்
பெண்ணல்ல நீ ரெட் ப்ளவர்……

பெண் : அன்பே வா நான் உன் ஜோடி
அங்கேதான் உன் லவ் ஸ்டோரி
நீ பார்க்கும் பார்வை மின்னல்கள் போலே
நேராக பாயும் பெண்பாவை மேலே
என்னோடு உன்னாட்டம் உன்னோடு என்னாட்டம்
வண்டாடும் செண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம் வா…..

ஆண் : மிஸ்டர் மிராண்டா நேரில் வரான்டா

பெண் : உங்கப்ப மவன்டா எதிரி எவன்டா இருவர் : வில்லாதி வில்லனை வெல்லுவான்டா
சொல்லாத பாடங்கள் சொல்லுவான்டா…

நான் கண்ட கண்ட

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஹான்….
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்….

பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஹான்….ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்….

பெண் : வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் தார்குச்சிய காட்டி காட்டி
என்னை மெரட்டுவான்
வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் தார்குச்சிய காட்டி காட்டி
என்னை மெரட்டுவான்
வாழைப்பழம் விற்பவனை கட்டிக்க மாட்டேன்
அவன் பசிக்கிறப்போ பழத்த கொடுத்து
திங்கச் சொல்லுவான்…..திங்கச் சொல்லுவான்…..

பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்….ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்….

பெண் : நாதஸ்வர வித்வானை
கட்டிக்க மாட்டேன்
அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி
என்னை தேடுவான்
நாதஸ்வர வித்வானை
கட்டிக்க மாட்டேன்
அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி
என்னை தேடுவான்
சலவை தொழில் செய்பவனை
கட்டிக்க மாட்டேன்
நான் தாறுமாறா நடந்துக்கிட்டா
வெளுத்துக்கட்டுவான்….வெளுத்துக்கட்டுவான்….

பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்….ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்….

பெண் : பஸ் ஓட்டும் டிரைவரை நான்
கட்டிக்க மாட்டேன்
அவன் பழக்க தோஷம் கனவில் கூட
ஹாரன் அடிப்பான்
பஸ் ஓட்டும் டிரைவரை நான்
கட்டிக்க மாட்டேன்
அவன் பழக்க தோஷம் கனவில் கூட
ஹாரன் அடிப்பான்
போலீஸ்கார மாப்பிள்ளையை
கட்டிக்க மாட்டேன்
அவன் பொசுக்குன்னுதான் கோபம் வந்தால்
லத்தியால் அடிப்பான்….லத்தியால் அடிப்பான்….

பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய
கட்டிக்க மாட்டேன்
அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்….ஹான்
நான் ஒத்துக்க மாட்டேன்
மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்….

தங்கச்சி சிரிச்சாளே

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வாலி
இசையமைப்பாளர் : M. S. Vishwanathan
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக……..
எதற்காக…..எனக்காக….

ஆண் : திரும்பும் திசையெல்லாம்
தென்றல் போல் ஓடியவள்
திரும்பும் திசையெல்லாம்
தென்றல் போல் ஓடியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
திருவாய் சளைக்காமல் தினமும் பேசியவள்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
வாய்மலர் மூடியதேன் வார்த்தை ஓடியதேன்
ஊமை நாடகத்தை உதடுகள் ஆடியதே
உதடுகள் ஆடியதே

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக……..

ஆண் : வசந்தம் சிரித்தாலே
வண்ணத்தேன் பூ மலரும்
வசந்தம் சிரித்தாலே
வண்ணத்தேன் பூ மலரும்
வைகை சிரித்தாலே மதுரை வாழ்வு பெறும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்பிகை சிரித்தாலே ஆலயம் அழகொளிரும்
அம்மம்மா நீ சிரித்தால் அண்ணனின் மனம் குளிரும்
அண்ணனின் மனம் குளிரும்
சிரித்தாலே……..சிரித்தாலே……

ஆண் : ஒரு கண் அழுதாலே
மறு கண் கலங்காதோ
ஒரு கண் அழுதாலே
மறு கண் கலங்காதோ
உனக்கோர் துயர் என்றால்
எனக்கும் பொருந்தாதோ
உனக்கோர் துயர் என்றால்
எனக்கும் பொருந்தாதோ
நீ வந்த தாய் மடியும்
நான் வந்த மடிதானே
நீ வந்த தாய் மடியும்
நான் வந்த மடிதானே
இருமலர் பூத்ததவும்
ஒரு மரக் கிளைதானே
ஒரு மரக் கிளைதானே

ஆண் : தங்கச்சி சிரிச்சாளே
செவ்விதழ் விரித்தாளே
மல்லிகை சிரிப்பாலே
மௌனம் கலைத்தாளே
எதற்காக எனக்காக……..