Related Articles
Rajinikanth is very humble and down-to-earth: Amy Jackson
O. Pannerselvam used Rajinikanth name to win local chairman election
Superstar Rajinikanth took part as the chief guest in the inaugural of a new shop in Malaysia
"மலரட்டும் மனிதநேயம்"…. இப்படி ஒரு கட்டுக்கோப்பான மாநாடு எங்கும் நடந்ததில்லை!
Superstar Rajinikanth to be honoured with Padma Vibhushan
பாட்ஷா வசனம் படத் தலைப்பானது… ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்!
Akshay Kumar never dreamt of working with Rajinikanth!
Rajinikanth inspires Malaysian Taxi drivers to provide free service for pregnant women
"2.0" கதைக்களம்: எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புத் தகவல்கள்
2.0 to be Most Expensive Indian Film With Rs 350 Crore Budget

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பூரண நலமுடன் இருக்கிறார் தலைவர் ரஜினி!
(Tuesday, 23rd February 2016)

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.

தலைவர் ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடிப்பதாலும், இந்தப் படங்களுக்காக  வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் களைப்பு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரஜினிகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் சென்றார். அங்குள்ள அறை எண் 101-ல் ரஜினிக்கு டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது.

‘ரஜினிக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகள்தான் நடந்தது. அவர் உடல் நலத்தோடு இருக்கிறார். மாலையே வீடு திரும்பி விடுவார்’ என்று மருத்துவமனை சார்பில் தெரிவித்தனர். அதுபோலவே சிகிச்சை முடிந்து மாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

இதுகுறித்து தலைவர் வீட்டில் நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, “தலைவருக்கு எந்த உடல் நலக் கோளாறும் இல்லை. அவர் மிகவும் நலமாக இருக்கிறார். 2011-ம் ஆண்டு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு அவர் பரிசோதனை எதுவும் செய்யாமல் இருந்தார். இப்போது அந்த வழக்கமான  பரிசோதனைதான் நடந்தது. அவர் உடல் நிலை சிறப்பாக இருப்பதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது,” என்றனர்.

அந்த நாட்கள்…

ரஜினிக்கு கடந்த 2011 ஏப்ரல் மாதம் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்துக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. டாக்டர்கள் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறினர்.

இதைதொடர்ந்து சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றார்.

தீவிர சிகிச்சைக்குப்பிறகு பூரண குணம் அடைந்து சென்னை திரும்பினார்.  அதன்பிறகு கோச்சடையான் மற்றும் லிங்கா படங்களில் நடித்தார்.

என்வழி






 
0 Comment(s)Views: 979

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information