Related Articles
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)
Why so much build up for ordinary victory?
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவரின் ரசிகர்களுக்கு ஒரு வகையில் தேசிய கீதம்...!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
(Sunday, 28th September 2008)

ரஜினி எதிர்பார்த்த ‘வேளை’ வந்துவிட்டதா?

இந்தத் தொடர்ச்சியை நீங்கள் படிக்கும் தருணத்தில் என்ன மாதிரி செய்திகள் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கும், அவற்றைப் படித்துவிட்ட பின் உங்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் உணர முடிகிறது.

சிலர் ரஜினிக்கு சுத்தமாக ஆதரவே இல்லை என்றும், இன்னும் சிலர் கட்சி தொடங்க ரஜினிக்கு ஜோசியர் அனுமதி கொடுத்துவிட்டார் எனறெல்லாம் தங்கள் கற்பனை எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறார்கள். முன்பே நாம் சொன்து போல கதை வசனத்தை சினிமாக்காரர்களை மிஞ்சும் அளவுக்கு லாஜிக்குடன் எழுதக் கற்றுக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்.

இருக்கட்டும்... அதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். மேலே தொடருங்கள்...

ரஜினி அரசியலுக்கு வர இது உகந்த தருணமா... அல்லது அவர் நினைப்பது போன்ற சாதகமான சூழல் இப்போது உள்ளதா... இதுதான் நண்பர்கள் பலரும் நம்மைக் கேட்கும் ஒரே கேள்வி.

நிச்சயம் ரஜினி விரும்பிய மாதிரி ஒரு நல்ல சூழல் இப்போது தமிழகத்தில் இல்லைதான்.
ஆனால்-

முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட அந்த சாதகமான சூழலில் ரஜினி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஒரு நல்ல ஆட்சியாளர் எனப் பெயரெடுக்க ரஜினி பெரும்பாடுபட்டிருப்பார்... ஆனால் அவர் மூலம் நிறைய அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்த கும்பலால் அவருக்கும் கெட்ட பெயராகி, சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும்கூட இழக்க வேண்டி வந்திருக்கும். சுயநல அரசியல் தந்திரர்களிடம் சிக்கி பெரும் வேதனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும்.

அன்றைக்கு ரஜினி ஒரு பெரும் அரசியல் சக்தியாக இருந்தார் (இப்போதும்தான்... லயோலா சர்வேயையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!). அதனால் அவரை வைத்துக் குளிர் காய பெரும் கூட்டம் காத்திருந்தது. தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத கோபத்தில் ரஜினிக்கு எதிராகப் போனவர்கள்தான் இப்போது ரஜினியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த 12 ஆண்டுகளில் ரஜினியை அரசியலுக்கு வருமாறு மக்கள் நிர்பந்தப்படுத்துவது இது 3-வது முறை. ஆனால் இன்றைய சூழல் மற்ற இரு சந்தர்ப்பங்களிலிருந்தும் வேறுபட்டது. அன்று ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, ஏழை, பணக்காரன், படித்த, படிக்காதவர்கள் என்ற பேதமில்லாமல் பொதுமக்கள், மீடியா, பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஆன்மீகப் பெரியவர்கள்... அட அவ்வளவு ஏன்... காவல் துறையினர் கூட ரஜினி முதல்வராக வரவேண்டும் என விரும்பினர்.

ஆனால் இன்று-

ரசிகர்களும், பொதுமக்களும் மட்டும்தான் ரஜினிக்கு பலமாக நிற்கிறார்கள். மற்ற பிரிவினரிடம் பெரிய சலனம் எதுவும் தெரியவில்லை. காரணம் மீடியா உலகம் ஒட்டு மொத்தமாக அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

அவர் என்னதான் நல்லது செய்தாலும் அதிலும் ஒரு குற்றம் சொல்லத் தயாராக நிற்கிறது மீடியா.

அதிகார வர்க்கம் அவர் பக்கமில்லை. பொதுமக்களில் ஒரு பிரிவினர்கூட ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போதும் அதே போன்ற நிதானத்தைதான் ரஜினி கடைப்பிடிக்கிறார். இதுதான் நல்ல தலைவன் மற்றும் நிர்வாகிக்கு அடையாளம்.

இந்த விஷயத்தில் ரஜினி ஒரு ஞானி (முற்றும் உணர்ந்தவர் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்!). அன்றைய வரவேற்புக்கு மயங்கிவிடவும் இல்லை, இன்றைய எதிர்ப்பு நிலைக்கு அஞ்சவும் இல்லை. எந்த மண்ணிலும் தவழ்ந்து, எத்தகைய மனிதர்களையும் தழுவிச் செல்கிற நதி மாதிரிதான் அவரது ஓட்டம்!

ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்ட தாமதம்தான் மக்கள் மனதில் அவர் மீதிருந்த நல்ல அபிப்பிராயத்துக்கு ஒரு தற்காலிகத் திரையைப் போட்டிருக்கிறது. அப்படியெனில் மக்கள் அவர்மீது வெறுப்பாக இருக்கிறார்களா என்றால் அப்படியும் இல்லை. இது வெறுப்புமில்லை, விருப்பும் இல்லை...

‘வந்தா வரட்டும்... பார்க்கலாம்’ என்ற ஜஸ்ட் லைக் தட் அணுகுமுறை இது!

ஆனால் மக்களின் இந்த மனநிலை மாறும். அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மீது விழுந்துள்ள தற்காலிக திரை நிச்சயம் மறையும். அதற்கு உகந்த நேரம் இதுதான்!

ரஜினி எந்த முடிவை அறிவிப்பதாக இருந்தாலும் அதற்கு இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியவில்லை.

'நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். குசேலன் படத்தில் நான் பேசிய வசனங்களே முடிவானவை' என அவர் அறிவித்துவிட்டாலும் கூட மக்கள் ஒன்றும் விமர்சிக்கப் போவதில்லை.

'பரவால்லய்யா... தில்லான ஆள் இவர். என்னதான் வருந்தி வருந்தி கூப்பிட்டாலும் அரசியல்.. கட்சியெல்லாம் தனக்கு ஒத்து வராதுங்கிறதுல தெளிவா இருக்காரே...' என்று மக்கள் பாராட்டுவார்கள்...

இதற்காக அவர் படத்தைப் பார்க்காமலும் இருக்கமாட்டார்கள். அரசியலில் தோற்றாலும் நடிப்பில் மரியாதைக்குரிய ஒரு உயர்ந்த இடம் ரஜினிக்குக் கிடைக்கும்.

ரசிகர்கள்தான் மனம் வெதும்பிப் போவார்கள். ச்சே... இதுக்காகத்தானா இவ்வளவு காலம் காத்திருந்தோம் என்று வெறுப்பின் விளிம்புக்குப் போவார்கள். அதுகூட எந்திரன் அல்லது சுல்தான் ரிலீஸ் வரைக்கும்தான்.

மனதுக்குள் நெருடலும் கோபமும் மிச்சமிருந்தாலும், தங்கள் அபிமான சூப்பர் ஸ்டாரின் படத்தை ஒரு ரசிகன் என்ற முறையில் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டார்கள். ரஜினி ரசிகர்களின் மனநிலை அப்படித்தான். ரஜினியும் விரும்பும் வரை சூப்பர் ஸ்டாராகவே இருக்கலாம்.
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால் -

நிச்சயம் இது ஒரு பாதுகாப்பான பந்தயமாக அமையும் ரஜினிக்கு.

அலையின் வேகத்தோடு கடலோடுவதில் என்ன வீரமிருக்கிறது? அதே அலை எதிர் முகம் காட்டும் போது கடலோடுவதில் ஏதாவது விவேகமிருக்கிறதா? கப்பல் கவிழ்ந்து கதியற்றுப் போகவேண்டி வரும்.

ஆனால் சாதகமான அலையும் எதிர்ப்பலையும் இல்லாத ஒரு இயல்பான நிலையில் கடலோடுவதுதான் நிலையான வெற்றிகளைத் தரும். இலக்கை அடைய சற்று தாமதமானாலும் எதிராளிகளை சரியான வியூகமிட்டு வீழ்த்த போதிய அவகாசமும், அதற்குத் தோதான தெளிந்த மனநிலையும் இருக்கும்.

அப்படியொரு தருணம் இதுதான்!

ஆனால் இந்த முறையும் ரஜினி எந்த முடிவும் சொல்லாமல் தவிர்த்தால், அவருக்குத்தான் பல சங்கடங்கள் தோன்றும். கடந்த இருமுறைகளிலாவது மக்களின் அதிருப்தி அவருக்கு எதிராகத் திரும்பியது. ஆனால் இம்முறை மக்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் எதிராகத் திரும்பி விடும் அபாயமிருக்கிறது.

ரஜினி எப்போதும் விவேகமான முடிவுகளைத்தான் மேற்கொண்டிருக்கிறார். சிலர் அவரைக் குழப்பவாதி என்று வர்ணித்ததுண்டு. நிச்சயம் இல்லை. விவேகமுள்ள ஒரு தலைமைக்குரிய குணம் அவரிடம் உள்ளது. அதை எப்போது வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது வெளிப்படுத்தினால் போதும் என்றுதான் அவர் தனது நண்பர்களிடம் கூறிவந்திருக்கிறார்.

ஆகவே எந்த முடிவாக இருந்தாலும் ரஜினி அதைத் தயங்காமல் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவே... உரிய முறையில் இதைப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே உயர்வு நிச்சயம்!

சரி...ஒருவேளை அரசியலுமில்லாமல், சினிமாவுமில்லாமல்... எல்லாரும் சொல்லிக் கொண்டிருப்பது போல சமூக நல இயக்கம் ஆரம்பித்தால், எத்தகைய வரவேற்பிருக்கும்?

நாளை அலசலாமே!

-Vinojasan


 
26 Comment(s)Views: 5360

12Next Page
Next
nagorebari,india/nagore
Sunday, 8th November 2009 at 13:20:48

தலைவருக்கென்று ஒரு இடத்தை தமிழக மக்கள் மனதில் வைத்துள்ளார்கள் அவ்ர் எப் போது வந்தாலும் அவ்ர்தான்யா முதல்வர்..!
நாகூர் பாரி
நாகை மாவட்ட ரஜினி மன்றம்
நாகூர்‌


‌ யெப்‌

sathish babu,sivagangai
Sunday, 12th October 2008 at 02:22:27

rajini is the next cm and also one an only super star.
ramana,dubai
Thursday, 2nd October 2008 at 02:32:20

please dont enter politics.there are politician to change world.your present life style is stylish. well wisher
yours loving, ramana

johnroyal,chennai
Wednesday, 1st October 2008 at 09:25:50

the whole world is talking about our thalaiver political entry according to our thalaiver dialog
in this world every thing already desided by our lord,thats what happening to day god had given wonderful leader for tamil nadu every thing will be good news

sekar,
Wednesday, 1st October 2008 at 09:18:27

ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அவரால் மட்டுமே நல்ல தலைவராக இருக்க முடியும்
மற்றவர்கள் யாவரும் அவரை பின்பற்ற மாட்டார்கள்
இதனால் தான் ரஜினி யோசிக்கிறார்.

p.prabhu B.E ASSISTANT ENG ,TNEB,chennai
Tuesday, 30th September 2008 at 09:24:34

thailiva nee definita politics varanum.pathavikku engubhavargal pala kodi pathaviya c.m post thavamiruku un varugaiyai nadi dont hesitate. tell us soon good news
megala.skc,india-karaikudi
Tuesday, 30th September 2008 at 06:30:44

romba nalla vivatham.rajini enna ninaikiraro athila avar theliva irukattum athula sirappa seyal padatum. naama kattayapadithi politics
kulla vanthuttu athanala avar manasu kashtapada kooodathu bcaz,arasiyalla nallathu panna yarum
varamaatanga but nallathu ninaikara oruthana kavukkanumna ella onnu kooduvanunga ithan ippo irukara arasiyal.so rajini sonna un vazhkai un kayil vasanam avarukkum porunthum avaroda
vazhkai eppavum avar kayil.aandavan etha
kattalai iduraro atha miga sirappa seyvar
.athu arasiyala iruntha romba romba santhosham.angayum aandavan kooda iruppar. so naama rajini sir a kattayapadutha
koodathu.

padmanabhan,karnataka
Tuesday, 30th September 2008 at 01:58:56

It is upto rajini sir to decide whether he has to come to politics or not. If he comes we all will be very happy and if he doesnt come we all will also not be unhappy. A man who longs for loneliness,spritual thinking,mediatation and peace definitely will not choose politics as his second destination. He has helped people,he is also helping people and will also help people in future with any aspect. Politics is a open garbage and has lot of dirt and stagnated water. He has the ability to make this dirt into a smelling perfume or he can ignore this dirt and continue this tendency of helping to the people. Whatever the media says or some anti rajini politicians say he will still remain as lynchpin of kollywood and an evergreen superstar in the hearts and minds of peoplein Tamilnadu,India and Abroad.
Raj T,USA
Monday, 29th September 2008 at 11:28:43

'ரசிகர் வாழ்க்கை ரஜினி கையில் ‍ தண்டமுண்ட மலர் வாந்தியெடுத்திருப்பது' என்பது ஒரு விதமான Excuse அது ஒரு 100% தவறான கருத்து...அது க‌ருத்தல்ல , முட்டாள் தனமான கிரிமினல் குற்றச்சாட்டு!! ரஜினி முப்பது வருசமா தன் ரசிகர்களிடம் "உன்னையும் உன் தொழிலையும், உன் குடும்பத்தையும் பார்! !!" என்றுதான் கூறினார்! ரஜினியின் மற்ற டயலாக் எல்லாத்தையும் மேற்கோளிட்டு காட்டும் கபோதிகளே " உன் வாழ்க்கை உன் கையில்" என்ற டயலாக் மறந்து போச்சா? எனக்கென்னமோ ரஜினி வந்தா அவர் பெயரை நாசப்படுத்த தயார இருக்கிற கூமுட்ட‌ கூட்டமும், ரஜினி பெயர சொல்லி சம்பாதிக்க நினைக்கும் துரோகி கூட்டமும், ரஜினி வந்தால் என்ன நடக்கும் என்பதை அறியாமல் சும்மா கமெண்ட் அடிக்கிறவங்களும் தான் அவரை அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள்!!!!! அதாவது ரஜினி ரசிகர்கள் என்னவோ முப்பது வருசமா வெலை வெட்டியில்லாமல் அலைவது போலவும், இப்ப அவரால் தான் அவர்கள் நாசமானது போலவும் பெசுவது மிகப்பெரிய தவறு....... ரஜினி ஒரு Inspiration, Role Model, A good hearted person, A very good entertainer(worthy for your time and money), a good citizen of India. ரஜினியை வைத்து பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவி பத்திரிகைகளும், ரஜினியை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் ரசிகன் போர்வையில் இருக்கும் குள்ள நரிகளும் சொல்வதனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.... இரு முறை ( 1996, 02)தன் கருத்துகளை/ஆதரவை கூறினாரே தவிர‌ ரஜினி எப்பொதும் அரசியலுக்கு வருகிறென் என்று கூறியதில்லை.. என்னை பொறுத்தமட்டில் ரஜினி புதிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை, இது நாள் வரை செய்தது மிகப்பெரிய சேவை! ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கிறென் என்று மட்டும் தான் கூறினார்! வெறெதுமில்லை!! ‍ ரஜினி சார் தமிழ் நாடு முழுவதும் ஒரு 100 கிலோமீட்டருக்கும் ஒரு ஆம்பூலன்ஸ், ஒரு பயர் என்சின், ஒரு எமெர்ஜென்சி ஆஸ்பிட்டல், முதியோருக்கு ஒரு இல்லம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு இல்லம் இப்படி செய்யலாம் சார்! தமிழ் நாட்டைத்தவிர வெறெந்த மானிலத்திலும் இத்தனை சாதி இல்லை, இத்தனை சாதி கட்சி இல்லை, ரவுடித்தனம் இல்லை, இங்க இன்டர்னெட்ல வாந்தியெடுக்கிறவனெல்லாம் ஓட்டே பொடுவதில்லை!!!! வேண்டாம் சார்! நீங்கள் ஒரு மனிதாபமிக்க மனிதன், மரியாதைக்குரியவர்!! இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன்
Raj T,USA
Monday, 29th September 2008 at 11:11:24

'ரசிகர் வாழ்க்கை ரஜினி கையில் ‍ தண்டமுண்ட மலர்' என்பது ஒரு விதமான Excuse அது ஒரு 100% தவரான கருத்து...அது அருத்தல்ல , முட்டாள் தனமான குற்றச்சாட்டு?, ரஜினி முப்பது வருசமா தன் ரசிகர்களிடம் உன்னையும் உன் தொழிலையும், உன் குடும்பத்தையும் பார்! !! ரஜினியின் மற்ற டயலாக் எல்லாத்தையும் மேற்கோளிட்டு காட்டும் கபோதிகள் " உன் வாழ்க்கை உன் கையில்" என்ற டயலாக் மறந்து போச்சா? எனக்கென்னமோ ரஜினி வந்தா அவர் பெயர நாசப்படுத்த தயார இருக்கிற கூமுட்ட‌ கூட்டமும், ரஜினி பெயர சொல்லி சம்பாதிக்க நினைக்கும் துரோகி கூட்டமும், ரஜினி வந்தால் என்ன நடக்கும் என்பதை அறியாமல் சும்மா கமெண்ட் அடிக்கிறவங்களும் தான் அவரை அரசியலுக்கு வரும்படி அழைக்கிறார்கள்!!!!! அதாவது ரஜினி ரசிகர்கள் என்னவோ முப்பது வருசமா வெலை வெட்டியில்லாமல் அலைவது போலவும், இப்ப அவரால் தான் அவர்கள் நாசமானது போலவும் பெசுவது மிகப்பெரிய தவறு....... ரஜினி ஒரு Inspiration, Role Model, A good hearted person, A very good entertainer(worthy for your time and money), a good citizen of Indஇஅ. ரஜினியை வைத்து பிழைப்பு நடத்தும் ஈனப்பிறவி பத்திரிகைகளும், ரஜினியை வைத்து பிழைப்பு நடத்த நினைக்கும் ரசிகன் போர்வையில் இருக்கும் குள்ள நரிகளும் சொல்வதனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது.... இரு முறை ( 1996, 02) தவிர ரஜினி எப்பொதும் அரசியலுக்கு வருகிறென் என்று கூறியதில்லை.. என்னை பொறுத்தமட்டில் ரஜினி புதிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை, இது நாள் வரை செய்தது மிகப்பெரிய சேவை! ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கிறென் என்று மட்டும் தான் கூறினார்! வெறெதுமில்லை!! ‍ உண்மையான ரஜினி ரசிகன்
Prasanna,India/Chennai
Monday, 29th September 2008 at 07:34:19

Very good Article..........We are ready to accept whatever thalaivar says.........His judgement will never fails..........
p.kalirajan,tamilnadu/chennai
Monday, 29th September 2008 at 03:37:14

thalaiva nee kandipaka Arasialuku vara vendum,Nammai Ethirthavarkalluku pathilladi thara vendum,intha Naatuku unnudaiya sevai mikaum thevai viraivil oru nalla mudivai ethirparthu kathirukum kodikannakana rasikerkallil nanum oruvan
T.JAWAHAR,india, tirupur
Sunday, 28th September 2008 at 23:55:07

சரியான நடுனிலயான வாதம்.......
தலைவர் பேசும்வரை காடத்திருப்போம்.....
அன்புடன்
த‌.ஜவஹர். திருப்பூர்

chandrakanth,Bangalore
Sunday, 28th September 2008 at 23:30:47

thalivaaa please dont let us down...please start a political party.....
Uthayasankar H,India
Sunday, 28th September 2008 at 14:28:57

Thalaiva,pls dont come to politics,Politics is not only the way to do something to your valavaikkum theivangalana engalukku.there are lot of things to serve to tamils....
Nagai Thalapathi S. Shaha malim,India/Nagore
Sunday, 28th September 2008 at 14:18:51

எதுவாக இருக்கட்டும் முதலில் தலைவர் திருவாய் மலரட்டும் அது வரையில் பொறுமை அவசியம்...
vikram,chennai
Sunday, 28th September 2008 at 12:53:52

thalaivar must come to politics tis time.... thalaiva don care abt others v r there for u n GOD is there....
soundar,kanpur
Sunday, 28th September 2008 at 11:56:27

rajini sir.............plz dont come to politics......as a fan,i couldnt tolerate any wrong comments on you by other politicians....
no sir.......plzzzz..........

K.S.Ramgopal,Chennai
Sunday, 28th September 2008 at 10:31:51

Please do not come to politics.


SARAVANAN,chennai
Sunday, 28th September 2008 at 05:44:03

தலைவா அரசியலுக்கு வந்தா சாதரணமாவரமாட்டாய் நிரைறய ப்ளான் இருக்கும் யெப்பவும் சக்சஸ் தான் நமக்கு கவலை படாம வா தலைவா. கடவுள் இருக்கார் நல்லவங்க பக்கம்.
12Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information