ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் - மனோபாலா
(Wednesday, 24th September 2008)
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா.
ரஜினியை வைத்து ஊர்க்காவலன் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் மனோபாலா.
சொல்லியடிச்ச வெற்றி என்பார்களே... அப்படியொரு நெத்தியடி வெற்றிப் படம் ரஜினி – ராதிகா நடித்த சத்யா மூவீஸின் ஊர்க்காவலன். அதுமட்டுமல்ல... இந்தப் படத்தில் ரஜினியின் துள்ளும் இளமையும் அழகும் மனதை அள்ளியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
இந்தப் படத்தில் ரஜினியை இயக்குநராக இயக்கிய மனோபாலா இன்று அவரோடு படங்களில் சக நடிகராகப் பணியாற்றுகிறார்.
இதோ நமது அன்புத் தலைவர் பற்றி மனோபாலா தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:
“அது என்ன நீங்க மட்டும்தான் அவரை தலைவர்னு கூப்பிடுவீங்களா... எங்களுக்கும் அவர் தலைவர்தாங்க. நாங்கள்லாம் அவரை இப்பவும் தலைவர், சார்னு மரியாதையா கூப்பிட்டுத்தான் பழக்கம்.
ஆனால் நம்ம தலைவரோட ஊர்க்காவலன் படத்தை இயக்க ஒப்புக்கிட்டப்ப நான் கொஞ்சம் பயந்து போய் இருந்தேன். அவர் பெரிய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண படங்கள்தான் எடுத்திருந்தேன். இன்னொன்னு அவரோட கோவத்தைப் பத்தி நானும் கோள்விப்பட்டிருக்கேன்.
எல்லாருமே அவரை பயபக்தியாதான் பார்ப்பாங்க... சரி என்னதான் நடக்கும் பார்க்கலாமேன்னு செட்டுக்குப் போயிட்டேன். அப்ப ராதிகாதான், நம்ம ரஜினிதானே... வாங்க... அவர் மாதிரி ஜாலியானவரை நீங்க பார்க்கவே முடியாது என தைரியப்படுத்தினார்.
ராதிகா இதுக்கு முன்ன நிறையப் படங்களில் அவரோட நடிச்சவர்ன்ற முறையில் நம்ம தலைவரைப் பத்தியும், அவரோட நல்ல மனசையும் சொன்னார்.
படப்பிடிப்பு ஆரம்பமாச்சு... நானும் கொஞ்சம் பம்மறாப்பலதான் செட்டுக்குப் போய் வந்துகிட்டிருந்தேன். ஆனால் ரெண்டாவது நாளே நாங்க சகஜ நிலைக்கு வந்துட்டோம். அவரும், நான் இருக்கேனேன்னு உங்க இயல்புக்கு மாறா நடந்துக்காதீங்க... சும்மா ஜாலியா இருங்கப்பா... நானும் உங்களை மாதிரிதானேன்னு பேசிட்டு குழந்தை மாதிரி சிரிச்சார்.
அப்படி நாங்க இயல்பா மாரிய பிறகுதான் காட்சிகள் துள்ளலா வந்தன. இதையும் சஜார் சுட்டிக்காட்டத் தவறல...
அந்தப் படப்பிடிப்பு முடியறதுக்குள்ள ஏதோ காலேஜ்மேட்ஸ் மாதிரி சார் அவ்வளவு நெருக்கமாயிட்டார். அந்தப் படத்துக்குப் பிறகு நானும் நட்சத்திர இயக்குநர் ஆயிட்டேன்... சாதா நட்சத்திரமா.. சூப்பர் நட்சத்திரமாச்சே!
அதெல்லாம் ஒரு பொற்காலம் சார்..., என பெருமூச்சு விடுகிறார் மனோபாலா.
இஎன்றைய சூழல் குறித்தும், ரஜினி பற்றிய தனது பார்வை குறித்தும் மனோபாலா இப்படிச் சொல்கிறார்:
ரஜினி சார் அரசியல் பத்தியெல்லாம் நான் இப்போ ஒண்ணும் சொல்ல மாட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு மிக நல்ல மனிதர் ரஜினி சார். அவரை ஒரு நடிகர், அரசியல்வாதி, ஆன்மீகவாதின்னெல்லாம் சொல்லி அவருடைய எல்லையைச் சுருக்கிட மாட்டேன். அவர் ஒரு அற்புதமான மனிதர்.
பழசை எப்பவும் மறக்காத மாமனிதர். இன்னைக்கும் என்னைப் போன்றவர்கள் கேட்காமலேயே கூப்பிட்டு வாய்ப்புக் கொடுக்கும் உத்தம குணம் அவருக்கு உண்டு. நம்ம விகே ஆருக்கு அவர் செஞ்ச உதவி பற்றி அவரே என்கிட்ட சொல்லக் கேட்டு ரொம்ப நெகிழ்ந்துட்டேன்.
அவரால இன்னும் எவ்வளவோ நன்மை நமக்கெல்லாம் கிடைக்கப் போகுதுன்னு என் மனசுக்குப் படுது. நல்லவங்க மனசு வச்சா... எல்லாமே நல்லாதான் நடக்கும். இதுகூட அவர் சொல்றதுதான்!, என்றார்.
-சங்கநாதன்
Please note that your comment WILL NOT be published if:
It is not related to the above article.
It has marketing/promotion content.
It has personal attacks/verbal abuse/indecent words.
It has content that may hurt the feelings of anyone.
Thank you in advance for being decent when you express your comments.
Remember me?:
* Name:
* Email:
(Will not be published)
Country/City:
Word verification:
* Comment:
Language:English Tamil
Use F12 to toggle English & Tamil. Tamil typing powered by Thagadoor
Show Keymap Online Keymap Help
Fields marked with * are compulsary. Your Email id is just for our reference. It will not be displayed here or shared with anyone.
7 Comment(s)
Views: 2371
Sherifudeen,KSA / AlLith Thursday, 25th September 2008 at 02:29:39
What ever Manobala saying is exactly correct, really superstar is a good human first, then only everything
annamalai,tuticorin Thursday, 25th September 2008 at 01:00:53
Thank you manobala sir. Suberb Comments from Superstar with your voice. this is very good
V S VENGATESH,CHENNAI Wednesday, 24th September 2008 at 13:37:12
no comment sir, because Everybody know him
SUPER STAR is a great man.
V S VENGATESH,CHENNAI Wednesday, 24th September 2008 at 13:35:51
no comment sir, because every body know him. SUPER STAR is a great man
Dinesh.M,Dubai Wednesday, 24th September 2008 at 11:44:07
Dear Friends ,
Hope we all feel great and amaze to read such facts about our BOSS. Please let us learn lesson and moral from him and follow his way of simple
Vigneshkumar,NJ Wednesday, 24th September 2008 at 09:02:51
Good one ....
V. Abraham,Qatar Wednesday, 24th September 2008 at 07:42:09
Dear Fans,
Do you want to be a very Good human being,do you want to be a very good husband for your wife, do you want to be a very good father for your kids. Just follow Rajini sir