Related Articles
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting
Rajini is the epitome of stardom in the World!
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?
இவரல்லவா உண்மையான கலைஞர்!
An interesting review on Rajini & Chiru
உண்மையான ரசிகன் என்ற பெயரில் சில பலர் ...
Mappillai managed 865 houseful shows in Chennai city
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ஏதோ ஒரு இறை உத்தரவுக்காக அவர் காத்திருப்பது..
(Tuesday, 7th October 2008)

 

கிட்டத்தட்ட 12 வருடங்கள் காத்திருந்தோம்... இதோ தலைவர் தனது பொது வாழ்வின் அடுத்த கட்டம் குறித்து அறிவிக்கவிருக்கும் தருவாயில் ரசிகர்கள் எனும் பெயரில் சிலர் எல்லை மீறி இருக்கிறார்கள், தனிக் கட்சி எனும் பெயரில்.

இது நிச்சயம் தலைவருக்கு உவப்பான காரியமன்று.

காரணம் இங்கே நமது ரசிக நண்பர்கள் இரு வகைப்பட்டவர்களாகத் தெரிகிறார்கள். ஒருசாரார், ‘இப்ப... இப்ப... இப்பவே முடிவு தெரியணும்’ எனும் இப்ப ராமசாமி ரகம்; இன்னொரு பிரிவினரோ ‘அவருக்கு அரசியல் வேண்டாம். என்றும் நம் அன்புக்குரிய கலைஞராக சினிமாவில் இருந்து விடட்டும், நாம் நமக்குப் பிடித்த அரசியல்வாதியின் பின்னால் பாதுகாப்பாக நின்று கொள்வோம்’ எனும் ரகம்.

நான் முந்தைய பதிவில் சொன்னது போல, இந்த இரு சாராருமே தலைவரைப் புரிந்து கெள்ள வேண்டிய தருணம் இது.

ஒவ்வொருவரும் தங்களால் செய்ய இயலாத பல அரிய சாதனைகளை, நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசைகளை தலைவரை மனதில் நினைத்ததுமே செய்து முடித்துவிட்டதாய் உணர்கிறார்கள். கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிடலாம், என்ற சிந்தனை வந்தவுடனே எதையோ சாதித்து விட்டதைப் போன்ற உணர்வு வருகிறதே அப்படி!

தலைவரின் பொது வாழ்க்கைப் பிரவேசத்துக்குக் கட்டியம் கூறி பலர் போஸ்டர் அடிக்கிறார்கள், கிடா வெட்டுகிறார்கள். அது அவர்களது உணர்வு. ஒரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடு. அதைக் குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆனால் சாமிக்கு அலங்காரம் முடியும் முன்னரே, தேரில் வைத்து ஊர்வலமாய் இழுத்துச் செல்வது அந்தக் கடவுளுக்கும் உகப்பாக இருக்காது, பக்தர்களுக்கும் சிறப்புச் சேர்க்காது.

நமக்கென்று சக்திமிக்க தலைவர் இருக்கிறார். ஏதோ ஒரு இறை சக்தியின் உத்தரவுக்காக அவர் காத்திருப்பது போலத் தெரிகிறது. எனவே நாமும் அதுவரை காத்திருப்போம்.

எனவே இப்போது கட்சி, கொடி என ஒரு முனையில் நின்று கொண்டிருக்கும் ரசிகர்கள் இதிலேயே தங்கள் சக்தியை வீணடித்து விடாமல், தலைவரின் முறையான வருகையின் போது அதைப் பயன்படுத்த அமைதி காக்க வேண்டும்.

மற்றபடி தலைவரின் தீவிர ரசிகர்கள் என்ற முறையில், சக ரசிகனின் நெருப்பு உணர்வுகள் நமக்கும் புரிகின்றன. ஆனால் இதில் வெளி சக்திகள் நுழைந்து குளிர்காய இடம் கொடுத்துவிடக் கூடாது.

நமது விவாதங்கள், செயல்பாடுகள் எந்த எல்லைக்குச் சென்றாலும் அதன் இறுதிப் புள்ளி வரை ரஜினி என்ற சக்தி மிக்க மனிதரின் பார்வை நம்மைத் தொடரும் என்ற நினைப்பை மட்டும் மறந்துவிட வேண்டாம்.

இன்னொன்று, இனி கோவை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றங்கள் கிடையாது. இவர்கள் துவங்கியுள்ள கட்சிதான் அந்த இடத்திலிருந்து செயல்படும் என அறிவித்திருப்பதும் முறையற்றது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த்தும் தனது அடித்தளமாகத் திகழும் ரசிகர் மன்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். கட்சிப் பொறுப்புக்கு இணையாக எம்ஜிஆர் மன்றங்களின் பொறுப்புகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது.

இன்றும் கூட எம்ஜிஆர் மன்றங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளன என்பதை மனதில் கொள்ளுதல் நலம்.

எப்படியிருந்தாலும், இந்தப் பரபரப்புகள் இன்னும் சில தினங்களுக்குள் முற்றுப்பெற்றுவிடும் அறிகுறி தெரிகிறது.

அரசியலோ, பொதுநல அமைப்போ... நம்மைப் பொறுத்தவரை, தலைவர் ரஜினி எடுக்கும் எந்த முடிவும் சிறப்பானதுதான், மனதுக்கும் உவப்பானதுதான்.

நமது பொறுமையால் அவரது பெருமைக்குரிய வருகையைத் துரிதப்படுத்தும் முயற்சிகள் மட்டுமே இப்போது முக்கியம்!

-சங்கநாதன்

 


 
20 Comment(s)Views: 5693

teena,india = bangolore
Friday, 10th October 2008 at 03:20:45

god pray for you

hai sir
haw war you i link very much

Rajini Rajesh, Rajini Ravi, Rajini Sive, Kaveripuram Rajinis rasigar mandram, Salem(Dt),india
Friday, 10th October 2008 at 03:19:52

ரஜினி அரசியலுக்கு வருவ்து நாட்டுக்கு மிகவும் அவசியம். சில அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் கொட்டம் அடஙகும்.
rajni bala,Dubai/159
Friday, 10th October 2008 at 00:32:08

this is rajni bala from dubai
sanganathan i agree ur point atleast thalaivar must tell boldly that he is going to enter in poltics now or not Bcos u know about our fanz they are waiting since from 1995.Even i can able accept ur point as a rajni devotee but dont no expect other fans ,Even they ve not literate fellows they ve confidents and more

Raja Pandian,India/Chennai
Thursday, 9th October 2008 at 10:58:10

Humble request to all fans, Please do hold your words and activities. Seems like some fans are going mad. If our thalaivar would have given you some words then ok. Else for sure he will be angry and disappointed due to the few fans behaviour. Some external entities spoil our thalaivar name bcos of these activities. Already we have spoiled his name so many times. Funny thing is, we spoil his name
karthik,Mamsapuram
Wednesday, 8th October 2008 at 16:53:37

ரஜினிக்கு எதிராக செயல்படும் அறிவுஜீவிகளைப் பற்றிய என்னுடைய பதிவு.

தயாரிப்பார்களுக்காக தன்மானம் மட்டுமல்ல தன்னையும் கொடுப்பவர் ரஜினி.உண்ணாவிரதம் இருந்த அடுத்த நாள் திட்டத்தை ஒத்திவைப்பதாக கருணாநிதி கூறியது சத்யராஜ்-க்கு அவமானமாக தெரியவில்லையா??பெரியார் படத்துக்கு அவார்டு - மோதிரம் வாங்க வேண்டும் என்பதால், அன்று கருணாநிதியை பற்றி ஏதும் கூறாமல் இருந்திருப்பார்.ராக்லைன் வெங்கடேஷ் என்ற கன்னட தயாரிப்பாளரிடம் தம் படத்துக்காக சிம்பு(எ)வம்பு ஹீரோsorryஜீரோ வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தாரா?? இல்லை, சிட்டி ரிலீஸ் சிம்பு சினி ஆர்ட்ஸ்(பருங்க ஏதவது தமிழ் வார்த்தை இருக்கான்னு)என்ற பெயரில் சம்பாதித்த பணத்தை திருப்பி கொடுத்தாரா??இந்த விஜய.T.ராஜேந்தர்..
பா.ம.க என்ற அரசியல் விபச்சாரி பற்றி எதுவும் கூற தேவையில்லை சிவாஜி கனேசனின் அன்னை இல்லத்தை விற்கும் நிலைக்கு அவரது குடும்பம் வந்த போது அதை சந்திரமுகி படம் மூலம் தடுத்து அவர்களை வாழ வைத்தவர் இந்த ரஜினிகாந்த்.தம்பி பாலசுப்ரமனியத்துடன் ஏற்பட்ட பாகபிரிவினையில் மனம் நொந்து இருந்த ஏ.வி.எம் சரவணனையும், பாரம்பரியமிக்க ஏ.வி.எம் என்ற தமிழ் சினிமா பல்கலைகழகத்தையும் காத்தவர் இந்த ரஜினிகாந்த். அதே படத்தில் தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமாயிருந்த எஸ்.பி.முத்துராமனை இணை தயாரிப்பாளாராக்கி அழகு பார்த்தவர் இந்த ரஜினிகாந்த்.ரஜினிகாந்த் நடித்து கொடுத்தால்தான் தன்னுடைய கடன் தொல்லை தீரும் என்று இயக்குனர் கே.பாலசந்தர் குமுதம் பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார், இவருக்கு ஏன் கடன் ஏற்பட்டது? சுயநலமில்லா சரத்குமாரை வைத்து ஐயா படம் ஏடுத்ததால்!!நடிகர்சங்க தலைவரான நீ பட சிக்கலை தீர்த்து வைக்க குரல் கொடுத்தாயா??உன் கட்சியை வளர்க்க ரஜினியை வம்புக்கு இழுக்காதே...நாடார் இல்ல தெருவுல போற நாயி கூட உனக்கு ஒட்டு போடாது...இந்த சரத்குமாரை வைத்து ரிஷி என்ற படம் எடுத்து திரு.பஞ்சு அருணாசலம் பட்ட பாட்டை அவரே 5 ஆண்டுகளுக்கு முன்பு குமுதம் பேட்டியில் கூறியுள்ளார். ரஜினியை வளர்த்ததும் பஞ்சு அருணாசலம்!! பஞ்சு அருணாசலத்தை வளர்த்ததும் இந்த ரஜினிகாந்த்.விஜயகாந்தை வளர்த்த ராவுத்தர் எங்கே?? ஆர்.சுந்தர்ராஜன் எங்கே?? இவர்களுக்கு இவர் என்ன செய்தார்??சத்யராஜை வளர்த்த மணிவண்ணன் எங்கே??ஆர்.சுந்தர்ராஜன் எங்கே?? இவர்களுக்கு இவர் என்ன செய்தார்?? மகனுக்காக அல்லவா லீ படம் எடுத்தார்?
தமிழ் திரையுலகத்துக்கு உண்மையாக உழைத்த உழைப்பாளி யார்??
சூப்பர் ஸ்டார் ரஜினி!govind,abu dhabi
Wednesday, 8th October 2008 at 11:10:40

வருவார் கண்டிப்பாக தன்னை வாழவைத்த மக்களுக்கு செய்வார்,
Senthilnathan,chennai
Wednesday, 8th October 2008 at 10:48:12

I think you all fans should wait for some more time. I am also a hard core fan but should not disturb thalaivar in this political matter. Let him concentrate on Enthiran the Robot and we want to see that film as a mega hit beating Sivaji-the boss records. So please do not disturb thalaivar. After Robot , I wish him to enter politics.
Nagai Thalapathi.S.Shaha Malim,India/Naore
Wednesday, 8th October 2008 at 09:42:30

காத்திருப்பது என்று முடிவு செய்த பின்பு காத்திருக்கதான் வேண்டும்...... நம் உயிர் இருக்கும் வரை.
mettu street k.muthu,chennai
Wednesday, 8th October 2008 at 05:08:43

yes, true superstar fans not expect anything from our thalaivar like money, mla, mc power, anything, they just want our thalaivar should come to politics and develope normal people and purify our dirty politics, we hope our thalaivar as the capability to do that, that's what true fans expect !
vinodh,
Wednesday, 8th October 2008 at 05:05:49

see guys rajini and politics are like the rail tracks they go side by side but do not mingle. if it does it is only for a short time, during elections rajini gives voice to someone whom he thinks will do good and then the track continues as usual and rajini stays away. well i think this is wat is good for rajini, politics is not for people with good heart, the existing politicians will not let anyone do any good for the country.
kumaran,pondicherry
Wednesday, 8th October 2008 at 05:02:09

after enthiran he may enter politics
velmurugan,india
Wednesday, 8th October 2008 at 04:36:47

all rajini fans must understand the situation.
If they made something like this, it will affect our thalaivar only. Many peoples are waiting for a situation like this. If we do like this, they will do some bad thing finally, which will make impression to public that our thalaivar and thalaivar fans are not good and doing bad. WE SHOULD NOT GIVE A WAY FOR THESE KIND OF THINGS

JAI HIND

m.mariappan,india/tuticorin
Wednesday, 8th October 2008 at 03:24:02

Dear sanganathan

All real rajini not expecting any post and money anything from thalaivar. He should come to politics.

Every real fans like our thalaivar will get all name and get all seat and he do good help to poor people.

I give the promise to rajini sir I never like any seat from your political way. I like to say
I am always one of the fan of you.

By thalaivar chappal.

Shravan,
Wednesday, 8th October 2008 at 03:05:45

அட போங்கப்பா.. போரடிக்கிது..
Ramesh,India
Wednesday, 8th October 2008 at 01:18:03

1972ல் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்தபோது கட்சியில் பதவிக்கு வந்தது அவரது ரசிகர் மன்ற ஆட்கள் அல்ல. அவரோடு திமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மட்டுமே. எம்ஜிஆர் மன்றத்தின்ர் இன்னும் எம்ஜிஆரின் புகழை பாடுபவர்கள் :-) அதனால்தான் லெட்டர்பேடில் இருந்தாலும் இன்னும் உயிரோடு இருக்கிறது.

1977ல் ஆட்சியை பிடித்தபோதும் அமைச்சர்களானவர்கள் அவரது மன்ற பிரதிநிதிகளோ அல்லது ரசிகர் மன்ற வட்டாரங்கள் அல்ல. முசிறிப்பித்தனும் சேலம் கண்ணனும் 1984 வரை கட்சிப்பணிகளில் மட்டுமே இருந்தார்கள். ஓவராக ஆடியபோது ராமாவரம் தோட்டத்துககு அழைக்கப்பட்டு ஆப்பு வைக்கப்ட்டார்கள்.

எம்ஜிஆர் நினைத்திருந்தால் நிறைய ரசிகர்கள் அமைச்சர்களாகியிருப்பார்கள். குறைந்தபட்சம் ஆர்எம்வீயுட்ன் நெருககமாக இருந்த ரசிர்களாவது அமைச்சர்களாகியிருப்பார்கள். ரசிகர்கள் எல்லோரும் பதவிக்கு வந்துவிட்டால் கட்சிப்பணிகளை யார் கவனிப்பது? கட்சிப்பணி என்றால் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது அல்ல. அதை எம்ஜிஆர் பார்த்துக்கொள்வார். மக்களின் கஷ்டங்களை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர் மட்டுமே. அவருக்கும் மக்களுக்கும் நடுவே யாரும் தேவையில்லை. கட்சிப்பணி என்றால் எம்ஜிஆரை புகழ்ந்து மானே, தேனே என்று புகழ ஆட்கள் தேவை.


1982ல் என்டிஆர் ஆட்சிக்கு வந்த்போது கூட அவரது ரசிகர்மன்றங்கள் என்று யாரும் கிடையாது. அவருக்கு நெருக்கமான சினிமாவுலகினர், அவரது ஜாதிக்காரர்கள்தான் கட்சியில் முக்கியப்பதவியில் இருந்தார்கள்.

தீவிர ரசிகர்கள் கட்சியை வளர்க்கவும், தலைவரின் புகழ் பாடுவது போன்ற செயல்களை மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அவர்கள் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் அரசியலுக்கு வரவழைத்து பதவி கொடுத்து அமைச்சராக்கி வேலை செய்யச் சொன்னால் ஒன்று சொதப்புவர்ர்கள் அல்லது அந்தப் பதவியில் உட்கார்ந்து கோஷ்டி கானம் பாடுவார்கள்.

ஆக, "ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி" டைட்டில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் தொடர்கதையாக மாறி துரத்தும்.

nazeer ahamed,dubai.uae
Wednesday, 8th October 2008 at 00:47:54

All fans first listen , the introduce of our political flag is good i like this political name and flag but our thalaivar will accepted or rejected we dont know anyway i expect thalaivar will enter politics 100% because he obey fans and he like fans , all time he told " Ennai vala vaitha thaivangalana rasigarkale " so he like god so we are gods .
Anandharamakrishnan, India,Tamil Nadu
Wednesday, 8th October 2008 at 00:20:52

All fingers are not same. But they act all together when it becomes a hand. Fans also like that, all are not same characters but when they act as rajini's fan they should maintain unity and discipline. We should stand a different from other actors' fans.
R.Gopi,UAE / Dubai
Tuesday, 7th October 2008 at 22:28:53

Edited successfully

இன்னொரு பிரிவினரோ அறிவுஜீவிகள் எனும் பெயரில் இவர்களைக் குறை கூறியபடி, ‘ரஜினிக்கு அரசியல் வேண்டாம். என்றும் நம் அன்புக்குரிய கலைஞராக சினிமாவில் இருந்து விடட்டும், நாம் நமக்குப் பிடித்த அரசியல்வாதியின் பின்னால் பாதுகாப்பாக நின்று கொள்வோம்’ என வாதிடும் ரகம்.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

இதுல அறிவுஜீவி தனம் எங்கே வந்தது ??????


vishali,Vietnam
Tuesday, 7th October 2008 at 20:33:24

அன்பு சகோதரர்களே,
நாம் நம் நண்பர்களின் உணர்வுகளுக்கு அமைதி எனும் ஒன்றை மட்டுமே முடிவாக தர இயலாது. அதே நேரம் ரஜினி எனும் புயலுக்கு முன்னே அமைதி என்று கூறலாம்.
த‌ங்க‌ள் ச‌கோத‌ரி

Nagabadri,India
Tuesday, 7th October 2008 at 18:59:02

well said

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information