|
 |
Article |
 |
 |
உங்களோடு சில நிமிடம் - 2 |
(Wednesday, 8th October 2008) |
 முந்தைய பகுதி
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால், அதிகம் படிப்பறிவு இல்லாத விவசாயிகள் ஒன்று சேர்ந்து செய்த சாதனை அது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே வாழை சாகுபடி செய்த நேரம், மாட்டு வண்டிகளில் தூத்துக்குடி சந்தைக்கு கொண்டு செல்வர்.
காய்கறி சந்தை ஒரு தனி நபருக்கு சொந்தமாக இருந்தது. வாழைக்காய், இலை தவிர பூக்கள், காய்கறிகளும் அங்கு வருவதுண்டு. வாழைத்தார், வாழை இலை மட்டும் தான் மாட்டு வண்டியில் வரும். அவை இளைப்பாற கொஞ்சம் அதிக இடம் வேண்டும். சந்தை உரிமையாளருக்கு இடைஞ்சலாக தெரிந்தது. வண்டிக்காரர்களை வசவு செய்வார். காரணம் வாழை சாகுபடிதானே என்று குறைத்து மதிப்பீட்டதுதான்.
வாழை விவசாயிகளும் பொறுத்து பார்த்தார்கள். மாற்றம் தெரியவில்லை. ஒரு நாள் சிறு வாக்குவாதத்தில் விளைவாக எந்த மாட்டு வண்டியையும் சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அழுகும் பொருளாயிற்றே, அங்கங்கே சாலையிலையே விற்று விட்டு ஒன்று திரண்டிருக்கிறார்கள். சுமார் 10 பேர் முதலில் கூடினார்கள். நாமே ஏன் ஒரு சந்தையை உருவாக்க கூடாது?
எப்படிபட்ட அமைப்பு தொடங்குவது என்பதுதான் சிக்கல். கூட்டுறவு முறையா அல்லது பங்குதாரர்கள் போன்ற அமைப்பா என்றெல்லாம் ஆலோசித்து விட்டு, தனியார் கம்பெனியாக (Private Limited Company) ஆக செயல்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
சிறியதும், பெரியதுமாக சுமார் 250 விவசாயிகளை கொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகப் பெரிய காய்கறி மொத்த மற்றும் சில்லரை மார்க்கெட் அதுதான்.
இது ஒரு சாதாரணமான வெற்றி அல்ல. சுயமரியாதையை மீட்டு, கூட்டாக முயற்சி செய்த விவசாய முன்னோடிகளின் வெற்றி. வருங்கால சந்ததியினரை கவனத்தில் கொண்டு எடுத்த முயற்சியின் வெற்றி. நமது மாற்று சிந்தனைக்குள் செல்லும் முன், இந்த வெற்றிப்பயணம் ஒரு உந்து சக்தியாக இருக்கட்டும் என்று தான் இந்த முன்னுரை.
எங்கிருந்து வந்தோமோ அந்த ஊருக்கு நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். எந்த பூமியில் இருந்து வந்த வருமானத்தில் நாம் படித்து, வாழ்க்கையில் உயர்ந்தோமோ, அந்த பூமித்தாயை நம் காலத்தில் மட்டும் அல்ல, நம் சந்ததியினரும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிமொழியுடன் நமது சிந்தனையை தொடங்குவோம்.
நில உரிமையாளார் வேறிடத்தில் இருந்தால் என்னென்ன சிரமங்கள்.?
# குத்தகைக்கு கொடுத்து பணம் வசுலிப்பது.
# நில வரி செலுத்துதல்
# அடுத்த தலைமுறை தொடர்ந்து இதை கடை பிடிப்பது.
மேற்கூறிய மூன்றும் எளிதாக கடைப்பிடிக்க முடிந்தால், விளை நிலங்களையும், வீடு வாடகைக்கு கொடுப்பது போல் செய்து விட முடியும். ஓரளவு, சொந்த ஊருடன் தொடர்பில் உள்ளவர்கள், கொஞ்சம் முயற்சி செய்தால், இதை செய்யமுடியும்.
இரண்டு வருடம் அல்லது, ஒரு மகசூலுக்கு (வாழை போடுவதற்கு 2 அல்லது 3 வருடம் குத்தகைக்கு கொடுப்பார்கள்) ஒரு முறை குத்தகைதாரரை மாற்றி கொள்ள வேண்டும். நில உரிமை சட்டம் மூலம் உரிமை கோர முடியாது. விளை நிலத்தையும் ஒரு வீடு போன்ற சொத்தாக கருதினால், மற்ற சிரமங்கள் தெரியாது.
வருடத்திற்கு ஒரு முறையாவது ஊருக்கு சென்று குத்தகை பணத்தை நேரில் வாங்கி, உள்ளூர் அலுவலகத்திலேயே வரியும் செலுத்த வேண்டும். ஒரு தலைமுறையை பார்த்து அடுத்த தலைமுறை அதை தொடர்வார்கள். அவர்களையும் இதில் ஈடுபடுத்த வேண்டும். வீட்டு வாடகை வாங்க பிள்ளைகளை அனுப்புவோம் அல்லவா?
பிழைப்பு தேடி வெளிநாடுகளுக்கு வந்தாலும் நாம் ஏன் நமது வேர்களை மறக்க வேண்டும்? நமது குடும்பத்து தொழில்களை ஏன் தொடரக்கூடாது? அப்படி தொடருவதால் பெரிதாக என்ன இழப்பு வந்துவிடப்போகிறது? நிச்சம் இழப்பு எதுவும் இல்லை. நாம் முன்னோர்கள் செய்தவற்றை நாம் மறப்பதால் வரும் இழப்புதான் பேரிழப்புக இருக்கும்.
ஊருக்கு அருகேயே உள்ளவர்கள், சொந்தமாகவே விவசாயமும் தொடர்ந்து செய்யலாம். நேரடியாக அல்லது 50 :50 குத்தகை முறையில் உள்ளுர் விவசாயிடம் இணைந்து செய்யலாம்.. நாம் வேலையில் சாதிக்க முடியும் போது, நமது குடும்பம் சார்ந்த விவசாயத்தையும் சேர்த்து கவனிக்க முடியாதா?. மனது வைத்தால் கண்டிப்பாக முடியும்.
தொடரும்...
|
|
|
 |
 |
 |
 |
|