நியாயமாக இந்நேரம் தமிழகம்... குறிப்பாக சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்திருக்க வேண்டும். ஆனால் பருவமழை தாமதமாகிக் கொண்டே போகிறது, நமது தலைவரின் ‘வருகையைப்’ போல.
ஆனால் நிச்சயம் வரு(வார்)ம் என்ற நம்பிக்கை மக்களுக்கு நிறைய இருக்கிறது. அவர்களை விட அதிகமான நம்பிக்கை நமது ரசிகர்களுக்கு!
அதனால்தான் 11-ம் தேதி கோவாவில் எந்திரன் ஷூட்டிங் முடிவதாக பத்திரிகைகளில் தகவல் வந்தவுடன் சென்னையை நோக்கிப் புறப்பட்டு விட்டனர்.
தமிழகத்தின் அனைத்து மாவடங்களையும் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்கள் இப்போது சென்னைக்கு வந்துவிட்டதாக உளவுத்துறைக்கு தகவல் வந்துவிட்டது. அவர்களும் ராகவேந்திரா மண்டபம் மற்றும் போயஸ் கார்டன் பகுதிகளில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
இத்தகவலை சென்னை மாநகர காவல் துறையில் உள்ள ஒரு உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
நாம் தளபதி சத்தியநாராயணாவைத் தொடர்பு கொண்டோம்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது? சென்னையை நோக்கி எந்த அடிப்படையில் ரசிகர்கள் வருகிறார்கள் என அவரிடம் இரண்டே கேள்விகளை முன் வைத்தோம்.
அவரது பதில்:
ரசிகர்கள் சென்னையில் திரண்டுவிட்டதாக பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
என்னைத் தொடர்பு கொண்டவர்களிடம் நான் தெளிவாகக் கூறிவிட்டேன், தலைவர் வந்தவுடன் தொடர்பு கொள்வதாக. மற்றபடி சென்னைக்கு வரும் ரசிகர்களையோ, நிர்வாகிகளையோ தடுக்க வேண்டிய அவசியமில்லை.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று உண்மையில் எனக்கும் தெரியாது. தலைவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்தான் இதற்கான பதில். ஆனால் அதை நாங்கள் யாரும் சொல்ல முடியாது.
ஆனால், தன் ரசிகர்களைச் சந்திக்கப் போகிறார் தலைவர் என்பதில் எந்த மாறுதலும் இல்லை. அவர் ஏற்கெனவே நம்ம ஆளுங்களைப் பார்க்க ஆர்வமாகத்தானே இருந்தார். தவிர்க்க முடியாத சூழல்... அதனால்தான் முதல் வாரத்தில் சந்திக்க முடியவில்லை.
ஆனால் இன்னும் சில தினங்களில் உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். அதுவரை யூக அடிப்படையில் எதையும் எழுதாதீர்கள். மீடியா நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காத்தால் நன்றாக இருக்கும். தேவையற்ற பரபரப்புகளையும் பெரிதுபடுத்த வேண்டாம். தலைவர் பார்க்காத பரபரப்பா...!
சந்திப்பு நடக்கும் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதா?
இன்னும் ஓரிரு நாளில் சொல்லிவிடுவேன். தலைவர் வரட்டும்..., என்றார் சத்தி.
RAJNI-RAFI,kuwait ..salmiya Monday, 13th October 2008 at 07:35:18
thalaivar yosikkama pesamaataar ....pesina pin yosikaa maatar...we will wait ...till that time let him finish robo shooting... please dont disturb him.........vaaaaaaaaaaaaaaaalllllllllllgaaaaaaa thalaivaaaaaaa
sunil,India, Bengaluru Monday, 13th October 2008 at 02:21:51
Every body tells that boss as to come to that this. But OUR GOD WON'T COME TO ANY THING THIS WORD IS 100per
GOD BLESS ALL BOSS FANS (including me)
Sigma PTS,Perundurai/India Monday, 13th October 2008 at 00:47:55
i am Rajini fan from 1976 ( my childhood) and waiting for his entry in politics.i shoud say he will definitely come into politics if he is really like fans of Tamil Nadu
Govindaraj,Chennai Monday, 13th October 2008 at 00:19:58
There is few things in the World,which cannot stop whatever we try to stop.Among few things "Rajni's Victory" also will join,who all trying to stop his victory they only will disppear...... Rajni is always great man,No one can touch is victory height.... Hats off...
Govindaraj,Chennai Monday, 13th October 2008 at 00:19:58
Hi Star Great future is waiting
chandrakanth,Bangalore Sunday, 12th October 2008 at 23:29:43
lets all gather in chennai.....thalivar shld come to politics