Other Articles
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!
(Thursday, 23rd October 2008)

காத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு... போன்ற தலைவர்கள் களத்தில் நேரடியாக இறங்கி போராடி நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு பகிரங்கமாக ஆதரித்து களத்தில் இறங்காவிட்டாலும், மானசீகமாக ஆதரவளித்தவர்கள் ஏராளம்.
இவர்களிடமிருந்து மாறுபட்ட வேறுவழிகளில் தங்கள் சுதந்திர உணர்வைக் காட்டிய தலைவர்களும் உண்டு.
அதனால் அவர்கள் தேச விரோதிகாளாகச் சித்தரிக்கப்பட்டார்களா... அல்லது கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும் இல்லையென்று ஆகிவிட்டதா...

-இந்தக் கேள்வியை வாசகர் ஒருவர் கமெண்டாக எழுதியிருந்தார் ஒரு இணையதளத்தில், ராமேஸ்வரம் போராட்டத்தில் பங்கேற்காத நடிகர்கள் குறித்த (குறிப்பாக ரஜினி, கமல்) பாரதிராஜாவின் பேட்டிக்கு.

இந்தக் கருத்தில் உள்ள உண்மைகளை ஏதோ நமது வசதிக்காக மட்டும் நியாயப்படுத்தாமல், எல்லாருக்கும் பொதுவாக வைத்து அலசிப் பாருங்கள்.

ராமேஸ்வரம் போராட்டத்தில் ரஜினியும் கமலும் இதர நடிகர்களும் பங்கேற்கவில்லை. இதனால் அவர்கள் தமிழ் உணர்வு அற்றவர்கள் என்று முடிவு செய்துவிட முடியுமா... எந்த ஒரு பிரச்சினை குறித்தும் இன்னார் இப்படித்தான் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. ராமேஸ்வரத்துக்குப் போய் போராட்டம் நடத்துவதில் தெரியும் உணர்வு, சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் மட்டும் இலலாமல் போய்விடுமா...

இலங்கைத் தமிழர் பாதிக்கப்படுவதற்கான கண்டனங்களைப் பதிவு செய்யும் கலைஞர்களுக்கு ஆதரவாக ரஜினி ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே என பாரதிராஜா கோபப்பட்டிருந்தார்.
பாரதிராஜாவின் கோபத்திலுள்ள நியாயத்துக்கு இணையான நியாயம் ரஜினியின் அமைதியிலும் இருக்கலாமல்லவா...

இதை பாரதிராஜா உணர்வுப்பூர்வமாக பார்க்கிறார். ஆனால் ரஜினி போன்றவர்கள் அப்படி உணர்ச்சிவசப்பட்டு சர்வதேச பிரச்சினைகளில் ஒரு நிலைப்பாட்டினை எடுத்துவிட முடியாது.

ராமேஸ்வரம் பிரச்சினையில் பங்கு கொண்ட கலைஞர்கள் தமிழர்களுக்கு ஆதரவு எனும் பெயரில் எல்லை மீறிப் பேசினார்கள். அந்த மாதிரி கொந்தளிப்பான ஒரு கூட்டத்தில் யாரும் யாரையும் அடக்கிக் கொண்டிருக்க முடியாது. அப்படியொரு சூழலில் யார் யாரோ முறை தவறிப் பேசுபவற்றுக்கு ரஜினி போன்றவர்கள் அல்லவா விளக்கம் சொல்ல வேண்டிவரும்!

இன்னொன்று, இலங்கைப் பிரச்சினைதான் என்றில்லை... திரையுலகினர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் ரஜினி எப்போதும் நடுநிலையாகவே நடந்து கொண்டுள்ளார். கடைசியாக நடந்த ஒகேனக்கல் உண்ணாவிரதப் பேராட்டத்தின் போது கூட உதைக்க வேண்டாமா? என்று அவர் கூறியது நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பயன்படுத்திய ஒரு வார்த்தைதான்.

ஆனால் அதற்கே அவரைக் கூண்டிலேற்றிவிட்டார்கள். ஆனால் ‘கன்னடக்காரன் மனைவியரையும்’ இதில் இழுத்து ஆபாசமாகப் பேசிய நபர்களுக்கு தமிழுணர்வாளர் என்று பட்டமளித்து கவுரவித்துவிட்டனர் நம்மவர்கள்.

ரஜினி போன்றவர்களை வரவிடாமல் தடுப்பது இபடிப்பட்ட செயல்கள்தான். மற்றபடி அவருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் அக்கறையுண்டு. தனது எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர் அதை பகிரங்கமாகச் சொல்லத் தயங்கியதில்லை.

‘தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நிலை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கர்நாடகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இலங்கையில் துன்பப்படுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி.. இன்னும் உலகில் எஙஅகெல்லாம் தமிழர்கள் பரவியிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நடைபெறும் எந்த செயல்களும் கண்டிக்கத்தக்கவையே...”, இது முன்பு ஒருமுறை ரஜினி அளித்த பத்திரிகைப் பேட்டி.

கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் எப்பவும் திரும்ப வாங்க மாட்டேன் (இது அவரோட சினிமா வசனம் இல்லை... 1996 தேர்தலின் போது அவர் பிரயோகித்த சொந்த வசனம்தான்...) என்பது ரஜினியின் கொள்கை. இலங்கைத் தமிழர் விஷயத்தில் தனது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக எப்போதோ காட்டிவிட்டார் ரஜினி.

இப்போதும் அவசியமேற்பட்டால் இலங்கைத் தமிழர் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தத் தயாராகவே உள்ளார். அதனால்தான் தன்னை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொண்ட நடிகர் சங்கம் மீண்டும் அழைத்தபோதும் மறுக்காமல் உண்ணாவிரதத்துக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினி.

எனவே தேவையில்லாமல் அவரையும் அவரைச் சார்நத சமூகத்தையும் சீண்டிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அடுத்த கட்டப் பணிகளைப் பாருங்கள்.

-சங்கநாதன்
http//www.rajnifans.com


 
20 Comment(s)Views: 6702

jurong j,jurong singapore
Tuesday, 28th October 2008 at 17:10:46

its was tamil movie muthu dubbed into japanese as dancing maharajah. it was tamil cinemas entry to japanese market. a succesful run. so kamal was not happy, he potrait as a japanese martial arts expert in dasa, tryin his luck in japan.
but thalaivar does not need to act as a jap. dub his movies, n its big in japan.

johnroyal,chennai
Sunday, 26th October 2008 at 09:29:05

thalaiva i ask you one thing all politician is asking Indian government to interfere in srilankan Tamil issue if Indian government does this. srilanka
will sure ask the support from Pakistan. we want the Tamil people to live in peace so that thalaiver should raise his voice on tamilnadu government to demand British, America and Canada government give the pressure to stop innocent people killing

yuvaraj,India/Puducherry
Friday, 24th October 2008 at 07:09:29

சரியான தருனத்தில் சரியான பதிவு.
Rajasekar,India
Thursday, 23rd October 2008 at 22:31:14

We tamilians always making wrong move. We insert our nose for all Tamilian matters. Previously was the malaysia tamilian issues and now is the srilankan tamilian issues. It is suppossed to be handled by both government and not us. No way the foreign governemnet is going to change their attitude due to our protest!
kanthi mathi nathan,india,chennai
Thursday, 23rd October 2008 at 21:23:28

Dear Sanganthan,
One thing every one must undrstand they are taking this issue in their for a political cause that's all nothing in their heart.we have lot of work to do,by forming a political party.Lets do tha first and then help them truly by solving the crisis.

Raja,Washigton Dc
Thursday, 23rd October 2008 at 14:44:21

ரஜினி அகதிகள் முகாமுக்கு சத்தமில்லாமல் ப‌ல உதவிகள் செய்து வருகிறார். இது கூட ரஜினியின் நண்பரிடம் அகதிகள் முகாம் உதவிகள் செய்ய ரஜினி கூறியுள்ளார். அதனால் சத்தி சார் ஓரம் கட்டப்படுகிறார் என வந்த செய்தி மூலம் தான் நம‌க்கே தெரிய வரும். விளம்பரம் இல்லாமல் தமிழர்களுக்கு உதவி செய்பவர் ரஜினி.
ராமேஸ்வரம் கூட்டத்தில் பேசியவர்க்ள் எத்தனை பேர் அகதிகள் முகாமுக்கு சென்று அவர்க்ள குறைகளை கேட்டிருப்பார்கள். ஆனால் ரஜினி சென்னையிலிருந்து கொண்டே உதவிகள் செய்கிறார். அவர்கள் விளம்பரத்திற்கு கூட குரல் கொடுக்கத்தான் தெரியுமே தவிர ஒரு பைசா கை காச போட்டு செலவு செய்ய மாட்டங்க. ராமேஸ்வரத்திற்கு வந்து போராட வேண்டும் என்ற் சொன்ன்வர்களில் எத்தனை பேர் சொந்த காச போட்டு ராமேஸ்வரம் போனார்கள். எல்லாம் ஓசி காசு.

Nagai Thalapathi S.Shaha malim,INDIA/ NAGORE
Thursday, 23rd October 2008 at 11:14:15

என்னை பொறுத்தவரை நம்ம தலைவரை தமிழனாக பார்காமல் இந்தியனாக பார்பதில் நான் பெருமை கொள்கிறேன்....
கிரி,Singapore
Thursday, 23rd October 2008 at 08:49:39

//தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நிலை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கர்நாடகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இலங்கையில் துன்பப்படுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி.. இன்னும் உலகில் எஙஅகெல்லாம் தமிழர்கள் பரவியிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நடைபெறும் எந்த செயல்களும் கண்டிக்கத்தக்கவையே...”, இது முன்பு ஒருமுறை ரஜினி அளித்த பத்திரிகைப் பேட்டி. //

வழிமொழிகிறேன்

தமிழ் தமிழ் னு சொல்லிட்டு இருக்கிறவங்க பாதி பேருக்கு மேல் தங்களை விளம்பரப்படுத்தி கொள்பவர்களே, இதை போல கூட்டங்களை தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது வசை பாடவே பயன்படுத்துகிறார்கள்.

ஒரு கூட்டத்திற்கும், ஊர்வலத்திற்கும் போய் விட்டால் அவன் உண்மை தமிழன், உண்மையான அக்கறையுடன் இருந்தும் இதை போல வசனம் பேசாவிட்டால் அவன் தமிழினத்திற்கு எதிரி.. என்ன கொடுமை சார் இது!

இது முடியாத பிரச்சனை ..ரஜினி இருக்கும் வரை இந்த பிரச்சனை அவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்..எப்போதும் இவர்களின் உளரலை தடுக்க முடியாது. இது ரஜினிக்கு உள்ள சாபக்கேடு. கசப்பான உண்மை.

புறம் பேசுபவர்களின் தரம் என்றும் உயராது

அன்புடன்
கிரி

ganesh.s.n.,sholinghur/india
Thursday, 23rd October 2008 at 07:37:31

Thamizhana iruntha mattum pothathuda madaiyargale, manithanagavum irukkanum.

Enga vanthu ethada pesarthu. Ithuleya ungale pathi tamil makkulukku therinju pochu.

pirarukkaka kannirum, pirarukkaka sennirum, sinthum evare, avare MANITHAN. Enga thalaivar MANITHAN da.

Dai, T.Ru, vadikkathu mothalai kanniru, tamil makkal thelikkamattangada panniru.

Mr. B.Raja

sathya,chennai
Thursday, 23rd October 2008 at 06:36:30

super article mr.sanganathan... those ppl who criticises rajini always shud talk something related to srilankans atleast in the forthcoming fasting... instead of talking abt rajini , kamal , vadivel-vijayakanth problems..
M.venkatakrishnan,india/cuddalore
Thursday, 23rd October 2008 at 06:30:26

சூரியனை பார்த்து நாய்கள் குரைக்கத்தான் செய்யும்...
தலைவா.. உண்ணாவிரதத்தில் நீ கலந்து கொள்ளும் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
--------------------------------------------------------------------------------

M.venkatakrishnan,india/cuddalore
Thursday, 23rd October 2008 at 06:30:10

சூரியனை பார்த்து நாய்கள் குரைக்கத்தான் செய்யும்...
தலைவா.. உண்ணாவிரதத்தில் நீ கலந்து கொள்ளும் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

M.venkatakrishnan,india/cuddalore
Thursday, 23rd October 2008 at 06:27:31

சூரியனை பார்த்து நாய்கள் குரைக்கத்தான் செய்யும்...
தலைவா.. உண்ணாவிரதத்தில் நீ கலந்து கொள்ளும் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
--------------------------------------------------------------------------------
by
M.venkatakrishnan

guru,india
Thursday, 23rd October 2008 at 06:22:56

100 PERCENT CORRECT.MR.RAJINI IS A GOD.
Anonymous,
Thursday, 23rd October 2008 at 06:12:36

WELL SAID...!
R.Gopi,UAE / Dubai
Thursday, 23rd October 2008 at 06:08:16

‘தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் வாழ்க்கை நிலை நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. கர்நாடகத் தமிழர்களாக இருந்தாலும் சரி, இலங்கையில் துன்பப்படுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி.. இன்னும் உலகில் எஙஅகெல்லாம் தமிழர்கள் பரவியிருக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக நடைபெறும் எந்த செயல்களும் கண்டிக்கத்தக்கவையே...”, இது முன்பு ஒருமுறை ரஜினி அளித்த பத்திரிகைப் பேட்டி.
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

ரஜினி எப்போதும் பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன் ......

gopidesingh,chennai,india
Thursday, 23rd October 2008 at 06:08:02

enna sanganathan sir?neengale ippadi solreenga?avangalukku vera vela iruntha seyya maattangala?vela illathathunala thaana vetti vilambaruthukkaga alayaranunga.ivanunga thiruntha maattanunga sir...yena thiruntha manasu venume
tveraajesh,India/Chennai
Thursday, 23rd October 2008 at 05:53:44

அருமையான பதிவு.
Nandhaa,India
Thursday, 23rd October 2008 at 05:40:17

Hi all

We fans of Rajini kanth have belief in god. And god is watching everything happening here. Everyone have patience but we followers of rajini have more patience than anyone in this world. We are silent until our thalaivar speaks. Dont take advantage of our thalaivar and us.. we are always united and nothing can depart us..

Thalaivar knows when to condemn and when to give voice.. once again we warn directors and others not to take advantage of thalaivars silence

Shravan,
Thursday, 23rd October 2008 at 05:28:34

சிந்திக்க வேண்டிய விஷயம்.. சிந்திப்பார்களா..

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information