Helping Hand During Covid-19(2020) by www.Rajinifans.com
கோவிட் உதவி செயல்பாடுகள் - 1
நமது Rajinifans.com இணைய தளம் பல்லாண்டுகளாக நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இயன்றதை இல்லாதோற்கு கொடுப்பதில் , சமூக பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கொரானா பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து உதவியை எதிர்பார்த்து இருந்த பள்ளிகரணையில் வாழும் அடித்தட்டு மக்களில் 10 பேருக்கு ₹10,000 அளவில் மளிகை பொருட்கள், பண உதவி செய்தனர்.
பயனடைந்தவர்கள் பலதரப்பட்ட மக்கள்.
சிவன் கோவில் அருகில் ஜோதிடர், அர்ச்சகர், வர்ணம் பூசுபவர், சமையல் காரர், ஆட்டோ ஓட்டுபவர், மரக்கடையில் வேலை செய்தவர், கால் டேக்சி ஓட்டுநர், மூதாட்டி, குடும்ப பெண் என பலரையும் நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்கள் வழங்கினர்.
Rajinifans.com சார்பில் நடிகர் ஷேசு அவர்கள் நேரில் வழங்கினார். மனமார்ந்த நன்றிகள்.
தலைவர் வழியில் நற்பணிகள் தொடரும்.
கோவிட் உதவி செயல்பாடுகள் - 2
நம் தலைவர் ரஜினியின் Rajinifans.com இணைய தளம் சார்பாக சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் முதியோர் இல்லத்திற்கு ₹6,000 மதிப்பில் மளிகை பொருட்கள் கொரானா தொற்றுயிர் நிவாரணமாக இன்று வழங்கப்பட்டது.
சமூக விலகலோடு, முக கவசம் அணிந்து பெரும் சிரத்தை எடுத்து மளிகை பொருட்களை சேகரித்து நேரில் சென்று வழங்கிய நண்பரும், தலைவரின் காவலர் ராகவேந்திரா முரளி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் நன்றி சொல்லி காணொளி அனுப்பியதற்கு மனமார்ந்த நன்றிகள்.
கோவிட் உதவி செயல்பாடுகள் - 3
Rajinifans.com இணையதளம் கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.
இன்று திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் வசிக்கும் 21 திருநங்கைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ₹3,000 மதிப்பில் வழங்கப்பட்டது.
Rajinifans.com சார்பாக நண்பர் சிதம்பரம், மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ரஜினிராதாகிருஷ்ணன் மற்றும் துணை செயலாளர் அமிர்தலிங்கம்,நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்து திருநங்கைகளுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினர்.
|