பிரபுவுடன் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்" கவுதமி அறிமுகமான படம்

Rajinikanth rajini171

ஏவி.எம். தயாரித்த வெம்ளி விழாப்படம் "மனிதன்.'' எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷனில் உருவான படம்.

இதில் ரஜினியுடன் ரூபினி இணைந்து நடித்தார். மற்றும் ஸ்ரீவித்யா, மாதுரி, ஜெய்கணேஷ், ரகுவரன், செந்தில், ஜி.சீனிவாசன், டெல்லி கணேஷ், "சோ'', வினுசக்ரவர்த்தி ஆகியோர் நடித்தனர்.

வி.சி.குகநாதன் எழுதிய கதைக்கு, பஞ்சு அருணாசலம் வசனம் எழுதினார். வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு இசை: சந்திரபோஸ்.

இந்தப் படத்தின் விசேஷ அம்சம்: ரஜினி அணிந்த புதுவிதமான உடைகம்; ரொம்பவும் `ரிஸ்க்' எடுத்து செய்த சண்டைகம்.

ஜுடோ ரத்தினம் மிகுந்த முயற்சி எடுத்துக்கொண்டு, புதுவிதமான சண்டைக்காட்சிகளை அமைத்திருந்தார்.

சரவணன் கருத்து

படம் முடிந்ததும், முதல் பிரதியை ஏவி.எம்.சரவணன் பார்த்தார்.

பிறகு, டைரக்டர் முத்துராமனை அழைத்து, "படம் நன்றாக வந்திருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சிக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் மெருகு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், படப்பிடிப்பு முடிந்து விட்டதால், இனி ஒன்றும் செய்ய வேண்டாம். இப்படியே இருக்கலாம்'' என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

முத்துராமன் யோசித்தார். சரவணன் கூறியபடி கிளைமாக்ஸ் சண்டையில் இன்னும் விறுவிறுப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்கும் தோன்றியது. ஆனால் ரஜினியோ வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து, அதில் நடித்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்று தெரியவில்லை.

`எதற்கும் ரஜினியிடம் பேசிப்பார்ப்போம்' என்று கருதி, அவருக்கு போன் செய்தார். விஷயத்தைச் சொன்னார்.

அதற்கு ரஜினி, "சார்! நீங்கம் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து விடுகிறேன். அன்று மாலை வரை என்னை வைத்து எந்தக் காட்சிகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொம்ளுங்கம். சரவணன் சார் பாராட்டுகிற மாதிரி, கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து விடுங்கம்'' என்று கூறினார்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையன்று ரஜினியை வைத்து உச்சகட்ட காட்சிக்கு மேலும் விறுவிறுப்பு ஏற்படும்படியாக, சில காட்சிகளை எடுத்தார், முத்துராமன்.

இப்படி ரஜினியை வைத்து புதுக்காட்சிகம் எடுக்கப்பட்டது சரவணனுக்கே தெரியாது.

புதிய கிளைமாக்ஸ் காட்சி இணைக்கப்பட்டதும், சரவணனிடம் சென்றார், முத்துராமன். "நீங்கம் சொன்னபடி, சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறோம். வந்து பாருங்கம்'' என்று அழைத்தார்.

அதன்படி இறுதிக் காட்சிகளை போட்டுப் பார்த்தார், சரவணன். அப்படியே அசந்து போனார். "ரொம்பப் பிரமாதம்! எப்படி இவ்வாறு மாற்ற முடிந்தது?'' என்று கேட்டார்.

ஞாயிற்றுக்கிழமையன்று ரஜினி வந்து நடித்துக் கொடுத்துவிட்டுப் போனதைச் சொன்னார், முத்துராமன்.

உடனே சரவணன், ரஜினிக்கு போன் செய்து நன்றி தெரிவித்தார்.

2-10-1987 அன்று வெளிவந்த இந்தப்படம், வெம்ளி விழாவையும் தாண்டி, 200 நாட்கம் ஓடியது. ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்த "குரு சிஷ்யன்'' வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம்தான் நடிகை கவுதமி அறிமுகமானார்.

"வேலைக்காரன்'' படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்த படம் "ஊர்க்காவலன்.'' சத்யா மூவிஸ் தயாரிப்பு.

இந்தப் படத்திற்கான வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுத, மனோபாலா டைரக்ட் செய்தார்.

பாடல்களை, புலமைப்பித்தன், முத்துலிங்கம், வாலி, வைரமுத்து, நா.காமராசன் எழுதினார். இசை: சங்கர் - கணேஷ்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதிகா. சித்ரா, வரலட்சுமி, பாண்டியன், ஜனகராஜ், மலேசியா வாசுதேவன், சங்கிலிமுருகன், மகேந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்தனர்.

4-9-1987-ல் வெளிவந்த இந்தப்படம், நூறு நாம் ஓடியது.

Rajinikanth rajini169

குரு சிஷ்யன்

ரஜினியும், பிரபுவும் முதன் முதலாக இணைந்து நடித்த படம் "குரு சிஷ்யன்.''

பஞ்சு அருணாசலத்துக்காக, குறுகிய காலத்தில் ஒரு படத்தை தயாரித்து கொடுக்க விரும்பினார், ரஜினி.

இதுபற்றி, டைரக்டர் எஸ்.பி.முத்துராமனை அழைத்துப் பேசினார். "இந்தப் படத்திற்கு 25 நாட்கம் கால்ஷீட் தருகிறேன். கவுரவ வேடத்தில் நடிக்கிறேன்'' என்று ரஜினி கூறினார்.

"நீங்கம் கவுரவ வேடத்தில் நடிப்பதால், அது பஞ்சு அருணாசலத்துக்கு பெரிய அளவுக்கு உதவி செய்யாது. நீங்கம் ஹீரோவாக நடித்தால்தான் நன்றாக இருக்கும். நீங்கம் கொடுக்கும் 25 நாம் கால்ஷீட்டிலேயே படத்தை எடுத்து விடலாம்'' என்று முத்துராமன் சொன்னார்.

"அது எப்படி முடியும்? படத்தை முடிக்க 45 நாட்களாவது வேண்டாமா?'' என்று கேட்டார், ரஜினி.

அதற்கு முத்துராமன், "இரண்டு ஹீரோக்கம் உம்ள நல்ல கதை ஒன்று இருக்கிறது. நகைச்சுவை கலந்த வேடம். நீங்களும், பிரபுவும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும். படப்பிடிப்பை சென்னையில் நடத்தினால் தொந்தரவாக இருக்கும். குறிப்பிட்ட நாளில் முடிக்க முடியாது. மைசூருக்கு போய்விடுவோம். வேகமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்கலாம்'' என்றார்.

ரஜினி சம்மதித்தார்.

படத்துக்கு திரைக்கதை, வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜா இசை அமைத்தார்.

கவுதமி அறிமுகம்

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கவுதமி நடித்தார். தமிழில் அவருக்கு இதுதான் முதல் படம்.

பிரபுவுக்கு ஜோடி சீதா. மற்றும் மனோரமா, "சோ'', ரவிச்சந்திரன், ராதாரவி, வினுசக்ரவர்த்தி ஆகியோரும் நடித்தனர்.

பிரபு, ஏற்கனவே ரஜினியின் விசிறி. மிகுந்த உற்சாகத்துடன் ரஜினியுடன் நடித்தார்.

பிரபு மீது ரஜினிக்கு மிகுந்த அன்பு. தான் செய்யவேண்டிய ஒரு சண்டைக்காட்சியை பிரபுவுக்கு கொடுக்கும்படி சொன்னார். பிரபு சண்டை செய்வதை பார்த்து, "ஆகா, பிரமாதம்!'' என்று உற்சாகப்படுத்தினார்.

23 நாளில் முடிந்தது

Rajinikanth rajini170
ரஜினி 25 நாட்கம் கால்ஷீட் கொடுத்திருந்தாலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகம் 23 நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டன. "நீங்கம் சென்னைக்குத் திரும்பலாம்'' என்று ரஜினியிடம் முத்துராமன் கூற, "இல்லை. இன்னும் 2 நாட்கம் உங்களுடனேயே தங்கியிருக்கிறேன்'' என்று ரஜினி சொல்லிவிட்டார்.

"அதன்படியே படப்பிடிப்பு குழுவினருடன் 2 நாம் தங்கி, அவர்களுடன் சாப்பிட்டு, எல்லோருடனும் அன்புடன் பேசி மகிழ்வித்தார், ரஜினி. படப்பிடிப்பின்போது, டிராலியைக் கூட தம்ளி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்'' என்று முத்துராமன் கூறினார்.

13-4-1988-ல் வெளிவந்த "குரு சிஷ்ய''னில், அருமையான நகைச்சுவை காட்சிகம் நிறைந்திருந்தன. ரஜினி - பிரபு கூட்டணி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

படம், 125 நாட்கம் ஓடி வெற்றி வாகை சூடியது.