சீனியர் ஊபி: ஆக, நம்ப பேப்பர்ல ஒரு பக்கத்துக்கு Content கிடைக்காம இருக்கு, அதனால ரஜினி பத்தி ஒரு பக்க கதை எழுதலாம்னு இருக்கோம் !
ஜூனியர் ஊபி: என்ன தலீவா !! நாட்டுல Contentக்கா பஞ்சம் ? பத்திரிக்கை விற்பனை மந்தமா இருக்கு. நம்ப ஊபிங்க கூட படிக்கறது இல்ல. ரஜினியை பத்தி எழுதுனா நெறைய பேரு படிப்பாங்கனு தானே இந்த முடிவு.
சீனியர் ஊபி: ஆக, அது அப்படி இல்லை. இது போன்ற அதி முக்கிய Sensittive Matter அனைத்திலும் நமது கருத்தை பதிவு செய்வது நமது கடமை.
ஜூனியர் ஊபி: என்ன தலீவா, இன்னும் கட்சியே ஆரம்பிக்காத அவரை பத்தி போடுறது தான் Sensitiveவா ? புதிய தலைமை செயலகம் கட்டுனதுல ஊழல் இருக்குனு அரசு சொல்லி இருக்கே, அதை ஒரு முழு பக்கம் எழுதுனா நல்லா இருக்குமே
சீனியர் ஊபி: நம்மை பற்றி நாமே பெருமை பீற்றிக் கொள்வது ஜனநாயக விரோத செயல். நமது எதிரியை பற்றி தரம் குறைவாக பொய் செய்தியை எழுதுவது தான் பண நாயகம்.. மன்னிக்கவும் ஜனநாயகம்.
ஜூனியர் ஊபி: ஐய்யோ !! மேடையில பேசுற மாறியே மாத்தி மாத்தி உளறுறீங்களே தலீவா. சரி விடுங்க. ஆமா, நம்ப எதிரி ஆளும் கட்சி தான்னு நேத்து வரைக்கும் கெத்தா சுத்துனீங்க. இன்னிக்கி என்னடானா கட்சியே ஆரம்பிக்காத ரஜினியை எதிரின்னு சொல்லறீங்க ?
சீனியர் ஊபி: முன்னாடியே இருந்த பயம் தான் இப்பொழுது தான் வெளிப்பட துவங்கி உள்ளது. அதனால் நமது கடுப்பு அனைத்தும் ஒரு அப்பாவி ரசிகன் கேள்வி கேட்பது போல அடிச்சு விடலாம்னு இருக்கேன். ஆக..
ஜூனியர் ஊபி: அவர் அறிக்கை விட்டு 3 நாள் ஆச்சு, இவ்ளோ நாளா ரூம் போட்டு யோசிச்சு வெச்சி இருப்பீங்க போல. ஆனா உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்ல. எதுக்கும் ஒரு தடவ என்கிட்ட சொல்லுங்க.
சீனியர் ஊபி: 30,40 வருடங்களாக ரசிகனாக இருப்பது மட்டும் மன்றத்தில் பதவி பெற தகுதி ஆகாது என்று சொன்னாரே, அது போல 30,40 வருடம் திரையில் நடித்தது தகுதி ஆகுமா என்று அறிவுபூர்வமாக கேட்போம்.
ஜூனியர் ஊபி: ஆஹா, பழமொழி தான் தப்பா சொல்லுவீங்கன்னு பார்த்தா, Facts உம் தப்பா சொல்லுறீங்களே. 20 வருஷத்துக்கு முன்னாடி ஆட்சியவே தீர்மானிச்சவர் அவர். 2011 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு முன்னாடி அவரை சந்திச்சி வாழ்த்து பெற்ற போது நல்லா இருந்துச்சான்னு நம்ப ஊபி எவனாச்சும் கேட்டா என்ன சொல்ல முடியும்?
சீனியர் ஊபி: அப்படி பார்த்தாலும் 30 வருடம் ரசிகனாக இருந்தவன் நிலை பரிதாபம் தானே.
ஜூனியர் ஊபி: ஐயோ, அரைகுறையா எல்லாத்தையும் கேட்டுட்டு வந்துடுறீங்க. 30 வருஷம் மன்றத்தில் இருந்தாலும் நேர்மை தான் எனக்கு முக்கிய குணம்னு சொல்லி இருக்கார். அது சரி நமக்கு தான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் மறந்து போச்சே !!
சீனியர் ஊபி: ஆக, செலவு செய்ய சொல்லவில்லை, குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார், ரசிகர்கள் செலவு செய்யாமல் அவர்களின் குடும்பத்தை மட்டும் பார்த்துக்கொண்டு இருந்தால் இவரது படங்கள் வெற்றி பெற்று இருக்குமா ?
ஜூனியர் ஊபி: நாசமா போச்சு. முதலில் உங்க குடும்பத்தை பார்த்துவிட்டு, நமக்கு எந்த தேவையும் இல்லை என்ற நிலையில், பொது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தோடு அரசியலுக்கு வந்தால் தான் நேர்மையாக அரசியல் செய்ய முடியும்னு சொன்னாரு. இதை இரண்டு மூன்று தடவை அழுத்தமாக சொன்னாரு. அதை இப்படி ட்விஸ்ட் பண்ணி எழுதுனா ஊரே நம்பளை காரி துப்பிடும்.
சீனியர் ஊபி: அவ்வளவு அக்கறை உள்ளவர், பெரியாரை போல அமைப்பை தொடங்க வேண்டியது தானே. பதவிக்காக தானே அரசியலுக்கு வருகிறார் என்று கொளுத்தி போடுவோம்.
ஜூனியர் ஊபி: தலீவரே, நமக்கு ரஜினி support தேவை பட்ட போது, ஒரு தடவ நம்ப சு.ப.வீ ஒரு பேட்டில ரஜினி பதவி ஆசையை துறந்தவர். அந்த சின்ன வயசுல வந்த பெரிய பொறுப்பை நிராகரித்தவர்னு நல்லா சொம்பு தூக்குனாரு. ரஜினிக்கு பதவி ஆசைன்னு சொன்னா, சின்ன கொழந்தை கூட நம்பாது. அவரு ரசிகர்களை உசுப்பேத்தாம இருந்தா நமக்கு நல்லதுன்னு தோணுது.
சீனியர் ஊபி: அப்படியானால், முன்னோர் எல்லாம் முட்டாள்கள் இல்லை என்ற What's App குரூப்பில் வருவது போல 'Corporate' கைக்கூலி, 'சிங்க பாதை - அசிங்க பாதை' போன்ற எதுகை மோனையோடு தமிழ்நாடு சமத்துவம், பெரியார் போன்ற Templates வைத்து ஒரு கேள்வியை போடுவோம்.
ஜூனியர் ஊபி: விளங்கிடும். சமத்துவம் பத்தி நம்ப பேசலாமா ?? நம்ப கட்சியில இருக்குற 65 மாவட்ட செயலாளர்களில் ஒரே ஒருவர் தான் தலீத்ன்னு ஒரு புள்ளி வெவரம் சொல்லுது. நம்ப ஆளு ஒருத்தன் திராவிட தோசைன்னு தோசைல கூட ஜாதி பாக்குறான். Advertisement கூட நடிக்காத அவரை பார்த்து Coporate கைகூலின்னு சொன்னா, நம்ப கட்சிகாரங்களே சிரிப்பாங்க தலீவா.
சீனியர் ஊபி: ஆக, கடைசியாக தமிழ் அருவி மணியன் சென்ற கட்சி எல்லாம் கெட்டு போய் விட்டது. பா.ஜ.க ஆட்டுவிக்கிறது என்று ரசிகன் கதறுவது போல நாம் கதறுவோம்.
ஜூனியர் ஊபி: மசால் வடை , மசால் வடை தான் தலைவரே. இன்னுமா ரஜினி பா.ஜ.க னு அதே வடைய சுடுறிங்க ! தமிழ் அருவி மணியனை விடுங்கள். நம்ப கட்சில ஒருத்தர் இருக்காரு. போன தேர்தலில் எதிர் காட்சியா இருந்தவரை காலி பண்ணிட்டு , இந்த முறை எதிர் கட்சியா இருக்குற நம்ப கிட்ட வந்து இருக்காரு. பாத்து சூதானமா இருங்க.
சீனியர் ஊபி: நீ என்ன தான் சொன்னாலும், நாளை நான் இதை பதிப்பிக்க போகிறேன். மேலும் டிசம்பர் 15 குடியரசு தினத்தன்று....
ஜூனியர் ஊபி: யெம்மா !! இது வேறயா !! போதும் தலீவரே.. முடியல. ஆயிரம் தான் இருந்தாலும் நான் பிறப்பால் ஒரு ரஜினி ரசிகன். கேவலம் அரசியலுக்காக இதனை நாள் அவரை எதிர்த்தேன். எப்போது நீங்கள் செய்தியை திரித்து எழுதி அவரை முதுகில் குத்தலாம் என்று நினைத்தீர்களா, அப்போதே நீங்கள் தோற்று விட்டிர்கள்.
அதே போல பா.ஜா.க வடை எல்லாம் இனிமேல் வேகாது. பழைய படி கர்நாடக பேக்டரி வடையை சுடுவோம்.
சீனியர் ஊபி : ஆக, A Vacuum is Filed as it is Cried....
பி.கு. : மேலே குறிப்பிட்ட அனைத்தும் கற்பனையே. இதை படித்து விட்டு உங்களுக்கு செருப்பால் அடித்தது போல இருந்தால் அதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது.
- விக்னேஷ் செல்வராஜ்
|