நமது ரஜினிஃபேன்ஸ்.காம் சார்பாக அயர்லாந்தில் வசிக்கும் திரு. தங்கசாமி பகவதியப்பனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
மென்பொருள் நிறுவனமொன்றில் பணி புரிந்து வரும் திரு.தங்கசாமி 2004ம் ஆண்டு முதல் அயர்லாந்தில் வசித்து வருகிறார்.
தமிழ்ப் படங்களின் மீதுள்ள அதீத காதலாலும், தமிழ்ப்படங்களைத் திரையரங்குச் சென்று காணவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் அயர்லாந்தில் 2013ம் ஆண்டு முதல் விநியோகம் செய்து வருகின்றார்.
தமிழ் மட்டுமன்றி மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், உருது மொழிப் படங்களையும் விநியோகம் செய்து வருகின்றார்.
ரஜினிஃபேன்ஸ்.காம்: ரஜினிகாந்தின் படங்களுக்கான வரவேற்பும் வியாபாரமும் எவ்வாறு உள்ளது?
தங்கசாமி: ரஜினிகாந்தின் படங்கள் பிற நடிகர்களைக் காட்டிலும் வரவேற்பை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா வியாபாரத்திலும் ரஜினி படங்கள் எப்போதும் பல படிகள் முன்னே உள்ளது.
ரஜினிஃபேன்ஸ்.காம்: இந்திய அளவிலான திரைப்படங்களில் தமிழ்ப் படங்களின் வியாபாரம் எந்த இடத்தில் உள்ளது?
தங்கசாமி: வசூல் ரீதியில் இந்திப்படங்கள் முதல் வரிசையிலும் தமிழ்ப் படங்கள் 2ம் இடத்திலும் உள்ளது
ரஜினிஃபேன்ஸ்காம் : பிற தமிழ் நடிகர்கள் படங்களின் வசூலோடு ரஜினிகாந்த் படங்களின் வசூலை ஒப்பிட முடியுமா?
தங்கசாமி: பிற நடிகர்கள் படங்களை ரஜினியின் படங்களுடன் ஒப்பிட முடியாது. UKல் இதுவரை அதிக வசூலைப் பெற்ற படம் எந்திரன்.
வெற்றிப் படங்கள் எனச் சொல்லப்பட்ட பிற படங்களால் இதுவரை எந்திரனின் வசூலை சமன் செய்ய முடியவில்லை.
ரஜினிஃபேன்ஸ்.காம்: 2.O குறித்து உங்கள் பார்வை.?
தங்கசாமி: இந்தப் படத்தின் வசூல் எந்திரன் படத்தினைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கின்றேன். படத்தினைக் காண ஆவலாக உள்ளேன்.
ரஜினிஃபேன்ஸ். காம்: overseas வியாபரத்தில் ரஜினிகாந்த் படங்களின் வியாபார வீச்சு குறித்தான உங்கள் கருத்து என்ன?
தங்கசாமி: பிற் தமிழ் நடிகர்களின் மார்க்கெட்டுடன் ஒப்பீடும் போது ; வெளிநாட்டு வியாபாரச்சந்தையிலும் ரஜினியின் படங்கள் பல படிகள் உயரத்திலேயே உள்ளது
ரஜினிஃபேன்ஸ்.காம்: வெளிநாட்டு திரைப்பட விநியோகஸ்த்தராக நீங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் என்ன?.
தங்கசாமி: நமது திரைப்படங்களுக்குச் சரியான திரையரங்குகள் கிடைப்பது முக்கியப் பிரச்சினையாகக் கருதுகின்றேன்.
ரஜினிஃபேன்ஸ்.காம்: தமிழ்த் திரையுலகினருடன் உங்களுக்கு இருக்கும் நட்பு குறித்து?
தங்கசாமி : தமிழ்த் திரையுலகினரோடு நல்ல நட்புடன் இருக்கின்றேன். பலரும் பழகுவதற்கு இனிமையானவர்கள்.
ரஜினிஃபேன்ஸ்.காம்: வெளிநாட்டுச் சந்தையில் தமிழ்ப் படங்களின் வளர்ச்சி குறித்து உங்கள் கருத்து?
தங்கசாமி: தமிழ்ப்படங்கள் நல்லதொரு வளர்ச்சியினை உலகளவில் சந்தித்து வருகின்றது. சிவாஜி திரைப்படம் இதற்கான ஒரு தொடக்கத்தினை அளித்தது.
ரஜினிஃபேன்ஸ்.காம்: அயல்நாட்டில் தமிழ் திரைப்பட விநியோகத்தில் உள்ள சவால்கள் என்ன?
தங்கசாமி: வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் சந்திக்கும் சவால்களில் முதன்மையானதாக நல்ல திரையரங்குகள் கிடைப்பதைச் சொல்வேன்
ரஜினிஃபேன்ஸ்.காம் : 2PointO மாபெரும் வெற்றியடைய ரஜினிஃபேன்ஸ்.காம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தங்கசாமி : மிக்க நன்றி. தமிழ்த் திரைப்படங்கள் உலகளவில் மேலும் புகழடைய வேண்டும்.
தமிழ்ப்படங்கள், ரஜினிகாந்தின் திரைப்படங்கள் குறித்தான எனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த ரஜினிஃபேன்ஸ்.காம் இணையதளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்
|