Related Articles
முரசொலி வாசகர்களை முட்டாள்கள் என கூறினாரா ரஜினி?
தர்பார் படம் விமர்சனம் - ஒரு ரசிகனின் தரமான விமர்சனம்
S-U-P-E-R S-T-A-R என வர ஆரம்பிக்கும் அந்த நொடி....... எப்போ தான்டா விடியும் !!!
ஒரு கபாலியாகத் தர்பார் சரித்திரம் படைத்துவிடுமோ?
Superstar fan opens a hotel serves cheap and healthy food
Ties up with Airtel for Darbar-branded SIM cards
Darbar Telugu pre-release event in Hydrabad
அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் - கமல்-60
தர்பார் ஆடியோ விழாவில் ரஜினிகாந்த்
Superstar Rajinikanth at Raj Kamal Function

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பெரியாரை வைத்து பிழைக்கும் கும்பல்கள் தான் எதிரிகள்
(Tuesday, 21st January 2020)

வணக்கம்

பாபா படத்தில் பெரியார் தான் ஆனதென்ன‌ ராஜாஜி என்ற பாடல்வரிகள் வரும்

அந்த வரிகளை நீக்குமாறு பெரியார் ஆதரவாளர்கள்  கேட்டுக்கொண்டனர்‌

பாடல் வரிகளை  உடனே படத்தில் இருந்து நீக்கினார்‌ திரு ரஜினி அவர்கள்.

பெரியார் சிலை சில ஆண்டுகளுக்கு
முன்பு  சேதப்படுத்தபட்ட  போது 

இது காட்டுமிராண்டிதனமான
செயல் என  தன்னுடைய‌ கருத்தை
பதிவு செய்தார்.

பெரியாருக்கும்‌ பெரியாரின் கருத்துக்கும்  எதிரானவர் அல்ல 
ரஜினி காந்த் அவர்கள்.

பெரியார் ஒரு பெரிய விருந்து
அதில் நமக்கு தேவையானதை
எடுத்து கொள்ளவேண்டும் 
என்பதை பெரியார் பட விழாவில்
பதிவு செய்துள்ளார்.

தான் கைப்பட கடிதம் எழுதி பெரியார்
படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளார்.

பெரியாருக்கு எதிரான  மேடை அமைத்து
அதில் பெரியாரை பற்றி பேசவில்லை
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு பத்திரிகை எப்படி வளர்ந்து
எதனால் உயர்தது
என்பதை  சில விஷயங்களை மேற்கோள்காட்டி  பேசினார்.

கடந்த காலத்தில்  சில  சம்பவங்களை 
பற்றி தான் அறிந்திருந்த 
விஷயத்தை  சொன்னார் ரஜினி.

அதில் ராமருக்கு பதிலாக 
அல்லாவை பற்றி இயேசுவை
பற்றி செய்தியாக  இருந்திருந்தாலும்
ரஜினி இது போல்தான் பேசியிருப்பார்.

அவர் உள்நோக்கத்தோடு எதுவும்
சொல்லவில்லை அப்படி சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை

வழக்கம் போல ஊடகங்கள் ஊதி
பெரிதாக்கி விட்டன.

பெரியாரை மதிப்பவர் ரஜினி
பெரியார் கொள்கைகளை மதிப்பவர்‌ ரஜினி 

பெரியாருக்கு எதிரிகள் யாருமில்லை

பெரியாரை வைத்து பிழைக்கும் கும்பல்கள் தான் எதிரிகள்.

சுலபமாக கடந்து போகிற விசயத்தை
தங்களின் சுய லாபத்திற்காக 
பெரியார் வேஷகும்பல்கள்
குழப்பம் செய்து குளிர்காய்கின்றன.

பெரியார் ‌மட்டும் அல்ல 

சமூகத்தில் வாழும்
சாமானிய மனிதரை கூட
காயப்படுத்தா நல்ல 
உள்ளம் தான் நம் ரஜினி

வாழ்க உத்தமர் ரஜினி

Venkat munivel

https://www.facebook.com/100004012593106/posts/1876959512447784/?d=n






 
0 Comment(s)Views: 836

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information