2011. தொலைக்காட்சி செய்தியில் வருகிறது… ‘கண்ணா… நான் போயிட்டு சீக்கிரமா வந்துர்றேன்…’
அச்செய்தியை… அக்குரலை அவன் ஆவலாக கேட்டுக் கொண்டிருந்தான்… அவன் ஒரு ரஜினி ரசிகன்… அந்த சராசரி ரஜினி ரசிகன் தனக்குள்ளே கேட்கிறான்… இது அவரா… இது தலைவர் குரலா…
ஆம்… அவரது குரல் தான்… அவர் ஸ்டைல் அதில் இருக்கிறது.. ஆனாலும் ஏன் இத்தனை தளர்ச்சி… ஏன் இத்தனை தடுமாற்றம்… வலிக்கிறதோ… ரொம்ப வலிக்கிறதோ…
ஐய்யோ.. உடம்புக்கு... ரொம்ப முடியலையோ… என்னடா இது…. என மனம் பதறுகிறது… அவனையறியாமல் கண்ணீர் விடுகிறான்… இதயம் துடிக்கிறது… வயிற்றுக்குள் ஒரு இம்சை, தொண்டைக்குழிக்குள்ளே ஒரு கேவல்…
ரஜினி… ரஜினி… நான் அறிந்த தலைவன்… என் மனம் கவர்ந்த கடவுள் இவரல்லவா.. மற்றவருக்கு வேண்டுமானால் இவர் வெறும் சினிமா நடிகராக மட்டும் தெரியலாம்.. ஆனால் எனக்கு அப்படியல்ல….
அவர் பெயர் கேட்டதுமே … நான் மகிழ்ச்சியாகிறேன்.. அவரை பார்த்தால்.. எனக்கு ரோமம் சிலிர்த்து கொள்கிறது.. என் குடும்பத்தில் உள்ளவர் போல அவரைப்பற்றி அக்கறை கொள்கிறேன்…
இது என்ன வெறும்… ரசனையா… அல்லது பொழுதுபோக்கு மாத்திரமா… அல்லது எல்லோரும் சொல்வது போல இது சினிமா நடிகர்.. ரசிகன் என்ற உறவா…
இல்லை.. இது உணர்வு…. இது அன்பு… இது அக்கறை.. இது.. ஏதோ ஒன்று.. சொல்லத் தெரியாது….
திரைப்படத்தின் ஆரம்ப காட்சியில் தலைவரை பார்க்கும் அந்த ஒரு கணத்தில் நான் என்னை இழப்பேன்.. ஆம், என் நிலையை மறப்பேன்.. சந்தோசத்தில்.. என்னையறியாமல்… துள்ளிக் குதிப்பேன்…
என்னை ஒரு சிலருக்கு புரியும்.. ஆனால் சிலருக்கு புரியாது…
அவர்கள் என்னை ஏளனமாய் பார்த்து… ஏன் இவ்வளவு தீவிரமாய் இருக்கிறாய்… என கேட்கிறார்கள்…
தெரியாது… தெரியாது.. எனக்கே தெரியாது… நான் என்ன திட்டமிட்டா இப்படி செய்கிறேன்.. எனக்கும் தலைவ்ருக்கும் இருக்கும் உறவு… அன்பு.. நேசம்… மரியாதை.. பக்தி.. இதை விளக்க எனக்கு தெரியாது… ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரியும்…
என் உணர்வு.. உண்மையானது.. இதில் கடுகளவும் போலித்தனம் இல்லை.. அல்லது.. காசு சம்பாதிக்கும் எண்ணம் இல்லை…
தலைவரை பற்றி யாராவது குறை சொன்னால், எனக்கு கொதித்து போகிறது…
இந்த உணர்வை புரியாத நபர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து… உங்கள் மதிப்பிடுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு என்னை பாருங்கள்.. என் தோழர்களை பாருங்கள்…
அன்பால் ஒன்று இணைந்த எங்கள் உத்வேகத்தை பாருங்கள்…
கலையின் வீரியம் பார்க்க… எங்கள் திரையரங்குக்கு வாருங்கள்…
வார்த்தைகளில் வடிக்க இயலாத…. மிகவும் மேன்மையான… புனிதமான… ஒப்புயர்வற்ற… எங்கள் உணர்வுகளில் உன்னதம் தெரியும்….
நீண்ட நாட்களாய் காத்துக் கிடந்தோம்... அதற்கான பலனாய் லிங்கா கிடைத்து... இது போதும் தலைவா...
லிங்கா : இன்னொரு 20 ஆண்டுகள் எங்கள் இதய சிம்மாசனத்தில் ஸ்ட்ராங்கா...
- லாரன்ஸ் ஆர். கோபி
|