பாலச்சந்தரோட வளர்ச்சிக்கு பின்னால் இருந்து தளபதியா செயல்பட்டவர்னா அது பிரமிட் நடராஜன்.
பாலச்சந்தர் வெளித்தயாரிப்பாளர்களுக்கு படம் எடுத்துக்கொடுத்து அதை வைத்து போதுமென்று வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அவரிடம் "நாம தனியா படக்கம்பெனி தொடங்கலாம்"னு ஐடியா சொன்னது நடராஜன். பாலச்சந்தருக்கு தயக்கம். அப்போ நடராஜனே "நீங்க நூறு படத்துக்கு மேல இயக்கும் தகுதியுள்ள இயக்குனர். அப்படி சாதிக்கணும்னா உங்க சிந்தனைகளை ஏற்கும் தயாரிப்பாளர் நீங்க தான். நாம கம்பெனி தொடங்கி கமர்ஷியல் படங்கள் எடுப்போம். அதன் வருவாயில் உங்க படங்களை எடுக்கலாம்"...
அப்படி உருவானது 'கவிதாலயம்' மற்றும் 'கலைவாணி'. கலைவாணி மூலம் மணல் கயிறு, பொய்க்கால் குதிரை, அண்ணே அண்ணே எடுத்தார்கள்.
கவிதாலயம் பின்னாளில் 'நான் மகான் அல்ல' படம் முதல் கவிதாலயா ஆனது. அதன் முதல் படத்தில் ரஜினி ஹீரோ. எஸ்.பி.முத்துராமன் இயக்கம். கதை, வசனம் விசு. பிறந்தது 'நெற்றிக்கண்'...
ரஜினி இரண்டு வேடம். அப்பா-மகன். இதற்கு பிறகு அப்பா-மகன் வேடத்தில் ரஜினி நடித்தாலும் இந்த படத்தின் சக்ரவர்த்தி-சந்தோஷ் தான் மாஸ்.
விசு கதைக்காக அலட்டிக்கவேயில்லை. ராமாயணத்தில் ராமன்-தசரதன் பாத்திரங்களை மாடர்னா போர்ட்ரைட் பண்ணா நெற்றிக்கண். தசரத சக்ரவர்த்திக்கு அறுபதினாயிரம் மனைவிகள். மகன் ராமனோ ஏகப்பத்தினி விரதன். ராமன் தசரதனை திருத்த நினைச்சா....அது தான் நெற்றிக்கண்...
தசரத சக்ரவர்த்தி என்பதிலிருந்து வந்த பெயர் சக்ரவர்த்தி.
படத்தின் முதலில் தோறிய பிழை என்னன்னா படம் தொடங்கியதும் மகன் ரஜினி எழும் காட்சிக்கு பிறகு அப்பா ரஜினி எழும் காட்சியில் அப்பா ரஜினியை காட்டி விடுவார்கள். ஆனால் அடுத்த சீனில் ரஜினியின் படோடோபத்தனத்தை காட்ட பல செருப்பு, பல கோட்டு, பல சிகரெட்லாம் காட்டும் போது கை மட்டும் தான் காட்டுவாங்க. அப்புறம் அதே ஷூ காலோடு பூஜையறைக்குள் நுழையும் போதும் ரஜினி ஷு சப்தம் மட்டுமே கேட்கும். அப்புறம் தான் ரஜினியை காட்டுவாங்க. இது தான் ஆக்ச்சுவல் அப்போவோட இன்ட்ரடக்ஷன் சீன். அறிமுகக்காட்சி மாஸா வரணும்னு எடுத்த பின்னால் பெட்ரூம் எழும் சீன் யோசிச்சிருப்பாங்க போல. முதல் காட்சியிலேயே ரெண்டு பேர் கேரக்டரையும் பிரிச்சி காட்டணும்னு. அதனாலேயே அந்த காட்சிகளில் ரஜினி கை மட்டும் வரும்.
அடுத்த ஒரு கல்லூரிக்காட்சியில் சந்தோஷ் ரஜினியை ஒருத்தன் அடிச்சிடுவான். சண்டைக்கு தயாராகும் ரஜினி தன் வாட்ச்சை கழட்டி நண்பன் குண்டு கல்யாணத்திடம் கொடுப்பார். அப்பா விதவிதமா வாட்ச் கட்டும் கோடீஸ்வரன் மகன் இப்படி. அவ்ளோ பெரிய வீட்டில் தனித்தனி அறை விஜயசாந்திக்கும், ரஜினிக்கும். ஆனால் ரஜினியின் சீப்பைத்தான் விஜயசாந்தி உபயோகித்து முடி இருப்பதாய் காட்சி வரும். அவர்கள் அப்பா போல அல்ல என காட்டும் காட்சி.
சக்ரவர்த்தி ரஜினி ஒரு காமாந்தகக்காரன். ஒரு பெண்ணை கூட விடமாட்டான் என்பதற்காக தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வைத்திருப்பார்கள். ஆனால் 'அனாதை ஆசிரத்துக்கு டொனேஷன் ஆயிரம் போதாது. பத்தாயிரம் கொடு' என்பார். நல்ல மனதுடையவர். இந்த வீக்னஸ் மட்டுமே எனக்காட்டும் காட்சி. செம நக்கல், கிண்டல், கோபம், காமம்..செமயா நடித்திருப்பார் ரஜினி. கோட் பாக்கெட்டில் கண்ணாடி வைத்து மீசையை வருடும் அழகென்ன...பர்ஃப்யூம் எடுத்து அடித்துக்கொள்ளும் ஸ்டைலென்ன...நீளமான சிகாரை எடுத்து பற்ற வைக்கும் லாவகமென்ன...சக்ரவர்த்தி தூள்...
அதேப்போல் மகன் சந்தோஷ் ரஜினி காதலியை 'ராமனின் மோகனம்' பாட்டில் விலகியே இருப்பதாக காட்டுவார்கள். அவன் ராமனல்லவா?. தொடவே மாட்டார். பாட்டில் கூட காதலர்கள் இருக்கும் பூங்காவில் அவர் கூச்சத்துடனே நகர்வார். இது தான் அப்பா-மகன் கேரக்டரின் வித்தியாசம்.
கல்லூரி மாணவர் சந்தோஷ் சண்டை போடும் போது மேனகாவை க்ளோசப்பில் காட்டுவார்கள். மேனகாவை விட அவர் தோழி நடிகை செமயாக நாயகி போலிருப்பார். காமெடி நடிகை வாசுகி கூட மேனகாவின் தோழியாக வருவார். அவர் வகுப்பறைக்காட்சியில் ரொம்ப ரொம்ப சுமார் அழகு அவர் தான். காட்சிப்படி இப்படி வேண்டுமென முத்துராமன் சொன்னாராம்.
படத்தின் ஸ்பெஷல் கேமராமேன் பாபு. இரண்டு ரஜினி வரும் காட்சிகள் படத்தில் எண்பது சதவீதக்காட்சிகளில். இரட்டை வேடப்படத்திலேயே அதிகமா இரு வேடமும் ஒரே ஃப்ரேமில் வருவதில் இது தான் நம்பர் ஒன். மாஸ்க் ஷாட் படத்தில் எக்கச்சக்கம். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் ரஜினியும் இரண்டு முறை மேக்கப்போட்டு சீனை முடிக்க வேண்டும். சக்ரவர்த்தி ரஜினி செம நடிப்பு. படத்தில் அவரே ஹீரோ. அவரே வில்லன். கவுண்டமணி மருதமலை விவகாரத்தில் மாட்டியதும் அவரையும், லெக்ஷ்மியையும் வெளுப்பது, கோபத்தை கட்டுப்படுத்த முடியாத தவிப்பு...ரஜினி செமயா பின்னியிருப்பார்.
சரிதா-ரஜினி திருமண சஸ்பென்ஸ் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைத்திருக்கலாம். மேனகா விஷயம் தெரிந்ததும் அப்பா ரஜினி போக்கில் வரும் நக்கல். கையில் எழுதிக்காட்டும் அந்த சீன் செம. விஜயசாந்தி, சரத்பாபு பாத்திரத்துக்கேற்ற நடிப்பு. லக்ஷ்மி அமைதியான நடிப்பு. ஆற்றாமையை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். லக்ஷ்மி லக்ஷ்மி தான்....டிரைவர் கவுண்டமணி அலப்பறைகள். பின்னாளில் கவுண்டமணி இந்த ஸ்டைல் நடிப்பைத்தான் பிடிச்சுக்கிட்டு பெரியாளா ஆனாரு...தீராத விளையாட்டுப்பிள்ளை பாட்டில் பிந்துகோஷ்...😀
கதை, வசனம் விசு.
'கோயம்புத்தூர்ல பாதி இவருது தான். கோயம் இவரோடது. புத்தூர் தான் பாக்கி ஆளுங்களுக்கு...'
'அப்பா சந்தோஷ் பேசறேன்...அம்மா கிட்ட என்னை கண்டவன்னு சொன்னீங்களாமே. எதைக்கண்டவன்?'
'நீ உபதேசம் பண்ணா கேட்கறதுக்கு நான் அந்த ஈஸ்வரன் இல்லடா. கோடீஸ்வரன்..குடி, பீடி, புடி லேடி அதான்டா உன் டாடி...'
'லுக் ராதா...நான் ஒரு சிங்கம். என் முன்னாடி நீ ஒரு கொசு...'
'சிங்கத்தை வலை வச்சு பிடிக்கிறோம். ஆனா கொசுக்கு பயந்து நாம தான் வலைக்குள்ளே போறோம்...'
Great விசு சார்.....
இயக்கம் எஸ்.பி.முத்துராமன். எவ்ளோ அழகா இயக்கி இருக்கிறார். ரஜினின்னா தனித்தெம்பு வந்திடும் போல..
படத்தின் மற்றொரு ஸ்பெஷல் ராஜா. டைட்டில் தொடங்கியதுமே அவரோட இசை நம்மை முழுமையா ஆக்ரமிச்சிடும். மாறி மாறி போட்டி போடும் கேரக்டர்கள் கொண்ட படம்னா ராஜாவுக்கு அல்வா சாப்பிடற மாதிரி. அதுவும் இது சிவன்-முருகன் சண்டை மாம்பழ அல்வா....செமயா ரீரெக்கார்டிங்ல பின்னி இருப்பார்.
பாடல்கள் கண்ணதாசன். அடடா...என்ன வரிகள்...
'இடையும் கொடியும் குலுங்கும் நடையும் உடையும்....எடை போட கம்பன் இல்லை...எனக்கந்த திறனும் இல்லை..இலை மூடும் வாழை பருவம்...'
'மனம் ஆறு பதினாறில் உருவாகும். அது அறுபதை கடந்தால் தவறாகும். ஒரு காலம் வரையில் மரமாகும். மறு காலம் சபலம் பலமாகும்...' கண்ணதாசனின் அனுபவ வரிகள்...
'விதைத்த விதை முளைத்தது மாறவில்லை. விதைத்து விட்டு துடிப்பதில் லாபமில்லை...தசரதா...புரிந்ததா..ஹரிகதா தெரிந்ததா?'
கண்ணதாசனுக்குப்பின் அப்படி ஒரு கவிஞன் பிறக்கப்போவதேயில்லை. ராஜாவின் பாடல்களை எஸ்.பி.பி, மலேஷியா, யேசுதாஸ் மூன்று பேருமே அசத்தலாக பாடி இருப்பார்கள். அந்த பாலுவின் தீராத விளையாட்டுப்பிள்ளை குரல் தனி ஸ்பெஷல்...
எத்தனையோ போக்கிரி ராஜா, குப்பத்து ராஜா, தனிக்காட்டு ராஜா, ராஜாதி ராஜா வந்தாலும் இவங்களுக்கெல்லாம் அப்பன் இந்த சக்ரவர்த்தி...
நெற்றிக்கண் சக்ரவர்த்தி...46 வருட ரஜினி என்கிற ஆலமரத்தின் உரம்..
40 Years of நெற்றிக்கண்... #40YearsofNetrikan
நன்றி : செல்வன் அன்பு
|