 1 Dec 2002
'பிபிசி வோர்ல்ட்டு சர்வீஸ்' அமைப்பு நடத்தியுள்ள உலகின் மிகச்சிறந்த டாப் 10 பாடலில் இளையராஜா இசையமைத்து தளபதி படத்தில் இடம்பெற்ற 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் முதலிடத்தை பெற்று முண்ணனியில் நிற்கிறது.
பிபிசி நிறுவனம் தற்பொழுது ஒரு ஓட்டெடுப்பு நடத்தி வருகிறது. அதில் உலகின் மிகச் சிறந்த 10 பாடல்களுக்கான ஓட்டெடுப்பை தனது இணையதளம் மூலம் நடத்தி வருகிறது. வரும் டிசம்பர் 21ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் இளையராஜா இசையமைத்த ராக்கம்மா கைய தட்டு பாடலே உலகிலுள்ள அனைத்து பாடல்களையும் விட முன்னிலையில் உள்ளது.
இதோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 'வந்தே மாதரம்' பாடல் 5வது இடத்திலும், 'உயிரே' படத்தில் வரும் 'தைய தைய' பாடல் 7வது இடத்திலும் முன்னிலையில் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் இந்த ஓட்டெடுப்பில் கலந்துள்ளன.
இதிலுள்ள முக்கியமான விஷயம், பிபிசி நடத்திவரும் ஓட்டெடுப்பில் அதிகமாக கலந்துகொண்டவர்கள் இந்தியர்களே!
|