சிவாஜி என்ற மிகப் பெரிய வசூல் படத்தைக் கொடுத்த ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சிறிய அளவில் ஒரு விளம்பரம் கூட கொடுக்காத ஏவி.எம். நிறுவனத்தைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் மாட்டு சாணத்தை எறிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏவி.எம். நிறுவன வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வசூலைக் கொடுத்த படம் சிவாஜி. பெரும் வசூலைக் கொடுத்த சிவாஜி படத்தின் 100வது நாளின்போது அதுதொடர்பாக ஒரு விழாவையும் ஏவி.எம். நிறுவனம் ஏற்பாடு செய்யவில்லை.
இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து ஏவி.எம். நிறுவனத்திடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, வெள்ளி விழாவுக்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இன்று ரஜினிகாந்த்தின் பிறந்த நாள். இதையொட்டி அவரது ரசிகர்கள் உலகமெங்கும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால் சிவாஜி என்ற மிகப் பெரிய கொடுத்த ரஜினியை வாழ்த்தி ஒரு சிறிய விளம்பரத்தைக் கூட ஏவி.எம். நிறுவனம் வெளியிடவில்லை.
இது அவரது ரசிகர்களிடையே பெரும் கோபததை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ரஜினி ரசிகர்கள் தங்களது கோபத்தைக் காட்டும் வகையில், போராட்டத்தில் குதித்தனர். சிவாஜி பட விளம்பர போஸ்டர்களில், ஏவி.எம். நிறுவன சின்னத்தின் மீது சாணி அடித்து கோபத்தைக் காட்டினர்.
இதுகுறித்து ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவரான ரஜினி முருகேசன் கூறுகையில், ஏவி.எம். நிறுவனத்தின் இந்த போக்கால் நாங்கள் பெரும் கோபமடைந்துள்ளோம். பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. மேலும் இன்று சிவாஜி பட விளம்பரத்தைக் கூட ஏவி.எம். நிறுவனம் வெளியிடாமல் நிறுத்தி வைத்து விட்டது.
சிவாஜி படத்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்தது ஏவி.எம். நிறுவனம். ஆனால் எங்கள் தலைவரை வாழ்த்தி சிறிய விளம்பரத்தைக் கூட அது வெளியிடாதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. வழக்கமான சிவாஜி பட விளம்பரத்தைக் கூட இன்று அவர்கள் வெளியிடவில்லை. இது ரஜினிக்கு மிகப் பெரிய அவமானம். எங்களைப் போன்ற ரசிகர்களையும் ஏவி.எம். நிறுவனம் அவமதித்து விட்டது.
இனிமேல் ஏவி.எம். நிறுவனப் படம் எதையும் நாங்கள் பார்காகமல் புறக்கணிக்கப் போகிறோம் என்றார்
இன்று காலை சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் ரஜினி பிறந்தநாளையொட்டி சிவாஜி படத்தைப் பார்க்க திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களும், ஏவி.எம். நிறுவனத்தைக் கண்டித்து தங்களது குமுறல்களை வெளியிட்டனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் அலுவலகத்தை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டனர்.
ஈக்கிகூஙூக்ஞ்ஙீட் ஙூச்ஞ் 'இஞஞக'!!!
உற்சாகத்தில் ரசிகர்கள்
இதற்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 57வது பிறந்த நாளை ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர். டிவிக்களிலும் ரஜினி பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினர்.
வழக்கமாக தனது பிறந்த நாளின்போது சென்னையில் தங்காமல் எஸ்கேப் ஆகி விடும் ரஜினி, இந்த முறையும் சென்னையில் இல்லை. பெங்களூரில் தனது பிறந்த நாளை மிகவும் எளிய முறையி்ல கொண்டாடினார்.
ஆனால் ரசிகர்கள் தங்களது தலைவரின் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். சென்னை ரஜனி ரசிகர் மன்றம் சார்பி்ல ஆல்பட் தியேட்டரில் ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களான, போக்கிரி ராஜா, பாயும் புலி, முள்ளும் மலரும், முரட்டுக்காளை, எஜமான், முத்து, மிஸ்டர் பாரத், பாண்டியன் ஆகிய படங்களை இன்றும், நாளையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அன்னதானம், இலவச உடைகள் வழங்குதல், ரத்ததானம், பாட நூல்கள் உள்ளிட்டவற்றை வழங்குதல் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ரஜினி நலனுக்காக சிறப்பு வழிபாடு
செய்து சில பக்தர்கள் தங்க் தேர் இழுத்தனர்.
கோவையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச பாட நூல்கள், எழுதுபொருட்களை வழங்கினர்.
வெளிநாடுகளிலும் ரஜினியின் பிறந்த நாள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஜப்பானில் ரஜினியின் பிறந்த நாளையொட்டி ஒரு தியேட்டரில் கடந்த 9ம் தேதி முதல் ரஜினி படங்களைத் திரையிட்டு கொண்டாடி வருகின்றனர்.
ரஜினி ரசிகர்கள் நடத்தி வரும் இணையதளம் ஒன்று, அமெரிக்கா, துபாய், மலேசியாவில் சிறப்பு நிகழ்ச்சிகள், இசை நி்கழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
டிவியிலும் ரஜினி ..
ரசிகர்களுக்கு நிகராக பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும் ரஜினி பிறந்த நாளை கொண்டாடி வருகி்ன்றனர்.
கலைஞர் டிவி இன்று பிற்பகல் 12 மணியளவில் ரஜினி பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இன்று மாலை ஒளிபரப்பாகும் நேரடி நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருடன் ரஜினி ரசிகர்கள் நேரடியாகப்
பேசலாம்.
விஜய் டிவி இன்று முழுவதும் மன்னாதி மன்னன் என்ற பெயரில் ரஜினி பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
ராஜ் டிவியிலும் எஸ்.பி.முத்துராமன், மு.மேத்தா, கே.எஸ்.ரவிக்குமார், அபிராமி ராமநாதன் ஆகியோரைக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|