15 April 2002
சென்னை: “பாபா படம் செய்றேன்னு சொன்னதும் எல்லாருக்கும் சந்தோஷம். ஆனா, எனக்குத்தான் டென்ஷன். கல்கத்தா ஸ்டேடியத்துல பாகிஸ்தானுக்கு எதிரா இந்திய அணி - வீரர்களுக்கு என்ன டென்ஷன் இருக்குமோ அதை விட டென்ஷனா இருக்கு. என்று நடிகா் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னையில் நேற்று 'பாய்ஸ்' பட துவக்க விழா நடந்தது. அதில் கலந்துகொண்டு ரஜினி பேசியதாவது:
நான் 'பாபா' படம் செய்றேன்னு சொன்னதும் எல்லோரும் ரொம்ப சந்தோஷமா இருக்குனு சொன்னாங்க... ஆனால், எனக்கு டென்ஷனா இருக்கு. மூன்று வருடம் கழித்து படம் செய்றோம். அது எல்லோரையும் சந்தோஷப்படூத்தக்கூடிய வகையில் நல்லா
வரணும் என்ற நினைப்புதான் டென்ஷனை அதிகமா ஏற்படுத்திக்கிட்டிருக்கு. மூன்று வருடமா படம் செய்யாமல் இருந்துட்டு திடீர்ணு பூஜை போட்டு படத்தை துவங்கியதுமே டென்ஷனாயிடுச்சு... கல்கத்தா ஸ்டேடியத்தில் பாகிஸ்தானுடன் ஆடும்போது இந்திய கிரிக்கெட் வீராகளுக்கு என்ன டென்ஷன் இருக்குமோ அதைவிட அதிகமாக டென்ஷன் இருக்கு.
இயக்குனர் ஷங்கர் பேசும்போது 'பாபா' படத்தின் அவுட்லைன் எனக்கு தெரியும். பிரமாதமான கதை. நிச்சயம் மிகப்பெரிய
வெற்றியை பெரும் என்றார். படத்தின் அவுட்லைன் மட்டுமல்ல முழுகதையும் ஷங்கருக்கு தெரியும். நான் அவரிடம் பாதிக்
கதைதான் சொன்னேன். அவர்தான் முழுக்கதையாக்கினார். அவரையே படத்தை இயக்க வைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர் 'பாய்ஸ்' படத்தை இயக்க ஒப்புக்கொண்டதால் என் படத்தை இயக்க முடியாமல் போனது. ஷங்கர் என்னிடம் ஒரு கதை சொன்னார். அந்தக் கததயை படமாக எடுத்தால் நிச்சயம் 50 வாரம் போகும். செலவு 50 கோடியாகும். இரண்டூ வருடம் பிடிக்கும். அதனால், படத்தை செய்யவில்லை.
என் குருநாதர் பாலச்சந்தர் கலகலப்பாக படம் எடுக்கவேண்டும் என்று திடீரென்று 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை துவங்கினார். அதே போலதான் இந்தப் படத்தையும் ஷங்கர் துவங்கியிருக்கிறார். நான் 'படையப்பா' படக் கதையை ஷங்கரிடம் சொன்னேன், அதே போல 'பாபா' படத்தின் கதையையும் ஷங்கரிடம் சொன்னேன். ஆனால், அவர் 'பாய்ஸ்' படக் கதைதையை என்னிடம் இன்னும் சொல்லவில்லை. 'பாபா'ஷூட்டிங் இருப்பதால் இந்த படத் துவக்க விழாவில் கலந்துகொள்ள முடியாது என்றேன். இதில் நடிக்கும் எல்லோரும் புதியவர்கள் என்பதால் அவர்களை என்கரேஜ் செய்யணும் என்று நாணும் வந்து கலந்துகொண்டேன்.
நாள் படம் துவங்கியதால் தமிழ் இள்டஸ்ட்ரி காப்பாற்றப்படும் என்றெல்லாம் பேசுறாங்க..இன்டஸ்ட்ரீயை காப்பாற்ற நான் யார்?
புரொட்யூசர் நல்ல கததயை படமாக்கி அவரை காப்பாத்திக்கிடணும். டிஸ்ட்ரிபியூட்டா அவரை காப்பாத்திக்கணும். தியேட்டாகாரர்
அவரை காப்பாத்திக்கணும். டெக்னிஷியன் அவரை காப்பாத்திக்கணும், நட்சத்திரங்கள் அவர்களை காப்பாத்திக்கிடணும். இப்படி
ஒவ்வொருவரும் அவர்களது பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டால் சினிமா இன்டஸ்ட்ரி நிச்சயம் நல்லா இருக்கும்.
ஏழை. பணக்காரர்களிடம் சந்தோஷ மில்லை. அறிவாளி, புத்திசாலிகளிடம் சந்தோஷமில்லை. வயதானவர்கள், இஞைர்களிடையே சந்தோஷமில்லை. சம்சாரி பிரம்மச்சாரியிடமும் சந்தோஷ மில்லை. எதில் சந்தோஷமிருக்குன்னா செய்யும் தொழிலில்தான் சந்தோஷம் இருக்கு. பொறுப்புடனும், உண் மயுடனும் தொழிலை செய்தால் நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்.
இவ்வாறு ரஜினி பேசினார்.
இயக்குனர் மகேந்திரன் பேசும்போது, 'நல்ல கதையோடு வருபவர்கள் சினிமாவில் ஜெயிக்கலாம்.” என்றார்.
விழாவில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், விக்ரம், பார்த்திபன், சிலம்பரசன், ஷாம். விவேக் நடிகைகள் மீனா, ஜோதிகா, இயக்குனர்கள்
எஸ்.ஏ.சந்திரசேகர், கதிர், சூரியா திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், கேயார், நடிகரா ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சுவுந்தரியா உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக 'பாய்ஸ்' படத்தின் இயக்குனர் ஷங்கர் அனைவரையும் வரவேற்க முடிவில் தயாரிப்பாளர் ரத்னம் நன்றி கூறினார்.
ஜெயலலிதாவிற்கு ரஜினி நன்றி: படவிழா மேடையில் பேசிய ரஜினி, தியேட்டர்களில் கட்டணம் உயர்த்தப் படவேண்டும் என்று
பல முறை வலியுறுத்தப் பட்டு வந்தது. இந்த வலியுறுத்தலை ஏற்று தமிழக முதல்வா் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை
உயர்த்திக்கொள்ள அணுமதி வழங்கியுள்ளது பாராட்டிற்குரியது. அதற்காக தமிழ்நாடு அரசிற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
'பாபா'கெட் அப்'பில் ரஜினி: படவிழாவில் ரஜினி 'பாபா' கெட் அப்பில் வந்திருந்தார். கதர வேஷ்டியும், முழுக்கை சட்டையும் அணிந்
திருந்தார். கழுத்தில் உத்திராட்ச கொட்டை அணிந்திருந்தார். கதர் வேஷ்டியையும், சட்டையையும் அணிந்து ரதினி மேடைக்கு வந்ததை பார்த்த ரசிகர்களில் சிலர் எங்கள் தலைவர் அரசியலுக்கு வருவதற்கு இந்த மாற்றம்தான் துவக்கம்' என்று பேசிக்கொண்டனர்.
|