சிங்கபூர் நாடும் தமிழ் நடிகர்களுக்கு அதிகம் இடம் கொடுத்துள்ளது ரஜினிக்கு மட்டுமே..!
ரஜினிகாந்தின் பிளாக்&ஒயிட் படம் தொடங்கி லிங்கா வரை அவர் படங்களுக்கு சிங்கபூர் நாட்டில் தனி மார்கெட் இருந்து வருகிறது. ரஜினியின் பைரவி, முள்ளும் மலரும், காலி போன்ற பல படங்கள் அங்கு நன்கு ஓடியவை..
சில துளி சாதனைகள்:-
*தொடர்ச்சியாக 60 நாட்கள் தாண்டி சிங்கப்பூரில் ஓடிய முதல் படம் ரஜினியின் "எஜமான்"(1993) தான்.
*முதன் முறையாக சிங்கபூர் நாட்டில் 6 தியேட்டர்களில் திரையிடப்பட்ட தமிழ் படம் "படையப்பா"(1999) தான். (65 நாட்கள் வரை ஓடியது)
*முதன் முறையாக சிங்கப்பூரில் 100 நாள் ஓடிய தமிழ் படம் "சந்திரமுகி"(2005)
*இரண்டாவது முறையாக சிங்கப்பூர் நாட்டில் 100 நாள் ஓடிய தமிழ் படமும் ரஜினியின் படமான "சிவாஜி"(2007) தான். (சிங்கப்பூரில் அதிக நாட்கள் ஓடியுள்ள ஒரே இந்திய படம். மொத்தம் 143 நாட்கள் ஓடியது).
*மூன்றாவது முறையாக சிங்கப்பூர் நாட்டில் 100 நாள் ஓடிய தமிழ் படமும் ரஜினியின் படமான "எந்திரன்"(2010) தான்.
ரஜினியின் எந்திரன் படம் சிங்கப்பூரில் மிக அதிகமாக 12 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இது தான் அந்நாட்டில் அதிக தியேட்டரில் வெளிவந்த தமிழ் படமாக இருந்தது.
ஒரு ரஜினி படத்தின் ரெகார்டை ஒரு ரஜினி படம் முறியிடிப்பது தானே காலம் காலமாக தமிழ் சினிமாவில் வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது ரஜினி நடித்துள்ள "லிங்கா" வரலாறு காணாத அளவிற்கு அதிகமாக 18 தியேட்டர்களில் அங்கு திரையிடப்பட்டுள்ளது. அளவிற்கு அதிகமான தியேட்டரில் ஒரு தமிழ் படம் அந்நாட்டில் திரையிடப்பட்டும் இரண்டாவது வாரம் கூட தியேட்டர் நிரம்புவது ஆச்சர்யமே. இருந்தாலும் ரஜினியின் படம் என்பதால் இதில் அதிசயம் ஏதும் இல்லை தானே...!
|