Related Articles
Lingaa fake collections reports by exhibitors
Rajinikanth paid tribute to his guru Director K Balachander
God Father of our Superstar Rajinikanth passed away
Lingaa grabs third position in overseas market
சிங்கப்பூரில் இரண்டாவது வாரம் கூட தியேட்டர் நிரம்புவது ஆச்சர்யமே
கேரளாவிலும் வசூலை அள்ளும் லிங்கா : சுடச்சுட லேட்டஸ்ட் ரிப்போர்ட்!
Lingaa continues with its excellent performance in Chennai city
Lingaa performs well and family occupies all over
லிங்கா படத்தால் நஷ்டம்.. புகார் கொடுத்தவர், போலீஸ் வந்ததால் ஓட்டம்!
KS Ravikumar opens up about Lingaa climax criticism

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
கிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் கிங்காக நிற்கும் லிங்கா!
(Thursday, 25th December 2014)

கிறிஸ்துமஸுக்கு புதிய படங்கள் வெளியானாலும், பல அரங்குகளில் நிலையாக ஓடிக் கொண்டிருக்கிறது ரஜினியின் லிங்கா.தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் லிங்கா இன்னும் நல்ல கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருப்பது படத்தை வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.கடந்த டிசம்பர் 12-ம் தேதி ரஜினியின் பிறந்த நாளையொட்டி வெளியானது லிங்கா படம். இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவுக்கு பெரிய ஆரம்ப வசூல் கிடைத்தது தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியான லிங்காவுக்கு.முதல் மூன்று தினங்களில் ரூ 104 கோடியை இந்தப் படம் குவித்தது. இந்தியில் வெளியாகும் படங்களுக்கு இந்த வசூல் சாத்தியம் என்ற நிலையில், மாநில மொழியில் வெளியான லிங்கா மூன்றே நாட்களில் நூறு கோடி க்ளப்பில் சேர்ந்தது. அடுத்து வந்த ஆமீர்கானின் பிகேவால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.இந்த நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் லிங்காவுக்கு சரியான கூட்டமில்லை, நஷ்டம் என்றெல்லாம் சிலர் புகார் கிளப்பி வந்தனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்து கிறிஸ்துமஸ் விடுமுறை தொடங்கியதும் கூட்டம் வரும் என்று அவர்களுக்கு பதில் அளித்தனர் தயாரிப்பாளர்கள் தரப்பில்.கிறிஸ்துமஸ் விடுமுறையில் புதிய படங்கள் வருவது படத்தை பாதிக்கும் என்று இன்னொரு தரப்பினர் கூறிவந்தனர்.ஆனால் அனைவரின் கணக்கையும் கணிப்புகளையும் பொய்யாக்கும் விதத்தில் லிங்கா படம் வெளியிட்ட திரையரங்கள் பலவற்றில் ஓடிக் கொண்டுள்ளது. காட்சிகளின் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், "லிங்கா படம் 720 அரங்குகளில் வெளியானது. எங்கு பார்த்தாலும் அந்தப் படம்தான் கடந்த இரு வாரங்களாக ஓடிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் முதல் வாரம் முடிந்ததுமே கொஞ்சம் அரங்குகளைக் குறைத்திருக்க வேண்டும். அப்போதுதான் படம் ஹவுஸ்புல்லாகவே தொடரும்.ஆனால் இந்த வாரம் புதிய படங்கள் நான்கைந்து வந்துள்ளன. இவற்றைத் திரையிடுவதற்காக சில காட்சிகளை, அரங்குகளைக் குறைத்திருக்கிறார்கள். இது இயல்பான விஷயம்தான். இப்போது இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளுடன் லிங்கா ஓடுவதாக ரிப்போர்ட்ஸ் வருகிறது," என்றார்.தமிழகத்தில் சென்னையில் லிங்கா இன்னும் பெருமளவு அரங்குகளில் மூன்றாவது வாரமாக ஓடிக் கொண்டுள்ளது. சத்யம், ஐநாக்ஸ் உள்ளிட்ட மால்களில் இன்றைக்கும் இந்தப் படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் நல்ல வசதியான மால்களில் படத்துக்கு நல்ல கூட்டம். விடுமுறை நாட்கள் என்பதால் மற்ற அரங்குகளிலும் 90 சதவீத பார்வையாளர்களுடன் லிங்கா வெற்றி நடை போடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Chennai - Raaki Cinema

சென்னை அம்பத்தூரில் 4ஸ்கிரீன்கள் கொண்ட "ராக்கி" சினிமாஸில் கிறிஸ்துமஸ்க்கு வெளிவந்த படங்களையும் தாண்டி 3வது வாரத்திலும் மெயின் ஸ்கீரினில் இரண்டு காட்சிகளோடு மொத்தம் அந்த காம்பளக்ஸில் மூன்றுகாட்சிகளாக ஓடி வருகிறது ரஜினியின் "லிங்கா"..!

*இந்த தியேட்டரில் 175 நாட்கள் ஓடியுள்ள ஒரே படம் ரஜினிகாந்தின் "சிவாஜி" தான்.
*இந்த தியேட்டரில் கடைசியாக அதிக நாள் ஓடிய படமும் ரஜினியின் படமான "எந்திரன்" தான்.133 நாட்கள் ஓடியது.

Chennai - Albert Cinema

சென்னை ஆல்பட் தியேட்டரில் அதிக இருக்கைகள் உள்ள மெயின் ஸ்கிரீனிலே ரஜினியின் "லிங்கா" கிறிஸ்துமஸ் வெளியீடு படங்களையும் தாண்டி 25 நாட்களை நோக்கி ஓடிவருகிறது.

ஆல்பட் தியேட்டர் அமைந்துள்ள சென்னை அண்ணாசலை பகுதிகளில் மட்டுமே சத்யம் சினிமாஸில் 5 ஸ்கிரீன்கள், உட்லண்ட்ஸ் தியேட்டர், சிம்போனி தியேட்டர், எஸ்கேப் சினிமாஸில் வரலாறு காணாத காட்சிகள், தேவி தியேட்டர், தேவிபாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, சாந்தி தியேட்டர், சாய்சாந்தி தியேட்டர், ஆல்பட், பேபிஆல்பட் தியேட்டரென தமிழ் திரையுலக வரலாற்றில் அண்ணாசாலை பகுதியில் அதிக ஸ்கீரின்கள் அதிக காட்சிகளோடு வெளிவந்த முதல் படம் "லிங்கா" தான்.

இத்தனை காட்சிகளையும் தாண்டி கிறிஸ்துமஸ்க்கு வெளியான படங்களையும் தாண்டி ஆல்பட் மெயின் ஸ்கிரீனீல் 2 காட்சிகளாக "லிங்கா" தொடர் வெற்றிநடை போடுகிறது..!

*ஆல்பட் தியேட்டரில் படிக்காதவன் தொடங்கி படையப்பா வரை ரஜினியின் 8 படங்கள் 175 நாள் ஓடியுள்ளது. இது போல் யாருக்கும் ஓடியதில்லை.
*ஆல்பட் தியேட்டரில் கடைசியாக அதிக நாட்கள் ஓடிய படம் ரஜினியின் "எந்திரன்"(161 நாட்கள்) தான்..!

சென்னை ஆல்பட் தியேட்டரில் அதிக இருக்கைகள் உள்ள மெயின் ஸ்கிரீனிலே ரஜினியின் "லிங்கா" கிறிஸ்துமஸ் வெளியீடு படங்களையும் தாண்டி 25 நாட்களை நோக்கி ஓடிவருகிறது.

ஆல்பட் தியேட்டர் அமைந்துள்ள சென்னை அண்ணாசலை பகுதிகளில் மட்டுமே சத்யம் சினிமாஸில் 5 ஸ்கிரீன்கள், உட்லண்ட்ஸ் தியேட்டர், சிம்போனி தியேட்டர், எஸ்கேப் சினிமாஸில் வரலாறு காணாத காட்சிகள், தேவி தியேட்டர், தேவிபாரடைஸ், தேவிகலா, தேவிபாலா, சாந்தி தியேட்டர், சாய்சாந்தி தியேட்டர், ஆல்பட், பேபிஆல்பட் தியேட்டரென தமிழ் திரையுலக வரலாற்றில் ...அண்ணாசாலை பகுதியில் அதிக ஸ்கீரின்கள் அதிக காட்சிகளோடு வெளிவந்த முதல் படம் "லிங்கா" தான்.

இத்தனை காட்சிகளையும் தாண்டி கிறிஸ்துமஸ்க்கு வெளியான படங்களையும் தாண்டி ஆல்பட் மெயின் ஸ்கிரீனீல் 2 காட்சிகளாக "லிங்கா" தொடர் வெற்றிநடை போடுகிறது..!

*ஆல்பட் தியேட்டரில் படிக்காதவன் தொடங்கி படையப்பா வரை ரஜினியின் 8 படங்கள் 175 நாள் ஓடியுள்ளது. இது போல் யாருக்கும் ஓடியதில்லை.
*ஆல்பட் தியேட்டரில் கடைசியாக அதிக நாட்கள் ஓடிய படம் ரஜினியின் "எந்திரன்"(161 நாட்கள்) தான்..!

Chennai - Sri Birnda Cinema

சென்னை பெரம்பூரில் ஒரு ஸ்கீரின் கொண்ட தியேட்டரான "பிருந்தா" தியேட்டரில் கிறிஸ்துமஸ்க்கு வெளிவரும் படங்களை திரையிட வேண்டும் என கட்டாயத்தில் இருந்தும் ரஜினியின் "லிங்கா" படத்தை தொடர்ந்து திரையிட்டுள்ளனர்..!

*இந்த தியேட்டரில் நான் சிகப்பு மனிதன், படிக்காதவன் தொடங்கி சந்திரமுகி வரை ரஜினியின் 80% படங்கள் 100 நாள் ஓடி சாதனை படைத்துள்ளது.
*இந்த தியேட்டரில் 175 நாள் ஓடியுள்ள ஒரே படமும் ரஜினிகாந்தின் "படையப்பா" தான்.
*சமீபகாலங்களில் இந்த தியேட்டரில் அதிக நாள் ஓடிய படம் ரஜினியின் எந்திரன்(63 நாட்கள்) தான்.

Chennai - Kamala Cinema

சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டர் இரண்டு ஸ்கீரின்கள் உள்ள அரங்கம். கிறிஸ்துமஸ்க்கு வெளிவரும் அணைத்து படங்களும் இங்கு திரையிடப்படுகிறது. ஆனால் எல்லா படத்துக்கும் ஒன்றிரண்டு காட்சிகள் தான். கணக்கில் அடங்கா காட்சிகளோடு வெளிவந்தும் மூன்றாவது வாரத்தில் கூட இப்படங்களை விட அதிகமாக ரஜினியின் "லிங்கா" 3 காட்சிகளோடு அங்கு வெற்றிநடை போட்டு வருகிறது..!

*கமலா தியேட்டர் வரலாற்றில் ஒரே நாளில் 6 படங்கள் திரையிடப்படுவது இதுவே முதல் முறை.
*கமலா தியேட்டரில் கிட்டத்தட்ட ரஜினியின் 10 படங்கள் 100 நாள் ஓடியுள்ளது. இதுபோல் எந்த நடிகரின் படங்களும் அங்கு ஓடியதில்லை. ரஜினியின் மாப்பிள்ளை, உழைப்பாளி போன்ற படங்கள் அந்த தியேட்டர் வரலாற்றில் அக்கால கட்டத்தில் வசூல் ரெக்கார்ட் படைத்தது குறுப்பிடத்தக்கது.

Trichy - Ramba Cinema

திருச்சியில் உள்ள "ரம்பா" தியேட்டரில் கிறிஸ்துமஸ்க்கு வெளிவந்த எந்த படங்களுக்கும் இடம் கொடுக்காமல் ரஜினியின் "லிங்கா" படத்தை 4 காட்சிகளாகவே தொடர்ந்து திரையிட்டு வருகின்றனர்..!

*இந்த தியேட்டரில் கடைசியாக அதிக நாட்கள் ஓடிய படம் ரஜினியின் படமான "எந்திரன்" தான். ஓடிய நாட்கள் 84.

Madurai - Priya Cinema

தற்போது இரண்டு ஸ்கீரின்களோடு இயங்கி வரும் மதுரை 'ப்ரியா' காம்ப்ளக்ஸில் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிவரும் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ரஜினியின் "லிங்கா" படத்தையே 4 காட்சிகளாக தொடர்ந்து திரையிடுகின்றனர்.

(இந்த தியேட்டரில் ரஜினியின் மிஸ்டர் பாரத், குரு சிஷ்யன், தர்மதுரை, எஜமான், உழைப்பாளி, பாபா படங்கள் 100+ நாட்களும்.. பணக்காரன், முத்து படங்கள் 175 நாட்களும், மன்னன் 200 நாட்களும் ஓடியுள்ளது குறுப்பிடத்தக்கது)

Coimbatore - KG Cinema

கோயம்புத்தூர் "KG சினிமாஸ்" தியேட்டரில் கிறிஸ்துமஸ்க்கு வெளிவரும் நான்கு படங்களையும் தாண்டி ரஜினிகாந்தின் "லிங்கா" 4 காட்சிகளாகவே வெற்றி நடை போடுகிறது.

(4 ஸ்கீரின்கள் கொண்ட இந்த தியேட்டரில் ரஜினியின் பாட்ஷா 365 நாளும், படையப்பா 275 நாளும் ஓடியது குறுப்பிடத்தக்கது)

Nellai - Perinvillas

நெல்லை மாநகரில் புகழ்பெற்ற பெரிய தியேட்டரான "பேரின்பவிலாஸ்" திரையில் எந்த ஒரு கிறிஸ்துமஸ் வெளியீடு படங்களுக்கும் இடம் கொடுக்காமல் ரஜினியின் "லிங்கா" படத்தையே 4 காட்சிகளாக தொடர்ந்து திரையிட்டுள்ளனர்..!

*இந்த தியேட்டரில் தளபதி தொடங்கி சிவாஜி வரை தன் படத்தினை 6 முறை 100 நாள் காட்டியுள்ள ஒரே நடிகர் "ரஜினி" மட்டுமே.
இந்த தியேட்டர் வரலாற்றில் அதிக நாள் ஓடிய படமும் ரஜினியின் "சிவாஜி" படம் தான். மொத்தம் 153 நாட்கள் ஓடியுள்ளது.

1 Comment(s)Views: 820

ramkumar,india-tamilnadu
Sunday, 28th December 2014 at 08:23:02

thalivar always rock

Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information