புதிய ஆண்டு விடியும் ஜனவரி மாதத்தில் நம் சூப்பர் ஸ்டாருக்கு திரைக்கு வந்துள்ள அணைத்து படங்களுமே ஏதோ ஒரு விதத்தில் சாதனை படைத்த படங்களாகும். அப்படி இந்த புதிய ஆண்டுகளின் தொடக்கமான ஜனவரி மாதத்தில் திரைக்கு வந்துள்ள ரஜினியின் அணைத்து படங்களும். அவை செய்துள்ள சாதனைகளும்...
குப்பத்து ராஜா(1979) - சென்னை மாநகரில் முதன் முறையாக 6 தியேட்டர்களில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் இதுவே.
பில்லா(1980) - இந்த ஆண்டில் அதிக நாட்கள் திரையில் ஓடியப்படம். சென்னை அபிராமி காம்ப்ளக்ஸில் ஓடிய நாட்கள் 260.
தீ(1981) - முதன் முறையாக ரஜினிக்கு இலங்கை நாட்டில் 100 நாள் ஓடிய படம் இதுவே. 2 தியேட்டர்களில் அந்நாட்டில் ஓடியிருந்தது.
போக்கிரி ராஜா(1982) - தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக சென்னை மாநகரில் 4 திரையரங்குகளில் 100 நாள் ஓடிய படம் இதுவே.
பாயும்புலி(1983) - அப்போதைய சென்னை மாநகரின் பெரிய அரங்கமான "அலங்கார்" தியேட்டரில் 43 நாட்கள் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி அன்றைய தேதியில் சாதனை படைத்திருந்தது.
நான் மகான் அல்ல(1984) - சென்னை "சத்யம்" தியேட்டர் மெயின் ஸ்க்ரீனில் சூப்பர் ஸ்டாருக்கு 100 நாள் ஓடிய முதல் படம்.
Mr.பாரத்(1986) - இந்த ஆண்டில் மதுரை மாநகரில் 100 நாள் ரஜினிக்கு ஓடிய ஒரே படம். சினிப்ரியா தியேட்டரில் ஓடியது.
பணக்காரன்(1990) - சத்யா மூவீஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டில் வெளிவந்து 25 வாரம் திரையில் ஓடிய படம்.
தர்மதுரை(1991) - பொங்கலுக்கு இப்படத்தோடு வெளிவந்த 8 படங்களையும் பின்னுக்கு தள்ளி 180 நாட்கள் ரெகுலர் காட்சிகளாகவே திரையில் ஓடியது.
மன்னன்(1992) - இந்த ஆண்டில் அதிகமாக 200 நாட்கள் திரையில் ஓடிய ஒரே தமிழ் படம். (சென்னை அபிராமி காம்ப்ளக்ஸில் ஓடியது)
பாட்ஷா(1995) - சுமார் 5 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு வருடம் திரையில் ஓடிய படம். (கோவை KG காம்ப்ளக்ஸில் ஓடியது)
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜனவரி மாதம் வெளிவந்த தமிழ் படங்கள் அனைத்துமே சாதனைகளின் உச்சம் தொட்டவை..!
|