லிங்கா பட பிச்சைக்கார்ர்கள் தொல்லையில் இருந்து தமிழ் சினிமா தப்பித்தது
‘லிங்கா’ பட விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை விடுத்திருக்கிறது.
‘லிங்கா’ பட பிரச்சினை தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் குறித்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர ரஜினிகாந்த் ஒரு பெரிய தொகையை இழப்பீடாக கொடுத்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுபற்றி கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலமாக ரஜினிகாந்த் எங்களுக்கு தெரிவித்து விட்டார். அந்த தொகையும் எங்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டு விட்டது. நாங்களும் அதை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவித்து விட்டோம். அவர்களும் இதை ஒப்புக்கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.
ஆனாலும், கடந்த 10 நாட்களாக இந்த தொகையை தங்களுக்குள் எப்படி பிரித்துக்கொள்வது? என்ற குழப்பத்தில் தான் பணத்தை பெற்றுக்கொள்வது தாமதமாகி விட்டது.
இதற்கும் ரஜினிகாந்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்சினையை சுமுகமாக முடிக்க மனிதாபிமானத்துடன் அணுகி எங்களுக்கு உதவிய ரஜினிகாந்துக்கு திரையுலகின் சார்பில் எங்களின் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.