கபாலி குறித்துப் பல பேட்டிகளை அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசி இருக்கிறார்கள். அதில் கலை இயக்குநர் ராமலிங்கத்தின் பேட்டி ஒரு தலைவர் ரசிகனாகப் பெரிதும் என்னைக் கவர்ந்தது.
அதாவது ஒருத்தர் பேசும் போதே அவர் சும்மா சொல்றாரா.. பேட்டிக்காகக் கொடுக்குற பில்டப்பா.. என்று நமக்குத் தெரியும்.
ஒரு ரசிகரா இது வரை அப்படியே ரசிகன் மனதில் இருக்கும் ஒரு பரபரப்பை உணர்ச்சியை நம்ம மனதை அப்படியே சொல்றான்யா! என்று நினைக்கும் படி இருந்தது சிவ கார்த்திகேயன் பேட்டி.
அதன் பிறகு எனக்கு முழுத் திருப்தியை அளித்தது ராமலிங்கம் பேட்டி.
இவர் கூறும் போது எந்த ஒரு போலித்தனமும் இல்லாமல் அப்படியே உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தைகளாகவே தோன்றியது.
நாம ரசிக்கும், ஒரு முறையாவது பார்ப்போமா என்று நாம் எதிர்பார்க்கும் ஒரு பிம்பம் நம்முடைய பணியைப் பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்று இவர் கூறுவதைப் பார்க்கலாம்.
படத்தில் மட்டுமே பார்த்த தலைவரை நேரிலும் அதே போல வந்து நிற்கும் போது நமக்கு எப்படி இருக்கும் என்பதை இவர் கூறும் போது அப்படியே புல்லரித்து விட்டது.
குறுகிய நேரமே இருந்தாலும் உண்மையாகவே ரசித்துப் பார்த்த பேட்டி இது. நீங்களும் பாருங்கள் நான் கூறுவது எவ்வளவு உண்மை என்று புரியும்.
நான் இதை பலமுறை பார்த்து விட்டேன் :-) .
கொசுறு
மலாய் மொழில தலைவர் குரலுக்கு டப்பிங் கொடுக்குற அருண் குமரன் பேசுவதையும் கேளுங்க. ரொம்பச் சுவாரசியமான தடங்கல் இல்லாத பேச்சு, தமிழை அழகா பேசுற ஒரு பேட்டி.
கிரி
|