Related Articles
Malaysia Natchathira Vizha 2018 Photo Compilations
தெறிக்கவிட்ட தலைவர்! - இன்றைய நாள் நம் நாள்
Superstsar Rajinikanth Fans Meet Photo Session December 2017
கமலின் அவசரம் : ரஜினிக்கு உதவும் கமல்
துபாயில் உலகே வியக்கும் அளவுக்கு பிரமாண்டமாக நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா
சிவாஜி கணேசன் மணி மண்டபம் திறப்பு விழா
பொறுமையிழக்கும் ரஜினி ரசிகர்களே...!
திருச்சி மாநாடு ரஜினி வராமலேயே, அழைக்காமலேயே திரண்ட பெரும் கூட்டம்!
1995 ஆண்டு துக்ளக்கில் சூப்பர்ஸ்டார் ரஜினி எழுதிய அந்த ஐந்து விழாக்கள் தொடர்
ரஜினி ரசிகன் - சில கேள்விகளும் பதில்களும்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2024 2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
Rajinifans.com Admin நண்பர் கோபிக்கு கண்ணீர் அஞ்சலி
(Monday, 29th January 2018)

rajinifans.com Admin களில் ஒருவரான நண்பர் கோபி, அதிக வேலைப்பளு காரணமாக ஏற்பட்ட களைப்பில் நேற்று ஞாயிறு அதிகாலை (28-01-2018) காலமானார். 

நண்பர் கோபி தங்கள் குடும்பத் தேவைக்காகச் சிங்கப்பூர் பணிக்கு வந்து பின் அவை நிறைவேறிய பின் இந்தியாவிலேயே பணியை மேற்கொண்டார். 

தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான அதிக வேலைப்பளு காரணமாகக் காலமாகியது எங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. 

rajinifans.com தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புதிய வசதிகளைச் செயல்படுத்துவதில் இவரே உதவியாக இருந்தார். 

இவரை வெறும் ரஜினி ரசிகராக மட்டுமே முன்னிலைப்படுத்த முடியாது. 

தமிழின் வளர்ச்சிக்காகத் தன் பங்கை ஆற்றி இருக்கிறார். தமிழ் எழுத்துருவை மேம்படுத்த பல முயற்சிகளில் இவர் ஈடுபட்டது இவரை அறிந்தவர்களுக்குத் தெரியும். 

தமிழ் மீது கொண்ட பற்றால் பல விவாதங்களிலும் கலந்து கொண்டு தமிழின் சிறப்பை எடுத்துரைத்து இருக்கிறார். 

Rajinifans.com ல் கருத்துரை பகுதிகளில் துவக்கத்தில் தமிழில் எழுத வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். இது போக, பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தளத்தில் ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறார். 

எங்களுக்குத் தளத்தில் ஏதாவது மாற்றம் வேண்டும் என்றால், இவரிடமே கூறுவோம். 

கடந்த ஒரு வருடமாக அதிக வேலைப்பளு காரணமாகப் பங்களிப்பு இல்லாமல் இருந்தார், சமீபத்தில் தான் "இனி அதிக அலுவலக வேலைப்பளு இருக்காது என்றும், வழக்கம் போல எங்களுடன் இணைந்து கொள்வதாக"வும் மகிழ்ச்சியுடன் கூறி இருந்தார். 

கடந்த வாரம் கூட rajinifans.com தள பெயரை ரசிகர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்த WhatsApp  விவாதத்தில் கலந்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில் இந்தச் செய்தி எங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருக்கிறது :-( . 

தலைவர் கூறியதையே உங்களுக்கும் கூறுகிறோம். 

குடும்பம் தான் அனைவருக்கும் முக்கியம். அதன் பிறகு தான் மற்றதெல்லாம். நாம் நன்றாக இருந்தால் தான், குடும்பம் நன்றாக இருக்க முடியும். இதற்கு நம்முடைய உடல் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். 

ஓய்வு இல்லாமல் உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் கடுமையாக வேலை செய்வது நமக்கு அதிக மன உளைச்சலையும் உடல் நிலையைப் பாதிப்பையும் ஏற்படுத்தும். 

எனவே, வேலை முக்கியம் தான் ஆனால், அதுவே வாழ்க்கையில்லை. கோபிக்கு 40 வயது தான் ஆகிறது, 40 எல்லாம் ஒரு வயதா? 

கோபி குடும்பத்துக்கு எங்களின் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 

கோபி! rajinifans.com தளம் இருக்கும் வரை உங்களின் பங்கும் என்றும் தொடர்ந்து இதில் இருந்து கொண்டே இருக்கும். 

உங்கள் நினைவுகளுடன் 

Rajinifans.com அட்மின்கள் மற்றும் ரசிகர்கள்






 
7 Comment(s)Views: 999

Priyanka. K,Krishnagiri
Tuesday, 30th January 2018 at 05:00:31

Varutamaga ulladhu..andavanin paathathil ungal Anma seratum...ungal kudumbam thuyarilirindu meendu vara, ellam valla iraivanai vendugiren.
Jeethu,USA
Tuesday, 30th January 2018 at 01:16:55

RIP
Khalifa,India
Tuesday, 30th January 2018 at 01:07:38

நம்ப முடியவில்லை. ஆழ்ந்த இரங்கல்
Elango D,chennai
Monday, 29th January 2018 at 22:38:39

May his soul rest in peace...
Vijay Andrews,India
Monday, 29th January 2018 at 14:04:37

அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவர் குடும்பத்திர்க்கு சமாதானத்தை தந்தருல்வாராக‌
BaBa APS ,India
Monday, 29th January 2018 at 11:49:17

Gopi sir you was the best , you will be with us forever
க. பாலாஜி,
Monday, 29th January 2018 at 10:41:11

அதிர்ச்சியான செய்தி. அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேன்டுகறேன்.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information