இப்போதான் Jailer 2 பாட்டெல்லாம் முழுவதும் கேட்டேன்.

ஒரே வார்த்தையில் சொல்லணும்னா…

“வேறமாரி!”

செப்டம்பர் 30-ம் தேதி வெளியான Jailer 2 முழு ஆல்பத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனிருத் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான flavour-ல் இருக்கிறது. 

ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு வரி சொல்லணும்னா…

Ala Bolelo – ஆரம்பிக்கும் போதே வேற vibe!

One Sun One Moon – ஆரம்பிச்சு போகப் போக, தலைவர் reference-களை வார்த்தைகளோடு இணைத்த விதத்தில் அனிருத் + நெல்சனின் புத்திசாலித்தனம் தெரிகிறது.

Netru Ponavai – Shankar Mahadevan குரல்… கேட்கவே ஒரு தனி feel.

Veramaari – பெயருக்கு ஏத்த மாதிரி… வேறமாரி!

Jailer 2 Theme – Theme music-லேயே தலைவர் presence தெரிகிறது.

Bindaas – தலைவரை உட்கார்ந்த இடத்திலேயே அடிச்சுத் தூக்குவார் என்று எதிர்பார்த்தால்… இந்தப் பாட்டில் உட்கார்ந்தபடியே அசைந்து கலக்கிட்டார்!

Putaapu Gang – கேட்ட பிறகும் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.

Shaitaan – Varman Theme-ஐ உள்ளே கொண்டு வந்து, வேற மாதிரி கலக்கியிருக்காங்க!

One Name – ஒரு பெயர் போதும்… யாருன்னு சொல்லத் தேவையில்லை.

Dileep Theme – சின்னதுதான்… ஆனா ஒரு character-க்கு தேவையான weight இருக்கு.

Dil Haareya – DC, Doctor படத்தின் “கசாகசா” பாணியில் இன்னொன்றா?

Hukum Reloaded – தோசைக்குள்ள என்ன வைக்கிறோம் என்பதில்தான் சூட்சுமம்! Hukum என்ற தோசைக்குள் அருமையான மசாலா! ?

இதுதான் அனிருத் + நெல்சன் உலகின் Magic!

“வாட் எ கர்வாட்”, “ஜலபுலஜங்கு” என சினிமாவிலும் இணையத்திலும் வைரலான வார்த்தைகள்…

Doctor பட ப்ரோமோவில் நெல்சனின் “வேறமாரி frame பாருங்கஜி”…

Jailer audio நிகழ்ச்சியில் தலைவர் சொன்ன “வாழ்க்கையில் மேலேயே இருந்துவிட முடியாது… கீழே இறங்கி வந்துதான் ஆகணும்” என்ற வரி…

இப்படி பழைய references-ஐ எடுத்துக்கொண்டு, அதே நேரத்தில் புதுசாக ஒரு உலகத்தையும் உருவாக்குவது — இதுதான் இந்தக் கூட்டணியின் தனித்துவம்.

ஒரு பக்கம் reference.

இன்னொரு பக்கம் புதுசா ஒரு வார்த்தை.

அதுதான் அனிருத் + நெல்சன் உலகின் magic.

Super Subu-வின் வரிகளும் இந்த உலகத்துக்கு இன்னொரு layer சேர்த்திருக்கிறது.

“இட்லி சாம்பார்” வேண்டாம்… “புட்டும் கடலையும்” ட்ரை பண்ணுங்க!

ஒரு ரெஸ்டாரெண்ட்டுக்குப் போறோம்.

இட்லி சாம்பார் நல்லா இருக்கு.

தொடர்ந்து அதையே சாப்பிட ஆரம்பிக்கிறோம்.

ஒரு கட்டத்துல…

“வேற ஏதாவது try பண்ணலாமே…”

என்று தோணும்.

அதே ரெஸ்டாரெண்ட்ல வேற ஒரு dish ஆர்டர் பண்ணும்போது…

“என்ன இருந்தாலும் இட்லி சாம்பார் மாதிரி வராது” என்று நினைப்பது இயல்புதான்.

ஆனா…

நீங்க try பண்றது என்னன்னு மறக்காதீங்க.

புட்டும் கடலையும்!

அது இட்லி சாம்பார் மாதிரி இருக்காது.

இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

புட்டும் கடலையும் செம்மயாதான் இருக்கு.

“புட்டுல உளுந்து அதிகம்… கடலையில துவரம் பருப்பு குறைவு…” என்று கணக்கு போட ஆரம்பிச்சா…

ச்ச்ச்சை!

முதல் Jailer-ன் பாடல்கள் எப்படி இருந்ததோ, அதே மாதிரி Jailer 2-வும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதான்.

ஆனால் இந்த முறை அவர்கள் அதே recipe-யை மீண்டும் பரிமாறாமல், வேறொரு flavour-ஐ முயற்சி செய்திருக்கிறார்கள்.

அதனால்தான் முதல் முறை கேட்கும்போது சில பாடல்கள் புதிதாகத் தோன்றலாம்.

இரண்டாவது முறை கேட்கும்போது வேறு விஷயம் பிடிக்கலாம்.

மூன்றாவது முறை…

“அட… இது நல்லாத்தானே இருக்கு!”

என்று மண்டைக்குள் ஏறலாம்.

12 பாடல்களையும் கேட்டுவிட்டு முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான்…

“ஊரோட டாப்ல இருக்கோம்! முடிஞ்சா தொட்டுப் பாருங்க!”

- விஜய் ராம்