முதுபெரும் எழுத்தாளரும் சிவாஜிபடத்தின் வசனகர்த்தாவுமான சுஜாதா இன்று மறைந்தார். வெகுஜன பத்திரிக்கைகளில் தனக்கென்று தன்னிகரற்ற இடத்தை வகித்து வந்த சுஜாதா நீண்ட காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார்.
சென்ற மாதம் உடல்நிலை கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உடல்நிலை தேறி ரோபாட் படத்தின் வேலைகளை கலந்து கொண்டிருந்தார். இந்நேரத்தில் சுஜாதா திடீரென்று நேற்று உடல்நிலை குன்றி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மாலை அபாயாகட்டத்திலிருந்த சுஜாதாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்து இன்று இரவு ஒன்பதரை மணிக்கு உயிர் நீத்தார்.
இதுவரை காயத்ரி, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும், சிவாஜி என பல ரஜினி படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் சுஜாதா எழுத்துலகில் மட்டுமல்ல சினிமாவுலகிலும் வசனங்களின் முலம் புரட்சி ஏற்படுத்தியவர், அன்னாரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கும் மட்டுமல்ல தமிழ் படிப்பவர்கள் அனைவருக்குமே பேரிழப்பு,
அன்னாரது ஆத்மா சாந்தியடைய ரஜினி ரசிகர்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம்,
|