This is an exclusive coverage for our group and www.rajinifans.com
The biography `The Name is Rajinikanth' was launched in a simple but stunning event at Taj Connemera in Chennai last evening.
Prominent personalities from various walks of life graced the occasion. When the function kicked off, the hall was full with elite persons.
Mr.Cho Ramasamy stole the show with his mischievous and funny speech. Soundharaya Rajinikanth was the only person who was there from Superstar's family. (It is already predicted that other family members including Superstar would not be there since it would look like self-proclaiming. Soundharya too didn't speak much in the event. Just a small speech)
Cho released the first copy and Soundharya Rajinikanth received it.
Will update the every minute of the event later.
This is just to present you the exclusive pictures we have shot for you. Just enjoy each and every pic. We have uploaded the hoarding picture too which we spotted in Adyar.
Exclusive Picture coverage for our group:
http://smg.photobucket.com/albums/v243/rajinifans/Biography_Launch/
More updates on the tow?..Stay tuned!!
Sundar
கடவுளின் கட்டளையை அப்படியே பின்பற்றுபவர் ரஜினிகாந்துக்கு பதவி ஆசையோ, பண ஆசையோ கிடையாது எழுத்தாளர் சோ பாராட்டு
நடிகர் ரஜினிகாந்த் கடவுளின் கட்டளையை அப்படியே பின்பற்றுபவர். அவருக்கு பண ஆசையோ, பதவி ஆசையோ கிடையாது என்று எழுத்தாளர் சோ கூறினார்.
புத்தக வெளியீட்டு விழா
Ôதி நேம் ஈஸ் ரஜினிகாந்த்Õ என்ற பெயரில், ரஜினிகாந்த் பற்றி டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று மாலை நடந்தது.
புத்தகத்தை நடிகரும், எழுத்தாளருமான சோ வெளியிட, ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில், சோ பேசியதாவது:-
அற்புத படைப்பு
ÔÔஇது, ஒரு வினோதமான நிகழ்ச்சி. இந்த புத்தகத்தை வெளியிட்ட எனக்கு, புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது. புத்தகத்தை என் கண்ணில் காட்டவில்லை. ஆனால், கமலஹாசன் படித்து விட்டார்.
ரஜினிகாந்த் சினிமாவில் இருந்தாலும், பகட்டை விரும்பாதவர். அவர், அரசியல் பேசுவார். ஆனால் அரசியல்வாதி அல்ல. அவர், ஆன்மிகம் பேசுவார். ஆனால் சன்னியாசி அல்ல. அவர், கடவுளின் அற்புத படைப்பு.
கடவுள் சொல்வதை யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் கடவுளின் கட்டளைகளை அப்படியே பின்பற்றும் ஒரே மனிதர், ரஜினிகாந்த்தான்.
ரிஷிகேஷ்
எந்த ஒரு நடிகரும் தன் வாழ்நாளில், வருடத்தில் பதினைந்து நாட்களை ரிஷிகேசில் கழிக்க மாட்டார்கள். ரஜினி ஒருவரை தவிர. வருடத்தில் பதினைந்து நாட்கள் அவர் ரிஷிகேசில் ஓட்ஸ் கஞ்சியையும், வெறும் பழங்களையும் மட்டும் சாப்பிட்டுக்கொண்டு வாழ்கிறார்.
ÔÔநீங்க ஏன் அடிக்கடி ரிஷிகேஷ் போறீங்க?ÕÕ என்று நான் அவரிடம் கேட்டேன். ÔÔஉங்களை மாதிரி ஆட்கள் முகத்தை பார்க்காமல் இருக்கலாம் அல்லவா?ÕÕ என்று தமாசாக பதில் அளித்தார்.
ரஜினிக்கு, சோ தான் ஆலோசகர் என்று கூறுகிறார்கள். அவர் என் ஆலோசனையை கேட்டு இருந்தால், இவ்வளவு பெரிய வெற்றிகளை பெற்று இருக்க மாட்டார். என் ஆலோசனைகளை கேட்டு யார் உருப்பட்டு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது உங்களுக்கு தெரியும்.
அரசியலுக்கு வந்தால்...
ரஜினிகாந்த் எந்த ஒரு விஷயத்திலும், அடுத்தவர்களிடம் கருத்து கேட்பார். எந்த ஒரு முடிவையும் தனித்து எடுக்காதே என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை ரஜினிகாந்த் பின்பற்றுகிறார். சிறந்த நிர்வாகம் பண்ணுவதற்கான தகுதி இது. குஜராத்தில் நரேந்திரமோடி இதைத்தான் செய்தார். அதனால்தான் அவர் ஜெயிக்க முடிந்தது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு, குஜராத்தைவிட ஒரு படி மேலே முன்னேறிவிடும். நியாயமும், தர்மமும் ரஜினியிடம் குறையாமல் இருக்கிறது. அவர் ஊழல் அற்றவர். அவரின் தலைமையில் அமையும் நிர்வாகமும் ஊழல் இல்லாமல் இருக்கும்.
ரஜினி சர்வதேச பிரச்சினைகளை அலசும் திறனும், அவருடைய உலக ஞானமும் என்னை பிரமிக்க வைத்து இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவார் என்று இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக சொன்னார்கள். சரித்திரத்தில், உலகிலேயே முதல்முறையாக எல்லா தரப்பு மக்களும் சேர்ந்து, அரசியலுக்கு வா என்று எந்த ஒரு நடிகரையும் அழைக்கவில்லை. அது ரஜினி விஷயத்தில் நடந்திருக்கிறது.
வெற்றி
ரஜினி, தலைக்கனம் இல்லாதவர். கொஞ்சம் பணம், புகழ் வந்தால், சிலருக்கு தலைக்கனம்வந்துவிடும். ஆனால் இவ்வளவு பெரிய புகழ் வந்த பிறகும் ரஜினிக்கு தலைக்கனம் கிடையாது. ÔசிவாஜிÕ படத்தின் வெற்றியில் தன் பங்கு எதுவும் இல்லை என்று சொன்னவர். அந்த படத்தின் வெற்றிக்கு காரணம் ஷங்கரும், சரவணனும்தான் என்றார்.
ஒரு முதல்வராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், தன்னை விட அந்த பதவி உயர்ந்தது என்று கருதவேண்டும். அப்படிப்பட்ட எண்ணம் உள்ளவர், ரஜினிகாந்த்தான். அவருக்கு பதவி ஆசையும், பணத்தின் மீது ஆசையும் கிடையாது.ÕÕ
இவ்வாறு சோ பேசினார்.
ஏவி.எம்.சரவணன்
விழாவில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், முன்னாள் சி.பி.ஐ. டைரக்டர் கார்த்திக்கேயன், ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ஆகியோரும் பேசினார்கள்.
டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், பட அதிபர் ராம்குமார், செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன், நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், கார்த்தி ஆகியோர் விழாவில் கலந்துகொண்டார்கள்.
விழா முடிவில், டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
|