ரஜினிகாந்த், ஒரு உன்னத மனிதர் - ஐஸ்வர்யாராய்
நடிகர் ரஜினிகாந்த் ஒரு உன்னத மனிதர் என்று Ôஎந்திரன்Õ கதாநாயகியும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் புகழ்ந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் Ôஎந்திரன்Õ திரைப்படம், பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த படத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் நடித்து வருகிறார். வெளிநாடுகளில் சில பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் ரஜினிகாந்தை ஐஸ்வர்யாராய் புகழ்ந்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ரஜினிகாந்தின் வேகமான நடை, சுறுசுறுப்பான நடிப்பு போன்றவற்றை நேரில் பார்த்து பிரமித்து போனேன். மிகச்சிறந்த நடிகராக இருந்தபோதிலும் மிக சாதாரணமாக இருக்கிறார். லைட் பாய் முதல் சக நடிகர், நடிகைகள் வரை அனைவரிடமும் சாதாரணமாக பழகுகிறார்.
எந்திரன் படத்தில் ரஜினிகாந்துடன் ஒரு ஷெட்யூல் மட்டுமே நடித்து இருக்கிறேன். அதிலேயே அவருக்குள் ஒரு உன்னத மனிதர் இருப்பதை அறிந்து கொண்டேன். நமது நாட்டிலேயே மிக பிரபலமான நடிகரான ரஜினிகாந்திடம் உலகில் உள்ள அனைத்து நடிகர்களையும் பார்க்க முடிகிறது.
தன்னுடைய நடிப்பு பற்றி லைட்&மேன், மேக்கப் மேன் ஆகியோரிடம் கூட கருத்து கேட்கிறார். படப்பிடிப்பின்போது நடிப்பு பற்றி எனக்கு சொல்லிக் கொடுத்தார். எந்த சூப்பர் ஸ்டாரும் இதுபோன்று சொல்லிக் கொடுப்பதை பார்க்க முடியாது. ஆனால் போட்டி, பொறாமை இல்லாமல் அவர் திறந்த மனதுடன் பழகுகிறார்.
அவரது மனிதாபிமானம், எளிமை, நடிப்பில் புதுமைகளை காட்ட துடிக்கும் ஆர்வம் என்று அவரைப் பற்றி கூறிக்கொண்டே போகலாம். அவரைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவருடன் நடிப்பதன் மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு ஐஸ்வர்யாராய் தெரிவித்தார்.