இன்று காலை ‘அசல்’ துவக்க விழாவிற்கு சூப்பர் ஸ்டார் வந்திருக்கிறார் என்ற தகவலை என் பத்திரிகை நண்பர் ஒருவர் அங்கிருந்தபடியே நமக்கு மொபைலில் தெரிவித்தார். அலுவலகத்தில் பணியில் இருந்த படியால் நாம் அங்கு செல்ல முடியாவிட்டாலும், அடுத்த நிமிடம் நான் மானசீகமாக அங்கு சென்று குதித்துவிட்டேன்.
ரஜினி என்ன டிரஸ் போட்டிருந்தார், என்ன கெட்டப், எப்படி வந்து இறங்கினார், எத்தனை மணிக்கு வந்தார் போன்ற கேள்விகளை தொடர்ச்சியாக நண்பரிடம் LIVE COMMENTARY கேட்டு நச்சரித்துக்கொண்டயிருந்தேன். அவரும் அவ்வபோது எனக்கு COMMENTARY கொடுத்துகொண்டேயிருந்தார். நான் நேரில் போயிருந்தால் ஏகப்பட்ட விஷயங்களை அள்ளிவந்திருப்பேன். (சூப்பர் ஸ்டார் நிச்சயம் வருவார் என்று உறுதியாக தெரிந்திருந்தால் ஜஸ்ட் ஒரு ரெண்டு மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு கவர் செய்ய சென்றிருப்பேன். ஊப்ஸ்… மிஸ்ஸாகிவிட்டது… அடுத்த முறை பார்க்கலாம்.)
நண்பர் கூறியதிலிருந்து:
அஜீத் பட பூஜை என்பதால் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அஜீத் ரசிகர்கள் வேறு அந்த தெருவையே அமர்க்கலப்படுத்தியிருந்தனர். ரஜினி வரப்போவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 9.30 மணிக்கு விழா துவங்கினாலும் 10.00 மணி வரை ரஜினி வரவில்லை. சுமார் 10.10 க்கு திடீரென்று பரப்பரப்பு தொற்றிக்கொண்டது. உடனே புரிந்துவிட்டது ரஜினி வந்துவிட்டார் என்று. எங்கிருந்து தான் வநதார்களோ தெரியவில்லை அத்தனை ரஜினி ரசிகர்கள். அந்த இடமே ஒரு நிமிடம் திக்குமுக்காடி போய்விட்டது.
ராம்குமாரும் பிரபுவும் ஓடிச் சென்று ரஜினியை வரவேற்று அழைத்துவந்தனர். வெள்ளை வேட்டி சட்டையில் பளிச்சென்று ஷேவ் செய்த முகத்துடன் சூரியனாக வந்தார் ரஜினி. உடன் தனது மகள் சௌந்தர்யாவும். முன்னை பிரமுகர்கள் அனைவரும் சென்று ரஜினியிடம் கைகுலுக்கி அவர் வந்ததற்கு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
asal_rajini5
அஜீத் ரஜினியை பார்த்தவுடன் மிகவும் உற்சாகமானார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். அனைவரும் தங்கள் உரையில் ‘அசல்’ வெற்றிக்கு வாழ்த்து கூறினார்.
asal_rajini6
சூப்பர் ஸ்டார் பேசியதிலிருந்து:
“நான் பொதுவாக சினிமா பூஜைகளுக்கு என் மகளை அழைத்து வந்ததில்லை. ஆனால் நேற்று நான் சொல்லி வைத்துவிட்டேன், “நாளை காலை ரெடியாக இரு. சிவாஜி சார் வீட்டுக்கு அசல் பட பூஜைக்கு நாம் போகணும்” என்று. என் மகள் முதலில் கலந்து கொள்வது சிவாஜி ப்ரோடக்ஷன்சின் பட பூஜையாக இருக்க நான் விரும்பினேன்.
இந்த இடம் மிகவும் ராசியான இடம். சந்திரமுகி படத்தின் பூஜையும் இங்கு தான் நடைபெற்றது. அந்த படம் நடிக்கும்போது நான் சற்று டென்ஷனாகவே இருந்தேன். என்னை விட அதிக டென்ஷனாக இருந்தது ராம் குமார் தான். முந்தைய படமான பாபா சரியா போகாததால் இது எப்படி போகுமோ என்ற படபடப்பு அவரிடம் இருந்தது. அனால் சிவாஜி சாரின் ஆசியால் சந்திரமுகி படம் அபார வெற்றி பெற்றது. அன்றைக்கு நான் எப்படி இருந்தேனோ அதே போல அஜீத்தும் இப்போது இருக்கிறார். அவர் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறார். அவருக்கு தேவை இப்போது ஒரு பிரம்மாண்ட வெற்றி. அதை நிச்சயம் ‘அசல்’ கொடுக்கும். இந்த இனிய விழாவில் ஒரே குறை சிவாஜி சாரும் கமலா அம்மாளும் இல்லை என்பது தான். இருந்தாலும் அவர்கள் ஆசி அனைவருக்கும் நிச்சயம் உண்டு. இந்த படத்தின் வெற்றி விழாவிலும் நிச்சையம் நான் இருப்பேன்”
எப்படியோ சூப்பர் ஸ்டாரை மறுபடியும் ரசிகர்கள் கண்ணில் காட்டியதற்கு அசல் படக்குழுவினருக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும்.
குறிப்பு: அனைத்து சினிமா விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடும் புரட்சித் தமிழன் சத்யராஜின் புரட்சி வாரிசு சிபிராஜ் இந்த விழாவிற்கு வரவில்லை என்பது பெரிய ஏமாற்றம். (ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு படம் கிடைச்சிருக்குறதா சொல்றாங்க!!)
Sundar
|