Related Articles
ரகசிய ஏஜென்ட் ரஜினி - ஒரு அட்டகாச காமிக்ஸ்!
நாகேஷ் மறைவு: தலைவர் ரஜினி இரங்கல்!
படிக்காதவனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும்
Rajinikanth Endhiran Media News & Articles
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் ரஜினிகாந்த்
Rajinikanth appeared in television and condemned Karunanidhi arrest
Superstar Rajinikanth at Thenali 175th Day Function
Superstar Rajinikanth in the year 2000
நாச்சிக்குப்பம் இப்போ நட்சத்திர குப்பம்!
ரஜினி சார் என் மிகச்சிறந்த நண்பர்!! - சத்யராஜ்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
வெண்ணிலா கபடிக்குழு - சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!
(Monday, 9th February 2009)

புதியவர்களின் நல்ல முயற்சிகளுக்கு என்றுமே முதல் ஆதரவுக் கரம் கொடுப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

சேரன் என்ற இளைஞர் பொற்காலம் என்ற அருமையான படம் எடுத்ததைப் பாராட்டி அவருக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி போட்டு அழகு உற்சாகப்படுத்திய பெஹருந்தன்மைக்குச் சொந்தக்காரர் ரஜினி.

காரணம், விமர்சனம் என்ற பெயரில் சிலர் காட்டும் வக்கிரமுகம் ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் காயப்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் நமது சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டும்தான். அன்றைக்கு எம்ஜிஆர் அவர்கள்தான் புதியவர்களின் முயற்சியைப் பாராட்டுவதிலும் பரிசளிப்பதிலும் முதலிடத்தில் இருந்தார். இன்றைக்கு அந்த இடத்தில் ரஜினியை வைத்துப் பார்க்கிறார்கள் திரையுலகினர்.

ஒரு படத்தை அவர் பார்த்து பிரமாதம் என்று சொன்னாலே, விருது பெற்ற மகிழ்ச்சியை உணர்கிறார்கள்.

அதனால்தான் பல இளைஞர்கள் புதிய படம் எடுத்துவிட்டு, ரஜினியின் வாழ்த்துக்காக வந்து நிற்கும்போது, எவ்வளவு வேலை இருந்தாலும் சட்டென்று ஒப்புக் கொண்டு படம் பார்த்துவிட்டு வாழ்த்திவிட்டு வருவார் ரஜினி.

பாராட்டுவதிலும் கஞ்சத்தனம் கிடையாது அவரிடம். தனது பாராட்டே அந்த இளைஞனுக்கு... படைப்பாளிக்கு புதிய படைப்புகளுக்குத் தேவையான டானிக்காக அமையும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்துவார். இல்லையில்லை... அவர் உள்ளத்திலிருந்து தானாகவே அப்படிப்பட்ட வார்த்தைகள் வந்துவிழும்!

வெண்ணிலா கபடி குழு என்ற படம் முழுக்க முழுக்க புதியவர்கள் இணைந்து எடுத்துள்ள நல்ல படம். ரஜினிக்கு இந்தப் படத்தைப் போட்டுக் காட்ட விரும்பினார்கள். தனது பல
பணிகளுக்கு நடுவிலும் ரஜினி இதற்கு ஒப்புக் கொண்டார்.

விஷயம் கேள்விப்பட்டதும் தலை கால் புரியவில்லை வெண்ணிலா கபடி குழு இளைஞர்களுக்கு.

பரபரப்பாக சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

வெள்ளை வேட்டி - சட்டையில் மின்னலாய் வந்த ரஜினி, படத்தை ரசித்துப் பார்த்தார். நகைச்சுவைக் காட்சிகளில் வாய்விட்டு சிரித்து மகிழந்தார்.

படம் முடிந்தபிறகு, சம்பந்தப்பட்ட இளைஞர்களை வரவழைத்த ரஜினி அவர்களை மிகவும் பாராட்டினார்.

அவரது பாராட்டுரை இது:

"நல்ல படம்... நிஜமாகவே புதிய முயற்சி. என்னை ரொம் இம்ப்ரஸ் பண்ணிருச்சி. குட்...அந்த க்ளைமாக்ஸ் அருமையா இருந்தது. படத்துக்குப் பொருத்தமான முடிவு. குறிப்பாக தமிழர் விளையாட்டு கபடியை மையமாக வைத்து ஒரு படம் செய்த உங்களைப் பாராட்டியாக வேண்டும். நான் கூட ஒரு படத்துல (தர்மதுரை) கபடி விளையாடற மாதிரி நடிச்சிருக்கேன். பட்... அது ஒரு ஜாலியான பார்ட் அந்தப் படத்துல. ஆனா, இந்தப் படம் அருமை. எக்ஸலன்ட் மேக்கிங்.

கவலைப்படாதீங்க. படம் நல்லா போகும். உங்க டீமுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!"

தங்கம்... வைரத்தை விட தரமான வார்த்தைகள் அல்லவா, நம் தங்கத் தலைவரின் இந்தப் பாராட்டு மொழிகள்!

-Shankar.

 

 


 
8 Comment(s)Views: 1215

Tamilan,Toronto
Tuesday, 10th February 2009 at 18:47:42

It's all smiles with Rajinikanth
Giri,
Tuesday, 10th February 2009 at 12:30:37

Thanks. Excellent Photos and why there is no your website logo these days in any of the photos?
Naveen,singapore
Monday, 9th February 2009 at 21:45:46

what a perfect man in the world.....

stonecoldz530,england
Monday, 9th February 2009 at 20:22:08

rajini is best
Steve,Malaysia
Monday, 9th February 2009 at 08:53:21

Kudos to the team

SL BOY,Sri Lanka
Monday, 9th February 2009 at 08:31:11

What a lucky boys................
Sivani,Tuticorin
Monday, 9th February 2009 at 06:49:59

Yes They are very very lucky persons......

Super star'oda wishes vangitangala ini avanga film carrier super'a erukum...
Rajini sir we're waiting your film "Enthiran".... Ungaluku wishes solla ennaku age illa.... Seekiram unga film parthu santhosa pada asai padurom.. Thanks sirVinod Xavier,Bangalore,India
Monday, 9th February 2009 at 05:37:55

Thalaivar is really great. Acknowledging is the hallmark of our Superstar.
"Encourage one another. Many times a word of praise or thanks or appreciation or cheer has kept people on their feet." - Charles Swindoll

This came as Thought for the day in www.rajinifans.com website. Super Star is living upto these proverbs in reality.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information