என்னப்பா தலைவர் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிச்சிட்டாரு ? அவ்வளவு பயமா ? இன்னும் அவர் அரசியலுக்கு வருவாருன்னு நம்புறியா ? - இது சிலரின் கேள்வி.
நிச்சயமாக ஒரு பெரிய இயக்கம், அதுவும் கிட்டத்தட்ட 20 லட்சம் நிர்வாகிகளை (உறுப்பினர்கள் அல்ல வெறும் நிர்வாகிகள்) கொண்ட ஒரு இயக்கம் ஒரு மாபெரும் தேர்தலை புறக்கணிக்கும் போது பாதகம் நிறையவே இருக்கும்.
இதையெல்லாம் தெரிந்தும் 23 வருடமாக அரசியலை தன்னைச் சுற்றியே சுழல வைத்த தலைவர், இப்படி ஒரு முடிவு எடுக்கிறார் என்றால், நிச்சயமாக அதைத் தவறான முடிவு எனச் சாதாரணமாகக் கடந்து விட முடியாது !!
முதலில் பாதகங்களைப் பாப்போம்.
ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்த பெரும்பாலானோர் இதுவரை வேறு ஒரு கட்சிக்கு ஆதரவு அளித்தவர்களாகத் தான் இருந்து இருப்பார்கள்.
அந்தக் கட்சியினரை பகைத்துக்கொண்டு , அவைகளுக்கு எதிராகப் பூத் கமிட்டி வேலை செய்து, இப்போது தலைவர் களம் இறங்காததால், மீண்டும் அந்தக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
நோட்டாவிற்குத் தான் ஓட்டுப் போடுவார்கள் என நிச்சயமாகச் சொல்ல முடியாது. காரணம், "உங்க தலைவர் தான் வரலே, அவர் வந்த பின்னாடி அங்க போ, இது ஒன்னும் துரோகம் இல்ல" என்பது போன்ற வார்த்தைகள் கிராம நகர்ப்புற அளவில் தாராளமாகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதுபோல, நமது strong zone / weak zone எது என அறிய முடியாது. மக்களிடம் நம்மீது உள்ள நம்பிக்கை பற்றி அறியாமல் நேராகச் சட்டசபையில் விஷப்பரீட்சையாகக் கூடக் களம் காண நேரிடலாம்.
ஆனால் முடிவெடுத்தது தலைவர் அல்லவா!! நமக்கு தோன்றும் இந்தச் சிம்பிள் லாஜிக், 23 வருட அரசியல் பழகியவருக்குத் தோன்றாமலா இருந்து இருக்கும்?
ஜெ மற்றும் கலைஞர் இல்லாத இந்த முதல் தேர்தலில், தமிழகத்தில் Established லீடர் இல்லாத இந்தச் சூழலில், தலைவர் களம் கண்டு 20% வாக்குவங்கியை காட்டி இருந்தாலே அவர் தமிழகத்தில் மாபெரும் சக்தியாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்க முடியும் என்பது பரவலான கருத்து. ஆனால் அவருக்குத் தேவை அது இல்லை, அவருக்குத் தேவையானது ஒன்று தான். தன்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் . அவ்வளவு தான்.
மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதைப் பற்றிச் சிறிதும் கவலை படாமல், இங்கே யார் பெரியவர் எனக் காட்ட துடிக்கும் இந்த அதிகார போட்டியில் கலந்து கொண்டு என்ன பயன்?
இதில் எவர் வென்றாலும், அசுர பலத்தோடு வரும் அந்தக் கட்சியை நேருக்கு நேர் சந்திப்போம்.
மத்தியில் எப்படிப்பட்ட ஆட்சி அமைந்தாலும், மாநிலத்தின் சிறப்பான ஆட்சி இருந்தால் தான் மாநில நலன் பாதுகாக்கப்படும் என்பது கடந்த காலம் நமக்கு உணர்த்தியது.
ஆகவே சட்டசபையில் வெல்வதே தமிழகத்திற்கு நல்லது செய்ய உதவுமே தவிரப் பாராளுமன்றத்தில் அல்ல.
சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பாராளுமன்ற தேர்தல் அதர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் அதிகார போர்.
சட்டசபையில் நடக்கப்போவது தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான போர் !!! நமது எதிரி யார் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டப்போவது இந்தத் தேர்தல்.
கமல், TTV ஆகியோர் கட்சி ஆரம்பித்த போது இருந்த அதிர்வு இப்போது இல்லாமல் போனதற்குக் காரணம், அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் கொள்கை போன்றவற்றைப் பற்றிப் பேசாமல், "ஆளும் அரசு எதிர்ப்பு" என்ற ஒற்றை வரியில் அரசியல் செய்கின்றனர்.
ஆனால் தலைவர் கட்சி தொடங்கும் அந்த "Timing", அப்போது தான் ஏன் மற்ற அரசியல்வாதிகளுக்கு மாற்று என அவர் தம் கொள்கையை முன்வைக்கும்போது ஏற்படப் போகும் அந்த அதிர்வு.... அப்போது மற்றவர்களுக்குப் புரியும், 23 வருட காத்திருப்பின் அவசியம்.
அவர் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறினாலும் கூறினார்.....அடுத்த நாளே அதிமுகக் கூட்டணியில் இடம்பெறும் பாமக தனது பத்து அம்ச கோரிக்கையில் தண்ணீர் பிரச்னையைச் சேர்கிறது.
அதிகாரச் சண்டையாக இருக்க வேண்டிய தேர்தலை தண்ணீர் பிரசனையைச் சார்ந்ததாக மாற்ற தெரிந்தவருக்கு, தன்னைச் சுற்றியே தேர்தலை நடத்த தெரியாதா?!
தான் தேர்தலே சந்திக்காமல் போனாலும், மக்களுக்கு நல்ல திட்டம் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மற்ற கட்சிகளை ஆளாக்கியதே தலைவரின் தந்திரம்..... ராஜ தந்திரம் !!!
ரசிகர் சந்திப்பில் தலைவர் கூறிய வார்த்தைகள் இவை....
ஒரு ஊரில் எல்லாரும் அவர்களது வேலையைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஆனால் போர் வரும் போது அனைவரும் ஒன்றாக ஒரே குறிக்கோளோடு வேலை பார்த்து போரிட்டு வெல்வார்கள்... "நாம் போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்".
ஆம், இப்போது நடப்பது போர் அல்ல; அதிகார போட்டி. புலி பதுங்குவது பாய்வதற்கே !!! கடவுள் இருக்கிறார் !! தலைவர் இருக்கிறார் !! அவர்கள் இருவரும் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள் !!
எப்போது போர் வந்தாலும் அம்பு விடத் தயாராகவே உள்ளோம் தலைவா !!!
வாழ்க தமிழ் !!! வளர்க தமிழக மக்கள் !!!
ஜெய் ஹிந்த் !!!
- விக்னேஷ் செல்வராஜ்
|