பொங்கல் பண்டிகையையொட்டி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு நேரில் தோன்றி வாழ்த்து தெரிவித்தார்
(Friday, 14th January 2022)
இன்று பொங்கல் திருநாளை ஒட்டி காலையில் தனது ட்விட்டர் பக்கத்திலும், ஹூடே வாய்ஸ் மெசேஜிலும் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். "அனைவருக்கும் வணக்கம், கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையில் வாழ்ந்திகிட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக்காத்துக்கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலைமுதலே தனது தலைவருக்கு பொங்கல் வாழ்த்து கூறவும், அவரைக்காணவும் ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டுமுன் குவிந்திருந்தனர். சூப்பார்ஸ்டார் வாழ்க தலைவா வாழ்க பொங்கல் வாழ்த்துகள் என கோஷமிட்டப்படி இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்கதவு திறக்க வெளியில் வேகமாக வந்த ரஜினிகாந்த் கேட்டுக்கு முன் இருந்த ஸ்டூல் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி வேகமாக கையை ஆட்டினார். வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதைப்பார்த்து சந்தோஷப்பட்ட ரசிகர்கள் தலைவா என ஆராவாரம் செய்தனர். பின்னர் அவர்களை நோக்கி கும்பிட்ட ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அமைதியாக கலைந்துப்போகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றார். தங்கள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறிய சந்தோஷத்தில் ரசிகர்களும் கலைந்துச் சென்றனர்.