Other Articles
Rajini Returns the Compliment to Anbumani
Worst கண்ணா Worst!
Chandramukhi - The final verdict!
Chandramukhi Ticket Booking at Midnight!
From faraway Japan to watch Rajninikanth
Chandramukhi Media News
நான் யானை அல்ல குதிரை - சந்திரமுகி விழா
கே.பி.சார் நாடகம் இயக்கினால் நானும் கமலும் நடிக்கத் தயார் - ரஜனி திடீர் அறிவிப்பு
Free uniforms for the needy students
Helping Hand - Tsunami Fund Collection on behalf of Rajinifans.com
Blood Donation Camp for Superstar Rajinikanth 55th Birthday
Chandramukhi first look still released
Aishwarya Dhanush Wedding
ரஜினி - தீபாவளி பரிசு
முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு உண்மையான தைரியலட்சுமி - ரஜினிகாந்த
சந்திரமுகி படத்தின் தொடக்க விழா பூஜை
Superstar Rajinikanth Interview in Kumudam Magazine in 2004
தளபதியின் கட்டளை!
பிரதமர் வாஜ்பாயை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்
மக்களவைத் தேர்தல் 2004 - ரஜினி அறிக்கை...

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
இது ஆண்டவன் கொடுத்த சக்தி
(Tuesday, 24th May 2005)

24 May 2005

‘‘வட நாட்டில் நீங்க எங்கே போனாலும் சரி, நீங்க மலை யாளியா, தெலுங்கரா, கன்னடக் காரரா எதுவா இருந்தாலும் சரி, உங்களை ÔமதராஸிĠனுதான் சொல்வாங்க. உங்களைத் தமிழனாதான் பார்ப்பாங்க. தெற்குன்னாலே எல்லோருக்கும் தமிழன்தான்!

இதே மாதிரி சினிமாவாகட்டும், அரசியலாகட்டும், தொழிலாகட்டும்... தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஆனால்தான் தென்னிந்தியாவில் நம்பர் ஒன் ஆக முடியும். அதுதான் தமிழின் சக்தி. தமிழ் என்பது ஒரு கடல். அது மாதிரி பக்தி என்பது ஒரு கடல்!’’ & கடகடவெனப் பேசுகிறார் ரஜினி.பசுமை போர்த்திய மலை, பளிங்கு போல் தவழும் கங்கை நதி, ஓங்காரத்தை வெளியெங்கும் பரப்புகிற காற்று, இதமாகப் பரவிச் சூடேற்றும் சூரியன் என அமைதியும் பக்தியும் தவழும் ரிஷிகேசத்தில், தயானந்த சரஸ்வதியின் ஆசிரமத்தில், வெள்ளை வேட்டி சட்டையும், கழுத்தில் உருத்திராட்சமும், நெற்றியில் திருநீறுமாக, நரையோடிய தாடியுடன் மிக எளிமையாக நிற்கிறார் ரஜினி.

‘‘மனசிலிருந்து Ôநான்Ġ போன பின்பு, ஆண்டவனிடத்தில் சரண் அடைகிறப்போ பக்தி உண்டாகும். கேரளாவில் பிறந்து உலக நாடுகளை எல்லாம் சுற்றி வந்து, கடைசியில் நேபாளத்தில் சிவபுரி அமைத்த Ôசிவபுரி பாபாĠ மூணு வகையான ஒழுக்கங்களைச் சொன்னார். உடல் ஒழுக்கம், அற ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம்! இது மூணும்தான் அடிப்படை. மற்றபடி, இந்துவா இருந்தாலும் சரி, முஸ்லிமா இருந்தாலும் சரி, கிறிஸ்தவரா இருந்தாலும் சரி... அவரவர் சமய ஒழுக்கங்களை முறையாக, சத்தியமாகக் கடைப்பிடித்தால் போதும்!ĠĠ என்கிறார் ஒரு வேதாந்தி போல!

அமைதி தேவைப்படும்போதெல்லாம் ரிஷிகேசத்துக்குப் பறந்து வருகிற இந்தத் திரைப்பறவை, இந்த முறை வந்தது Ôதமிழ் உணர்த்தும் பக்தி’ எனும் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள! அதற்கான காரணத்தையும் சொன்னார் ரஜினி.

ÔÔஇங்கே செல்போன் இல்லை... பேப்பர் இல்லை... பேசறதுக்கு ஆளும் இல்லை. ஆனால், இங்கே அமைதி இருக்கு. அதனால்தான் எது இல்லேன்னாலும், ஆண்டவன் குடி இருக்கிற இந்த இடத்துக்கு அடிக்கடி வர்றேன்.‘பாபா’ படம் சரியா போகலைன்னதும், ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணாங்க. ‘சார், இந்த மாதிரி பெரிசா தாடி வளர்த்துக்கிட்டு, வேட்டி கட்டிக்கிட்டு வெளியே வராதீங்க. எப்பவும் சும்மா ஆன்மிகம் ஆன்மிகம்னே சொல்லிட்டிருக்காதீங்க. இமயமலைக் குப் போங்க. ஆனா, யாருக்கும் தெரியாம போயிட்டு வந்துடுங்க. உங்க இமேஜ் முக்கியம்!’னு சொன்னாங்க. நான் சிரிச்சேன். ஏன்னா, நான் நானா வேதான் இருக்கேன். இதோ இப்போ, ‘சந்திரமுகி’ ரிலீஸான மூணாம் நாளு, எல்லார்கிட்டேயும் இமயமலைக்குப் போறேன்னு சொல்லிட்டுதான் கிளம்பி வந்தேன். படம் பிரமாதமான ரிசல்ட் டாம். ஓஹோன்னு போகுதாம்!

இப்ப கேளுங்க... ‘அவரு ரிஷிகேஷ் போறதுல ஏதோ இருக்குப்பா!’னு சொல்வாங்க. ஆமா! சத்தி யமா இருக்கு. அதான் உண்மை!

இங்கே நான் வர்றது, இந்த ஜெனரேட்டர்ல இருந்து எனக்கு, என் பேட்டரிக்கு சார்ஜ் பண்ணிக்க வர்றேன். இது ஆண்டவன் கொடுத்த சக்தி & விரல்கள் வானம் காட்ட, விழிகள் ஈரம் காட்ட, சிரிக்கிறார் ரஜினி!


ரிஷிகேசத்திலிருந்து கிருங்கை சேதுபதி


 
0 Comment(s)Views: 172

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information