 |
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version |
(Friday, 21st November 2008) |
.jpg) 1995 டிசம்பர் 12. ரஜினியின் 46வது பிறந்தநாளை எந்தவொரு ரசிகனாலும் மறந்துவிட முடியாது. துர்தர்ஷனில் ரஜினி அளித்த பேட்டியை இரண்டு நாளும் கண்டு ரசித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக வந்து குவிந்த கேள்விகளிலிருந்து 46 கேள்விகள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சூப்பர் ஸ்டாரின் பதிலோடு ஒளிபரப்பானது. கேள்விகளும் பதில்களும் இங்கே...
1. நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பற்றி சில வார்த்தைகள் - டாக்டர் பாரதிமோகன், தஞ்சை
என்னை வந்து ஸ்டைல் கிங்குன்னு சொல்றாங்க. நான் ஸ்டைல் கிங்குன்னா சிவாஜி ஸார் ஸ்டைல் சக்ரவர்த்தி. நடிப்பிலேயே ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.
2. பிரதம மந்திரி நரசிம்மராவ் பற்றி உங்கள் கருத்து ? கங்காதரன், வேலுர்
இந்தியாவிற்கு சுதந்திரம் வந்திலிருந்து நேரு குடும்பத்தைத் தவிர யாருமே பிரைம் மினிஸ்டராக ஐந்து வருடத்தை கம்ப்ளீட் செய்தது கிடையாது. ஒரு மைனாரிட்டி அரசை வைச்சுக்கிட்டு பெரியவர் நரசிம்மராவ் அஞ்சு வருஷத்தை கம்ப்ளீட் பண்ணியிருக்கார் என்றால் அது மிகப்பெரிய விஷயம். அதில்லாம பொருளாதார ரீதியாக உலக அளவில் நம்ம இநதியா பேசப்படுகிற அளவுக்கு கொண்ர்ந்து இருக்காங்க. இது மிகப்பெரிய சாதனை.
3. உலகில் எப்பவும் இன்பமாக இருப்பவர் யார்? பாண்டியன், திண்டுக்கல்.
மூன்று பேர். ஞானி, குழந்தை. பைத்தியக்காரன். ஞாநி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதது. பைத்தியக்காரன், எதுவும் அறியாத, எதுவும் தெரியாத ரெண்டுங்கெட்டான்.
4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி என்ன திட்டமிட்டு இருக்கிறீர்கள்? புவனேஸ்வரி, மதுராந்தகம்.
நான் திட்டமெல்லாம் வைக்கமாட்டேன். என்னோட இமேஜ், என்னோட பணம், என்னோட அந்தஸ்து அது இது எல்லாம் என்னுடைய பிள்ளைங்களை பாதிக்கக்கூடாது. அவங்கங்க சொந்தக் கால்களில் நிற்கிற மாதிரி செய்யணும். என்னோட ஐடியாவை அவங்க மேலே திணிக்கக்கூடாது. அதான் பார்த்திட்டிருக்கேன்.
5. உங்களுடைய பலம் எது? பலகீனம் எது? மண்ணாடி கோபி, எர்ணாவூர்
என்னுடைய பலம்...... உண்மை. பலகீனம் கோபம்,
6. அம்மா, தெய்வம் இதில் யாருக்கு முக்கியத்துவம் தருவீர்கள்? திவாரி, சென்னை
கண்டிப்பாக அம்மாவிற்குத்தான்.
7. காந்தியடிகள் பற்றி உங்களது கருத்து? உலகரத்தினம், தேவிப்பட்டினம்
உண்மையின் வடிவம். மிகப்பெரிய யோகி.
8. அடுத்த பிறவியில் எங்கு, யாராக பிறக்க விரும்புகிறீர்கள்? சூர்யாதேவி, குன்னுர்
இந்தப்பிறவிதான் கடைசிப்பிறவியாக இருக்கணும்னு நினைக்கிறேன். சத்தியமா.... ஐய்யயோ.. அடுத்த பிறவியே வேண்டாம்!
9. என்.டி.ஆர் மனைவி லட்சுமிபார்வதியை நீங்கள் விமர்சனம் செய்தது பற்றி ? கோகிலா, விஜயவாடா
பாருங்க... நான் அங்க் சொன்னது.. ஒரு பேராசை கொண்ட பெண்ணால நாட்டையும் வீட்டையும் எப்படிக் கெடுக்க முடியும்.. அப்படித்தான் சொன்னேன். அங்க பேராசைய விட்டுட்டாங்க... ஒரு 'பெண்ணால' என்கிற வார்த்தையை மட்டும் பிடிச்சுக்கிட்டாங்க. துஷ்டசக்தின்னு சொல்றது பேராசை, பழியுணர்ச்சி, சுயநல்ம். இதெல்லாம் துஷ்டசக்திகள்தான். சிலபேர் இத வெச்சுக்கிட்டு நான் பெண்களை மதிக்கலை, நான் பெண்களுக்கு எதிரானவன்னு செர்ல்லிக்கிட்டு இருக்காங்க. நான் பெண்கள் மேல எவ்வளவு மதிப்பு மரியாததை வெச்சுருக்கேன் என்பது அந்த ஆண்டவனுக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்.
10. ஆன்மீகம், அரசியல் ஒப்பிடுக. ரஜினி பாபு, கடலுர்
அது ஒப்பிடவே முடியாதுங்க. அது ஒப்பிடவும் கூடாது. ஏன்னா இரண்டுமே பாம்பும் கீரியும் மாதிரி. எதிர்எதிர் துருவம்.
11. எளிமை, பணிவு, அடக்கம் யாரிடமிருந்து இந்த தாரக மந்திரத்தை கற்றுக்கொண்டீர்கள்? குலாம் முகமது, நாகை.
சிவாஜி ராவ்கிட்டேயிருந்து.
12. பொது நிகழ்ச்சிகளில் தாடியுடனும் மீசையில்லாமலும் வித்தியாசமாக தோன்றுகிறீர்களே.. உங்களது இமேஜ் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? லெனின், நெல்லை
இல்லைங்க... வெளித்தோற்றத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் என்னை நேசிக்கிறது என்னுடைய உள்ளத்தை என்று எனக்கு நல்லாத் தெரியும்.
தொடரும்....
தொகுப்பு : ஜெ. ராம்கி
|
|
|
 |